சவேந்திர சில்வாவின் நிய­மனம் குறித்து அமெ­ரிக்கா கவலை

0 758

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. சவேந்­திர சில்­வா­விற்கு எதி­ரான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் நம்­ப­கத்­தன்மை வாய்ந்­தவை என்ற நிலையில், அவ­ரது இந்­நி­ய­மனம் இலங்கை மீதான சர்­வ­தே­சத்தின் நன்­ம­திப்­பையும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விப்­ப­தற்­கான இலங்­கையின் உறு­திப்­பா­டு­க­ளையும் வலு­வற்­ற­தாக்­கு­கி­றது என்று அமெ­ரிக்கா தெரி­வித்­தி­ருக்­கி­றது.

இரா­ணு­வத்தின் அலு­வ­லகப் பிர­தா­னி­யாகக் கட­மை­யாற்­றிய லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நேற்று திங்­கட்­கி­ழமை இரா­ணுவத் தள­ப­தி­யாகப் பதவி உயர்த்­தப்­பட்டார். இந்­நி­லையில் சவேந்­திர சில்­வாவின் நிய­மனம் தொடர்பில் இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கா மிகுந்த கவ­லை­ய­டைந்­துள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சபை­யி­னாலும், ஏனைய அமைப்­புக்­க­ளாலும் சவேந்­திர சில்­வா­விற்கு எதி­ராக ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்ட மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் பார­தூ­ர­மா­னதும், நம்­ப­கத்­தன்மை வாய்ந்­த­வையும் ஆகும்.
குறிப்­பாக நல்­லி­ணக்கம் மற்றும் சமூக ஒற்­று­மையின் தேவை மிகவும் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகக் காணப்­படும் இத்­த­ரு­ணத்தில், சவேந்­திர சில்­வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Vidivelli

Leave A Reply

Your email address will not be published.