ஊழல் மோசடி ஆட்சியா? தேசிய ஐக்கிய ஆட்சியா?

மக்களே தீர்மானிக்க வேண்டும் என்கிறார் 'தேசிய மக்கள் சக்தி' யின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக

0 709

ஊழல், மோச­டிகள் நிறைந்த காலா­வ­தி­யான ஆட்­சியை மீண்டும் உரு­வாக்க வேண்­டுமா அல்­லது சகல மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய ஐக்­கி­யத்­துடன் கூடிய புதிய ஆட்­சியை உரு­வாக்க வேண்­டுமா என்­பதை தீர்­மா­னிக்கும் முக்­கி­ய­மான சூழலில் மக்கள் உள்­ளனர். இப்­போது மக்­களே தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் எம்மை நம்பி எம்­மிடம் ஆட்­சியை ஒப்­ப­டைக்கும் மக்­களை ஒரு­போதும் ஏமாற்­ற­மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் அனு­ர­கு­மார திசா­நா­யக தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மையில் தேசிய மக்கள் சக்­தியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்கும் மக்கள் கூட்டம் நேற்று காலி­மு­கத்­தி­டலில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்ட ஜே.வி.பி. யின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக உரை­யாற்றும் போது இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

தேசிய மக்கள் சக்­தியின் சார்பில் என்னை தலை­மை­யேற்க தெரிவு செய்­த­மைக்­காக முதலில் அனை­வ­ருக்கும் நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். அது­மட்டும் அல்­லாது என் மீதான நம்­பிக்­கையை வைத்து என்னை தெரி­வு­செய்­த­மைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்­திக்கும் இந்த நாட்டு மக்­க­ளுக்கும் எப்­போதும் நன்­றி­யு­டை­ய­வ­னா­கவும், நம்­பிக்­கையை காப்­பாற்றும் நப­ரா­கவும் இருப்பேன் என உறு­தி­மொழி வழங்­கு­கின்றேன்.

நாம் 30 ஆண்­டுகள் அர­சியல் நீரோட்­டத்தில் செயற்­பட்டு வரு­கின்றோம். சவால்கள், அழுத்­தங்கள், தோல்­விகள், வெற்­றிகள், மகிழ்ச்சி என அனைத்­தையும் நாம் பார்த்­துள்ளோம். சாதா­ரண அடி­மட்ட மக்கள் முதல்­கொண்டு உயர்­மட்ட சமூகம் வரையில் மக்­களின் உண்­மை­யான மன­நிலை என்ன என்­பதை அறிந்­து­கொண்­டுள்ளோம். இந்த உணர்­வு­களின் மூலம் வெற்­றியின் எல்­லைக்கே செல்வோம். இந்த ஜனா­தி­பதி தேர்தல் மிகவும் முக்­கி­ய­மான ஒரு கட்­டத்தில் உள்­ளது.

இதில் இரண்டு தெரி­வுகள் மக்­க­ளுக்கு உள்­ளன. ஒன்று பழைய மோச­மான ஊழல்­வாத ஆட்­சியை கொண்டு செல்லும் வழி. மற்­றை­யது மக்கள் மகிழ்ச்­சி­யாக, ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய வழியும் உள்­ளது. காலா­வ­தி­யான மோச­மான ஆட்சி வேண்­டுமா அல்­லது மக்கள் நம்­பிக்­கை­யுடன் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய வழி வேண்­டுமா என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்­டிய முக்­கிய சந்­தியில் உள்­ளீர்கள்.

இந்த நாட்­டினை எவ்­வாறு கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்ற கேள்வி அனை­வ­ருக்கும் உள்­ளது. முதலில் மோச­மான அர­சி­யலை இல்­லாது செய்ய வேண்டும். நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் நோக்கம் கொண்ட தொழி­லாளர், அதனை ஏற்­று­கொள்ளும் மக்கள் கூட்­டத்தை கொண்டே முன்­னெ­டுக்க வேண்டும். இதில் முதல் கட்டம் எங்­கி­ருந்து ஆரம்­பிக்க வேண்டும், இந்த நாட்டில் அர­சியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்­கு­முறை என்­ப­வற்றை கையாளும் நபர்­களின் கைகளில் இன்று அர­சியல் அதி­காரம் உள்­ளது. இவற்றை மாற்­றி­ய­மைக்க வேண்டும். இந்த நாச­கார ஊழல் மிக்க அர­சி­ய­லுக்கு அப்பால் தூய்­மை­யான உண்­மை­யான மக்கள் நல அர­சி­யலை உரு­வாக்­குவோம் என்ற வாக்­கு­று­தியை இதில் நாம் முன்­வைக்­கின்றோம்.

இந்த நாட்டின் வளங்கள் அனைத்­துமே கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. புதிய பொரு­ளா­தார பயணம் ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். பொரு­ளா­தார கொள்­கையில் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்டும். அதற்­கான முழு­மை­யான பொறுப்பை நாம் கையில் எடுப்போம். வியர்வை சிந்தும் தொழி­லாளர் சமூ­கத்­துக்கு பணம் மட்டும் அல்ல. அவர்­களின் வாழ்க்­கையை, அவர்­க­ளுக்­கான கௌர­வத்தை கொடுக்க வேண்டும். ஆகவே அவர்­க­ளுக்­கான சமூக சூழலை உரு­வாக்கிக் கொள்­ளக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கிக்­கொ­டுப்போம்.

சமூ­க­மாக இன்று நாடு பிள­வு­பட்­டுள்­ளது. சமூ­கங்­களை பிரித்து வைத்­துள்­ளனர். பிள­வு­பட்ட சமூ­கத்தை கொண்டு நாட்­டினை முன்­னோக்கி கொண்­டு­செல்ல முடி­யாது. ஜாதி, மதம், இன பிள­வு­களில் இருந்து விடு­பட்டு ஐக்­கிய நாட்­டினை உரு­வாக்கும் சூழலை நாம் உரு­வாக்கிக் கொடுப்போம். இன்று மக்கள் பாது­காப்பு குறித்த அச்­சமும், சந்­தே­கமும் உரு­வா­கி­யுள்­ளன. இது ஒரு சமூகம் மீது இன்­னொரு சமூகம் கோபத்­து­டனும், சந்­தே­கத்­து­டனும் பார்க்கும் நேரத்­தி­லேயே உரு­வாகும். அவ்­வா­றான நிலையில் இருந்து விடு­பட வேண்டும். பயங்­க­ர­வாதம் தீவி­ர­வாதம் என்­ப­வற்­றுக்கு அப்பால் சமூ­கத்தின் சகல கலா­சார, மொழி உரி­மை­களை பாது­காக்க சமூக ஒற்­று­மையை சக­ல­ருக்கும் கொடுப்­பதன் மூலம் மட்­டுமே தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும். தேசிய ஒற்­று­மையை உரு­வாக்கும் சகல நட­வ­டி­க்கை­யையும் முன்­னெ­டுப்போம். அத்­துடன் தனி­நபர் சுதந்­திரம் மிகவும் முக்­கி­ய­மான ஒன்­றாகும். அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நாட்டின் சூழலை பாது­காக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. இயற்கை அழி­வுகள் ஒரு­புறம் என்றால் இன்­னொரு புறம் உல­கத்தின் குப்­பை­களை கொட்டும் குப்­பை­மே­டாகும், விஷம் கலந்த உண­வு­களும் உரு­வாகும் மோச­மான நாடாக இலங்­கையை அர­சியல் வாதிகள் மாற்­றி­யுள்­ளனர். இதில் இருந்து விடு­பட வேண்டும் என்றால் முதலில் தூய்­மை­யான கொள்கை ஒன்­றினை உரு­வாக்­கிக்­கொள்ள வேண்டும்.

எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்­கான உறு­தி­யான நாட்­டி­னையும் எமது இளம் சமு­தா­யத்­தி­ன­ருக்கு நிரு­வா­கத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்­பாவி மக்கள் வேத­னை­யுடன், வருத்­தத்­து­டனும் வாழ்­கின்­றனர். ஆனால் இந்த வேத­னை­களால் மாத்­திரம் மாற்­றத்தை உரு­வாக்­கி­விட முடி­யாது. அத­னையும் தாண்டி உறு­தி­யான மன நிலை­யுடன் மக்கள் கூட்­டத்தை உரு­வாக்க வேண்டும். அதற்­கான நம்­பிக்­கையை இன்று காலி­மு­கத்­தி­டலில் கூடி­யுள்ள மக்கள் கூட்­டத்தின் மூல­மாக எமக்கு கூறி­யுள்­ளனர். ஆகவே இந்த நாட்­டினை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என நினைக்கும் போராடும் சகல மக்­க­ளும் எம்­முடன் இணைந்து போராட வாருங்கள். எம்மை நம்பி நீங்கள் எமக்கு கொடுக்கும் ஆத­ரவை என்றும் நாம் மாற்­றி­ய­மைக்க மாட்டோம். எம்மை நம்பும் மக்­களை ஒரு­போதும் ஏமாற்­ற­மாட்டோம். நம் அனை­வ­ரதும் நோக்கம் ஒன்­றாக உள்­ளது. பொது­மக்­களின் நோக்­கமும் எமது நோக்­கமும் ஒன்­றா­கவே உள்­ளது. இந்த நாட்­டினை உல­கத்தில் சிறந்த நாடாக மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற பிர­தான நோக்­க­மா­கவே நாம் அனை­வரும் போராடி வரு­கின்றோம். ஆகவே அதற்­காக நாம் அனை­வரும் போரா­டுவோம்.

இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம். அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அழைப்புவிடுவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆர்.யசி, இ. ஹஷான்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.