இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா

0 820

இலங்­கையின் 23 ஆவது இரா­ணுவத் தள­ப­தி­யாக மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நேற்று நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

22 ஆவது இரா­ணு­வத்­த­ள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­கவின் பத­விக்­காலம் கடந்த 18 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்­துள்ள நிலையில் இவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 22 ஆவது இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக இது­வரை காலம் கட­மை­யாற்­றிய லெப்­டினன்ட் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்­கவின் பத­விக்­காலம் கடந்த 18 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்­துள்ள நிலையில் புதிய இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நேற்று நிய­மிக்­கப்­பட்டார். இவர் இலங்கை இரா­ணு­வத்தின் 23 ஆவது இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். கெடெட் அதி­கா­ரி­யாக 1984ஆம் ஆண்டு இலங்கை இரா­ணு­வத்தில் சேர்ந்த ஷவேந்­திர சில்வா, இரா­ணுவ தள­பதி பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் இரா­ணுவ பணிக்­குழாம் பிர­தா­னி­யாக கடமை புரிந்தார்.

இந்­நி­லையில் அடுத்த நிலையில் இரா­ணுவ தள­ப­திக்­கான பரிந்­து­ரையில் இவ­ரது பெயர் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில்  அது குறித்த சில எதிர்ப்­பு­களும் எழுந்­தி­ருந்­தன. இந்­நி­லையில்  ஜனா­தி­பதி, சவேந்­திர சில்­வா­வையே நிய­மித்­துள்ளார் என்­பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் பிரசன்னமா கியிருந்தனர்.

Vidivellihi

Leave A Reply

Your email address will not be published.