லசந்த, வசீம் கொலை உள்­ளிட்ட 6 முக்­கிய சம்­ப­வங்கள் குறித்து அறிக்கை சமர்ப்­பிக்­குக

சட்டமா அதிபரின் கடித்ததையடுத்து புலனாய்வுப் பிரிவிற்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவு

0 730

லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை, வசீம் தாஜுதீன் கொலை உள்­ளிட்ட 6 சம்­ப­வங்கள் தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை அறிக்­கை­யினை குற்­றப்­பு­லனாய்வு பிரி­விடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரி­யுள்ளார்.
மேலும் அந்த அறிக்­கை­களில் கட்­டாயம் இடம்­பெற வேண்­டிய 11 விட­யங்கள் குறித்தும் அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார்.

இந்த அறி­வித்தல் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வழங்­கப்­பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவண் குண­சே­கர தெரி­வித்தார். குற்றப் புல­னாய்வுப் பிரி­வினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் பிர­தான ஐந்து வழக்கு விசா­ர­ணைகள் தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ரணை அறிக்கை சமர்­பிக்­கு­மாறு பொலிஸ் தலை­மை­யகம் குற்­றப்­பு­ல­னாய்­விற்கு அறி­வித்தல் விடுத்­துள்­ளது.

சட்­டமா அதிபர் தம்­புல டி லிவே­ரா­வினால் கடந்த வியா­ழக்­கி­ழமை பதில் பொலிஸ்மா அதிபர் சந்­தன விக்­கி­ர­ம­ரத்­ன­விற்கு அனுப்­பப்­பட்ட கடிதம் தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பதில் பொலிஸ் மா அதிபர் இந்த அறி­வித்தல் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் சன்டே லீடர் பத்­தி­ரிகை ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படு­கொலை , றகர் வீரர் வசீம் தாஜு­தீனின் கொலை, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல், மூதூரில் தொண்டு நிறு­வன ஊழி­யர்கள் 17 பேர் கொலை மற்றும் 11 மாண­வர்­களை கடத்திச் சென்று காணா­ம­லாக்­கி­யமை தொடர்­பான விசா­ரணை குறித்த அறிக்­கை­க­ளையே சட்­ட­மா­திபர் பதில் பொலிஸ்­மா அ­தி­ப­ரிடம் கோரி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் இந்த ஐந்து வழக்கு விசா­ர­ணை­க­ளுடன் மேலும் ஒரு வழக்­கான ஊட­க­வி­ய­லாளர் பிர­கதீத் எக்­னெ­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் குற்றப் புல­னாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதி­ப­ரிடம் அறிக்கை கோரப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய இந்த 6 சம்­ப­வங்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் குறித்து தனித்­த­னி­யாக அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு பதில் பொலிஸ்­மா­திபர் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு அறி­வித்­துள்ளார். அத்­துடன் விசா­ர­ணைகள் தொடர்பில் தக­வல்­களை தமக்கு அறிக்­கைப்­ப­டுத்தும் போது 11 விட­யங்கள் கட்­ட­யா­மாக உள்­ள­டக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
அதா­வது, விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க ஆலோ­சனை எப்­போது கிடைக்கப் பெற்­றது, விசா­ர­ணை­களை ஆரம்­பித்த தினம், விசா­ர­ணை­களின் தற்­போ­தைய நிலை, விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்த தக­வல்கள் ,சந்­தேக நபர்கள் மற்றும் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களின் விபரம் மற்றும் அவர்­களின் சொத்து என்­பன அறிக்­கையில் காணப்­பட வேண்டும்.

மேலும் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­திய தினம், நீதி­மன்றம் மற்றும் வழக்கு இலக்கம், விசா­ர­ணைகள் தொடர்பில் நீதிவான் நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள ஆணைகள் மற்றும் அவை தொடர்பில் எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களின் தற்­போ­தைய நிலை, சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய அனைத்து சந்­தேக நபர்­களும் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளார்­களா? அவர்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­களா அல்­லது மேலும் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­டவோ அடை­யாளம் காணப்­ப­டவோ உள்­ள­னரா?

குறித்த சந்­தேக நப­ருக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணை­களை மேற்­கொள்ள போது­ம­ன­ளவு சாட்­சி­யங்கள் இருக்­கின்­றதா? தொடர்ந்தும் மேற்­கொள்ள வேண்­டிய சாட்­சி­யங்கள் மற்றும் அவற்றின் மீதான விசா­ர­ணைகள் இருந்தால் அவை என்ன? விசா­ர­ணைகள் தொடர்பில் சட்­டமா அதி­ப­ருக்கு அறிக்கை சமர்ப்­பித்து ஆலோ­சனை பெறப்­பட்­டுள்­ளதா? அவ்­வா­றெனில் அந்த ஆலோ­ச­னை­க­ளி­ன் பிர­காரம் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா? இந்த விசா­ர­ணைகள் தொடர்பில் தொடர்ந்தும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றால் அது தொடர்பில் சாட்சி விப­ரங்கள் மற்றும், சட்­டமா அதி­ப­ரினால் ஆலோசனை வழங்­கப்­ப­டா­தி­ருந்தால் அந்த விடயம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சட்ட நட­வ­டிக்கைகள் குறித்தும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்டும்.

விசாரணைகள் இது வரைக்கும் நிறைவு பெறாமல் இருக்குமாயின் அதற்கான காரணம் என்ன? விசாரணைகளை நிறைவு செய்வதற்காக எதிர்பார்த்திருக்கும் கால எல்லை யாது? என்பன தொடர்பிலும் முழுமையான விபரங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vidvelli

Leave A Reply

Your email address will not be published.