மாணவ சமூகத்தின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் பகிடிவதை

0 891

நாட்டின் உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளான பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இடம்பெறும் பகி­டி­வதை பல்­க­லைக்­க­ழ­கங்­களின் நிர்­வா­கங்­க­ளுக்கும், உயர்­கல்வி அமைச்­சுக்கும் பாரிய சவா­லாக மாறி­யுள்­ளது.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பகி­டி­வதை முதன்­முதல் புதிய மாண­வர்­களுடன் அறி­மு­க­மாக்கிக் கொள்ளும் நோக்­குடன் சிநே­க­பூர்­வ­மா­கவே ஆரம்­பிக்­கப்­பட்­டது. இவ்­வா­றாக ஆரம்­பத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட பகி­டி­வதை ஒரு புதிய சந்­திப்­பிற்­கான அஸ்­தி­வா­ர­மா­கவே அமைந்­தி­ருந்­தது. என்­றாலும் கடந்த காலங்­களில் அது புதிய மாண­வர்­களை துன்­பு­றுத்­து­வ­தாக மாற்றம் கண்­டு­விட்­டது.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பகி­டி­வதை என்­பது புதிய மாண­வர்­களை துன்­பு­றுத்­து­வ­தாக மட்­டு­மல்­லாது அண்­மைக்­கா­ல­மாக பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளா­கவும் மாறி­விட்­டது. புதி­தாக பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனு­மதி பெறும் மாண­வர்கள் மனித இயல்­பற்ற வகையில் கொடு­மை­க­ளுக்கும் உள்­ளாக்­கப்­பட்டு வரு­கி­றார்கள்.

இவ்­வாறு பகி­டி­வதை என்ற பெயரில் மிகவும் மோச­மாக பாலியல் துன்­பு­றுத்­தல்­களை புதிய மாண­வர்கள் மீது மேற்­கொண்ட றுகுணு பல்­க­லைக்­க­ழ­கத்தின் மாணவர் இயக்கத் தலைவர் உட்­பட சிரேஷ்ட மாண­வர்கள் 19 பேர் நீதியின் முன் நிறுத்­தப்­பட்­டார்கள். முதலாம் வருட பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் மீது மேற்­கொண்ட மிகவும் மோச­மான பகி­டி­வதை கார­ண­மாக அவர்கள் 19 பேரையும் மாத்­தறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எதிர்­வரும் 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்ளார்.
பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு அனு­மதி பெற்று புதி­தாக வருகை தரும் மாண­வர்­களை இவ்­வாறு மனிதப் பண்­பற்ற முறையில் வர­வேற்­ப­தற்கு எவ­ருக்கும் உரி­மை­யில்லை.

றுகுணு பல்­க­லைக்­க­ழக முதலாம் வருட மாணவன் தர்ச உத­யங்க சிரேஷ்ட மாண­வர்கள் தன்னை பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாக்கி தாக்கி வதை செய்­தமை தொடர்பில் பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கத்­துக்கு முறைப்­பாடு செய்தார். பொலிஸ் நிலை­யத்­திலும் புகார் செய்தார். அத்­தோடு ஊடக மாநா­டொன்­றினை ஏற்­பாடு செய்து முழு நாட்­டுக்கும் இதனை வெளிப்­ப­டுத்­தினார். இதன் மூலமே இத­னுடன் தொடர்­பு­பட்ட 19 சிரேஷ்ட மாண­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த முடி­யு­மாக இருந்­தது.

பல்­வேறு தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் பெற்றோர் தங்கள் பிள்­ளை­க­ளுக்கு கல்­வியை வழங்கி வரு­கி­றார்கள். அவர்கள் தங்கள் பிள்­ளைகள் உயர்­கல்வி கற்று நற்­பி­ர­ஜை­க­ளாக வாழ வேண்­டு­மென்றே கனவு காண்­கி­றார்கள். அக்­க­ன­வுகள் நிறை­வேறி பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு பிர­வே­சிக்கும் போது பாலியல் துன்­பு­றுத்­தல்கள், தாக்­கு­தல்கள் மற்றும் வதை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வதை எவ­ராலும் அனு­ம­திக்க முடி­யாது.

பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட மாண­வர்கள் புதிய மாண­வர்­களை பகி­டி­வதை என்ற பெயரில் உடல் ரீதி­யான பாலியல் துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­ய­மை­யினால் கடந்த 2 வரு­டங்­களில் 1989 மாண­வர்கள் பல்­க­லைக்­கல்­வியைக் கைவிட்டு அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ள­தாக தர­வுகள் தெரி­விக்­கின்­றன.
அத்­தோடு பகி­டி­வதை கார­ண­மாக தற்­கொலை உட்­பட 16 மர­ணங்கள் நிகழ்ந்­துள்­ள­தா­கவும் புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தில் தொழில்­நுட்ப கல்வி கற்றுக் கொண்­டி­ருந்த மாணவர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு தற்­கொலை செய்து கொண்டார். அதே வருடம் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழக மாண­வி­யொ­ரு­வரும் தற்­கொலை செய்து கொண்டார். இவர்கள் இரு­வரும் தாங்கள் ஏன் தற்­கொலை செய்து கொள்கிறோம் என கடிதம் எழுதி வைத்­தி­ருந்­தார்கள். பகி­டி­வ­தையின் கொடூரம் அந்தக் கடி­தங்­களில் விப­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

பகி­டி­வதை என்­பது பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லி­ருந்து மாத்­தி­ர­மல்ல இந்த முழுச் சமூ­கத்­தி­லி­ருந்தும் ஒழிக்­கப்­பட வேண்டும். நாட்டின் பல பகு­தி­க­ளி­லி­ருந்தும் வரு­டாந்தம் மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழகம் பிர­வே­சிக்­கி­றார்கள். அவர்கள் பெற்­றோரின் அர­வ­ணைப்­பி­லி­ருந்தும் வெளி­யேறி பல்­க­லைக்­க­ழ­கங்­களின் விடு­தி­களை வந்­த­டை­கி­றார்கள். அவர்­களின் இன்ப துன்­பங்­களில் பங்கு கொள்ள வேண்­டி­ய­வர்கள் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருக்கும் சகோ­தர, சகோ­த­ரி­களே. அவர்­க­ளுக்கு இடையில் அறி­மு­கங்கள் ஏற்­ப­டு­வது அவ­சி­யமே என்­றாலும் பகி­டி­வதை என்ற பெயரில் மிகவும் கொடூ­ர­மான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை எவ­ராலும் அனு­ம­திக்க முடி­யாது.

பல்கலைக்கழகங்களில் சிரேஷ்ட மாணவர்கள் தங்கள் அரசியல் ரீதியான கொள்கைகளை மாணவர்கள் மீது திணிப்பதற்காகவே பகிடிவதைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களிலேயே நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

எனவே அப்பாவி மாணவர்கள் மீது அங்கு கொடூரமாக பகிடிவதை மேற்கொள்ளப்படுவது தடை செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சும் பல்கலைக்கழக நிர்வாகங்களும் முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.