சூடானில் இடைக்­கால அர­சாங்­கத்தை அமைக்க உடன்­ப­டிக்கை கைச்­சாத்து

0 949

சூடானின் பிர­தான எதிர்க்­கட்சி கூட்­ட­ணியும் ஆளும் இரா­ணுவக் குழுவும், சிவி­லியன் தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தை மாறு­வ­தற்கு வழி வகுக்­கின்ற, ஓர் இறுதி அதி­காரப் பகிர்வு ஒப்­பந்­தத்தில், கடந்த சனிக்­கி­ழமை (17.08.2019) முறை­யாக கையெ­ழுத்­திட்­டுள்­ளன. 

வெகு­ஜன ஆர்ப்­பாட்­டங்­களை அடுத்து நீண்­ட­கால தலைவர் ஜனா­தி­பதி உமர் அல்-­பஷீர் தூக்­கி­யெ­றி­யப்­பட்­டதைத் தொடர்ந்து, தலை­நகர் கார்ட்­டூமில் சனிக்­கி­ழமை கையெ­ழுத்­தி­டப்­பட்ட இம்­முக்­கிய ஒப்­பந்­த­மா­னது, நீண்ட கால பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு பின்­னரே சாத்­தி­ய­மா­னது.

இடைக்­கால இரா­ணுவ கவுன்­சிலின் (Transitional Military Council – TMC) துணைத் தலைவர் முஹம்மத் ஹம்தான் டகலோ மற்றும் சுதந்­திரம் மற்றும் மாற்­றத்­திற்­கான கூட்­டணி (Alliance for Freedom and Change) என்ற பல்­த­ரப்பு கூட்­ட­மைப்பு குழுவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அஹ்மத் அல்-­ரபி ஆகி­யோ­ருக்கு இடையே இவ்­வொப்­பந்தம் கைச்­சாத்­தா­னது.

இந்­நி­கழ்வில் எத்­தி­யோப்­பிய பிர­தமர் அபி அஹ்மத், தென் சூடான் ஜனா­தி­பதி சால்வா கீர் உள்­ளிட்ட பல நாடு­களைச் சேர்ந்த அரச தலை­வர்கள், பிர­த­மர்கள் மற்றும் பிர­மு­கர்கள் கலந்து கொண்­டனர்.

ஆபி­ரிக்க ஒன்­றியம் மற்றும் எத்­தி­யோப்­பியா ஆகிய தரப்­புக்­களின் மத்­தி­யஸ்­தத்தில் இடம்­பெற்ற இந்த ஒப்­பந்­தத்தை சூடானின் இரு தரப்­பி­னரும் வர­வேற்­றுள்­ளனர்.

இவ்­வொப்­பந்தம் என்ன மாதி­ரி­யா­னது?

இந்த அதி­காரப் பகிர்வு ஒப்­பந்­த­மா­னது, இரா­ணுவ மற்றும் சிவில் பிர­தி­நி­தி­களைக் கொண்ட ஒன்­றி­ணைந்த இறை­யாண்மை சபையை உரு­வாக்­கு­கி­றது. இக்­குழு தேர்­தல்கள் நடை­பெறும் வரை மூன்று ஆண்­டு­க­ளுக்கு சற்று அதி­க­மான காலம் ஆட்சி செய்யும்.

இந்த ஒப்­பந்­தத்தின் கீழ், ஒரு இரா­ணுவத் தலைவர் முதல் 21 மாதங்­க­ளுக்கு 11 உறுப்­பி­னர்­களைக் கொண்ட இச்­ச­பைக்குத் தலைமை தாங்­குவார். அடுத்த 18 மாதங்­க­ளுக்கு ஒரு சிவில் தலைவர் நிய­மிக்­கப்­ப­டுவார். அத்­தோடு, செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் ஒரு சட்­ட­மன்­றத்தால் நிய­மிக்­கப்­பட்ட ஒரு அமைச்­ச­ர­வையும் நிறு­வப்­படும்.

சூடானின் இறை­யாண்மை சபையில் இடைக்­கால இரா­ணுவ கவுன்­சிலின் தலைவர் அப்துல் பத்தாஹ் அல்-­புர்ஹான், துணைத் தலைவர் டகலோ மற்றும் லெப்­டினன்ட் ஜெனரல் யாசிர் அல்-­அட்டா ஆகியோர் அடங்­குவர் என்று இடைக்­கால இரா­ணுவ சபையின் பேச்­சாளர் ஸ்கை நியூஸ் அரே­பி­யா­விடம் தெரி­வித்­துள்ளார்.

அதி­காரப் பகிர்வு ஒப்­பந்­தத்தின் கீழ், இறை­யாண்மை சபையில் இடைக்­கால இரா­ணுவ கவுன்சில் தேர்ந்­தெ­டுக்கும் ஐந்து உறுப்­பி­னர்­களும், பிர­தான எதிர்க்­கட்சி கூட்­ட­ணியால் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் ஐந்து உறுப்­பி­னர்­களும், இரு தரப்­பி­னரும் ஒப்புக் கொண்ட ஒரு உறுப்­பி­னரும் உள்­ள­டங்­குவர்.
இச்­ச­பையில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள இரா­ணு­வத்தின் மீத­முள்ள இரண்டு உறுப்­பி­னர்­களும் பின்னர் பெய­ரி­டப்­ப­டுவர் என்று ஷம்­ஸுத்தீன் கபாஷி தெரி­வித்­துள்ளார்.

பாது­காப்புப் படை­யி­னரால் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது நடத்­தப்­பட்ட ஒடுக்­கு­முறை குறித்து சுயா­தீன விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­கான குழு­வொன்றை நிறு­வு­வதும் இந்த ஒப்­பந்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூன் மாதத்தில், கார்ட்­டூமில் உள்ள இரா­ணுவத் தலை­மை­ய­கத்­திற்கு வெளியே ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் பிர­தான போராட்ட தளத்­தி­லி­ருந்து, அவர்­களை வன்­மு­றைத்­த­ன­மாக படை­யினர் சித­ற­டித்­தனர். இதனால், பல பொது மக்கள் கொல்­லப்­பட்­டனர்.

மாறு­பட்ட எதிர்­வி­னைகள்

இந்த ஒப்­பந்தம் குறித்து மாறு­பட்ட எதிர்­வி­னைகள் இருப்­ப­தாக கார்ட்­டூமில் இருந்து அறிக்­கை­யிடும் அல்­ஜ­சீ­ராவின் ஹிபா மோர்கன் தெரி­வித்­துள்ளார்.
“ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட இடத்தில் மக்கள் உற்­சா­க­மாக உள்­ளனர், இந்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்பே அவர்கள் கோஷ­மிட்டுக் கொண்­டி­ருந்­தனர். இறு­தியில் ஒரு சிவில் அர­சாங்கம் தமக்கு கிடைத்­தி­ருப்­ப­தாக அவர்கள் கூறு­கி­றார்கள்,” என்று ஹிபா மோர்கன் தெரி­விக்­கிறார்.

“ஆனால், தெருக்­களில் மக்கள் எச்­ச­ரிக்­கை­யு­ட­னான நம்­பிக்­கை­யுடன் இருப்­ப­தாகக் கூறு­கி­றார்கள். இரா­ணுவக் கவுன்சில் ஒப்­பந்­தத்தின் சில உட்­பி­ரி­வு­களை அமுல்­ப­டுத்­து­வதை தாம­தப்­ப­டுத்­தலாம் என்றும், எனவே அவர்கள் நீண்ட காலம் ஆட்­சியைப் பிடிப்­பார்கள், அல்­லது பொது­மக்­களை அதி­கா­ரத்­தி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான ஒரு வழியைக் கண்­டு­பி­டிப்­பார்கள் என்றும், தேர்­தல்கள் நடை­பெறும் வரை அர­சாங்­கத்தின் கட்­டுப்­பாட்டை தொடர்ந்து வைத்­தி­ருப்­பார்கள் என்றும் மக்கள் கவ­லைப்­ப­டு­கி­றார்கள்.” என்று அவர் மேலும் தெரி­விக்­கிறார்.

இதற்­கி­டையில், கொண்­டாட்­டங்­களில் பங்­கேற்க சூடானின் மாகா­ணங்­க­ளி­லி­ருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் புகை­யி­ர­தங்­களில் வந்­துள்­ளனர். கார்ட்­டூமின் முக்­கிய பூங்­காக்­களில் பெரிய ஒன்­று­கூ­டல்­களும் இடம்­பெற்­றன.
“சூடானால் இப்­போது முன்­னேற முடியும் என்று நாங்கள் நம்­பு­கிறோம். எம் நாட்டைப் பற்றி நாம் பெரு­மைப்­பட விரும்­பு­கிறோம்” என்று ஸைதா கலீஃபா கூறு­கிறார். கடந்த ஆண்டு டிசம்­பரில் போராட்­டங்கள் தொடங்­கிய நக­ர­மான அட்­பா­ரா­வி­லி­ருந்து இரவு முழு­வதும் புகை­யி­ர­தத்தில் பயணம் செய்து வந்­த­டைந்­துள்ளார் இவர்.

“துப்­பாக்­கிகள் இப்­போது அமை­தி­யாக இருக்க வேண்டும். அமை­தி­யையும் சுதந்­தி­ரத்­தையும் பெற, இக்­கு­ழப்­பத்­தி­லி­ருந்து நாட்டை நாம் விடு­விக்க வேண்டும்.” என்று அவர் கூறு­கிறார்.

பட்டப் படிப்­பு­க­ளுக்­கான தோஹா நிறு­வ­னத்தின் பேரா­சி­ரியர் அப்துல் வஹ்ஹாப் அல்­எஃ­பென்தி, இந்த ஒப்­பந்­தத்தை “நேர்­ம­றை­யான செய்தி” என்று குறிப்­பிட்­டுள்ளார். இது “கொண்­டா­டப்­பட வேண்டும்”. ஆனால் சிவில் அர­சாங்கம், எதிர்­கா­லத்தில் பெரிய சவால்­களை எதிர்­கொள்ளும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

“மக்கள் இந்த தரு­ணத்­திற்­காக நீண்ட கால­மாக காத்­தி­ருக்­கி­றார்கள். மறுநாள் காலை, பிர­தமர் பத­வியில் அம­ரும்­போது, விட­யங்கள் மாற்றம் கண்­டு­விடும் என்று அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள்.” என்று அப்துல் வஹ்ஹாப் அல்­எஃ­பென்தி தெரி­வித்­துள்ளார்.

பல வாரங்­க­ளாக பதற்றமான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்குப் பிறகு, சூடானின் இடைக்­கால இரா­ணுவ கவுன்சில் மற்றும் எதிர்­த­ரப்புத் தலை­வர்கள் சர்வதேச அழுத்தத்தின் காரணமாகவும், மற்றும் அரசியல் நெருக்கடி உள்நாட்டுப் போரைத் தூண்டக்கூடும் என்ற கவலை காரணமாகவும், இந்த மாத தொடக்கத்தில் ஒரு பூர்வாங்க உடன்பாட்டுக்கு வந்தனர்.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி எட்டப்பட்ட அரசியலமைப்பு அறிவிப்பு ஒப்பந்தமானது, 30 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பின்னர் இவ்வருட ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, உமர் அல்பஷீருக்கு எதிரான 08 மாத கால ஆர்ப்பாட்ட எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இதை தங்கள் “புரட்சி”யின் வெற்றியாகக் கொண்டாடுகின்றனர். அதேவேளை, உள்நாட்டுப் போரைத் தவிர்த்ததற்கான பாராட்டை இராணுவ ஜெனரல்கள் பெறுகின்றனர்.

தமி­ழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்
நன்றி: அல்­ஜ­ஸீரா

vidivelli

Leave A Reply

Your email address will not be published.