பரீட்சை மண்டபங்களில் ஹிஜாப் நீக்கம் ; பரீட்சை ஆணையாளரிடம் முறைப்பாடு

0 802

தற்­போது நடை­பெற்று வரும் க.பொ.த உயர்­தரப் பரீட்சை எழுதும் முஸ்லிம் மாண­விகள் தாம் அணிந்து சென்ற பர்­தாவை கழற்­றி­விட்டு பரீட்சை எழு­தும்­படி சில பரீட்சை நிலை­யங்­களில் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக பரீட்சை ஆணை­யாளர் சனத் பூஜி­த­வுக்கு புகார் செய்­யப்­பட்­டுள்­ளது.

கண்டி விவே­கா­னந்தா தமிழ் வித்­தி­யா­லயம் மற்றும் மன்னார் பெரிய கண்டல் முருங்கன் தமிழ் மகா வித்­தி­யா­லயம் என்பனவற்றின் க.பொ.த. உயர்­தர பரீட்சை மண்­ட­பங்­களில் கடந்த மூன்று தினங்­க­ளாக முஸ்லிம் மாண­விகள் பர்­தாவைக் கழற்­றி­விட்டு பரீட்சை எழு­து­மாறு பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் பரீட்சை ஆணை­யாளர் சனத் பூஜி­தவைத் தொடர்­பு­கொண்டு முறைப்­பாடு செய்­துள்ளார்.

‘காது­களை மூடி ஆடை அணிந்து பரீட்சை எழு­து­வது மாத்­தி­ரமே தடை செய்­யப்­பட்­டுள்­ளது. காதுகள் வெளியே தெரியும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழு­து­வ­தற்கு எது­வித தடையும் விதிக்­க­வில்லை. பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்கள் இவ்­வாறு பர்­தாவைக் கழற்­றி­விட்டு பரீட்சை எழு­தும்­படி உத்­த­ர­வி­ட­மு­டி­யாது. குறிப்­பிட்ட சம்­ப­வங்கள் தொடர்பில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்’ என பரீட்சை ஆணை­யாளர் சனத் பூஜித ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸி­லிடம் தெரி­வித்தார்.

இதே­வேளை, அண்­மையில் நடை­பெற்ற ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் போது கல்­எலிய அலிகார் மகா வித்­தி­யா­ல­யத்­திலும் மாணவிகள் பர்தாவைக் கழற்றி விட்டு பரீட்சை எழுதுமாறு பரீட்சை மேற்பார்வையாளர்களினால் பணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

– ஏ.ஆர்.ஏ.பரீல் / vidivelli.lk

Leave A Reply

Your email address will not be published.