புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த கொள்கைக்கு அப்பால் செயற்பட வேண்டிய தேவையுள்ளது

பதுளையில் அமைச்சர் சஜித் பிரேமதாச

0 849

“புதிய பய­ணத்தை நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து ஆரம்­பிப்போம். புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­புவோம். தேசிய பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் வழங்­குவோம். இளைய தலை­மு­றை­யி­னரின் திறன்­கண்டு தலை­மைத்­து­வத்தைப் பெற்­றுக்­கொ­டுத்து நாட்டை முன்­னேற்ற வாய்ப்­ப­ளிப்பேன். என் தந்தை பிரே­ம­தாச வழியில் நாட்­டுக்­காக, மக்­க­ளுக்­காக என் உயி­ரையும் விடத் தயா­ரா­கி­யி­ருக்­கிறேன். எதிர்­வரும் நவம்பர் மாதம் நான் போக வேண்­டிய இடத்­துக்கு நிச்­சயம் செல்வேன். அதை யாராலும் தடுத்து நிறுத்­தி­விட முடி­யாது” என அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தலை­மையில் பதுளை வீல்ஸ் பார்க் மைதா­னத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற மாபெரும் வர­வேற்­புக்­கூட்­டத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் ரவீந்­திர சம­ர­வீ­ரவின் வர­வேற்­பு­ரை­யோடு ஆரம்­ப­மான இக்­கூட்­டத்தில் அமைச்சர் சஜித் மேலும் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
“ஆங்­கி­லே­யரைத் தோற்­க­டித்த இந்த ஊவா மண்­ணி­லி­ருந்து எமது புதிய பய­ணத்தை ஆரம்­பிப்­பதில் பெரு­மை­ய­டை­கிறோம். இப்­பு­திய பய­ணத்தில் வருடம் முழு­வதும் தேசிய பாது­காப்­புக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்போம். 61 இலட்சம் குடும்­பங்­க­ளுக்கும் 231 இலட்சம் மக்­க­ளுக்கும் தேவை­யான சக்­தியைப் பெற்­றுக்­கொ­டுக்க நாம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம்.
ஆட்சி அதி­காரம் தற்­கா­லி­க­மா­னது. அது பொது மக்­க­ளுக்­கான சேவைக்­கான ஆணை­யாகும். நாட்டின் எதிர்­கால பய­ணத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆட்­சியை கொண்டு செல்­ல­வேண்டும்.

எமது கூட்­ட­ணி­யுடன் இணை­யுங்கள். நாட்டை வெற்­றி­பெறச் செய்­யுங்கள். மக்கள் எமக்கு அதி­காரம் அளிப்­பது சுக­போகம் அனு­ப­விக்க அல்ல. நாட்டு மக்­களைப் பலப்­ப­டுத்தி சேவை செய்­வ­தற்­கா­க­வே­யாகும்.

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னோக்கிக் கொண்டு செல்ல சிறிய மற்றும் நடுத்­தர வியா­பா­ரங்­க­ளுக்கு முன்­னு­ரி­மை­ய­ளித்து தேசிய பொரு­ளா­தா­ரத்­திற்கு முன்­னு­ரி­மை­ய­ளிக்க வேண்டும். சிறிய, நடுத்­தர கைத்­தொ­ழி­லா­ளர்கள் தான் பொரு­ளா­தா­ரத்தின் சக்­திகள். சிறிய நடுத்­தர வர்த்­த­கங்­களை வலுப்­ப­டுத்தி அனைத்து நாடு­களும் பலம் பெற்­றுள்­ளன. இவ்­வர்த்­த­கங்­களை இலக்கு வைத்து புதிய பொரு­ளா­தார பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும்.

செல்­வந்­தர்கள் மாத்­திரம் வரு­மா­னத்தை அனு­ப­விக்கும் காலத்தை மாற்­றி­ய­மைப்போம். 231 இலட்சம் மக்­களும் அனு­ப­விக்கும் நாட்டை உரு­வாக்­குவோம். இப்­பு­திய பய­ணத்தில் புரட்­சி­க­ர­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்த கொள்­கைக்கு அப்பால் செயற்­பட வேண்­டிய தேவை­யுள்­ளது. பழைய பொறி­மு­றை­களை மாற்றி புதிய நாட்டை படைக்க இளைஞர் அபி­வி­ருத்தி செய­ல­ணிகள் கிரா­மங்கள் தோறும் உரு­வாக்கம் பெறும். கிரா­மங்கள் ரீதி­யாக கைத்­தொழில் பேட்­டை­களும் உரு­வாகும்.

இளை­ஞர்­க­ளுக்கு தலை­மைத்­து­வத்தைப் பெற்றுக் கொடுத்து நாட்டை முன்­னோக்கிச் செல்ல வாய்ப்­ப­ளிக்க வேண்டும். இளைய தலை­மு­றை­யி­ன­ருக்கு சகல துறை­க­ளிலும் முன்­னு­ரிமை வழங்க வேணடும். இதன் மூலம் சர்­வ­தேச மதிப்பைப் பெற முடியும். புதிய அர­சியல் கொள்­கைகள் வர­வேற்­கப்­பட வேண்டும்.

கல்வித் துறையில் புதிய விட­யங்கள் உள்­வாங்­கப்­பட்டால் அனைத்துத் துறை­க­ளிலும் முன்­னேற்­ற­ம­டைய முடியும். எழுத்து வீதத்தை வைத்தே ஒரு நாட்டின் முன்­னேற்றம் மதிப்­பி­டப்­படும். காலத்­திற்­கேற்ப கல்­வித்­து­றையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படும். பல­மான பொரு­ளா­தா­ரத்தின் ஊடா­கவே நாட்டை சிறந்த முறையில் கட்­டி­யெ­ழுப்ப முடியும். தேசிய வெற்­றிக்கு இலக்கு பல­மாக இருக்க வேண்டும்.

நான் வாக்கு மாறு­பவன் அல்ல. இன்­றொன்று நாளை­வேறொன்றோ அல்­லது இந்த மாதமோ அடுத்த வரு­டமோ ஒவ்­வொன்றை மாற்றிச் சொல்­ப­வனும் அல்ல. நான் உண்­மையைச் சொல்­பவன்.

மலை­யக பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரிய செல்­வந்­தர்கள் அல்லர். வறுமை நிலையில் இருப்­ப­வர்கள். எனது தந்­தையே மலை­யக மக்­க­ளுக்கு ஒன்று நூறல்ல; இலட்­சக்­க­ணக்கில் காணி உரி­மைகளைப் பெற்றுக் கொடுத்­தவர் என்­ப­தையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்­பு­கிறேன். மலை­யக மக்­களின் தேவை­களும் உரி­மை­களும் நிறை­வேற்­றப்­பட வேண்டும்.

நான் பயந்­தாங்­கொள்ளி அல்ல. உயி­ருக்குப் பயப்­ப­டு­ப­வனும் அல்லன். எனக்கு 52 வயது. தந்தை வழியில் இன்­னு­மின்னும் சிறப்­புற சேவை­யாற்­றவே விரும்­பு­கிறோம். இந்த நாட்­டுக்­காக, எனது மக்­க­ளுக்­காக நான் எனது தந்­தையார் வழியில் நட்ட நடு­வீ­தியில் என் உயி­ரையும் விட்­டு­விட எப்­போதும் தயா­ரா­யி­ருக்­கிறேன். என் உயி­ரை­விட எனது வாக்கை, மக்களைப் பெரிதாக நினைக்கிறேன்.

புதிய பயணத்தில் எம்மோடு அனைவரும் கைகோருங்கள். புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம். இன, மொழி, மத, குல, பிரதேச, கட்சி, நிற பேதமில்லாமல் அனைவரும் ஒற்றுமைப்பட்டு எமது நாட்டை முன்னேற்றிச் செல்வோம்.

உங்கள் அனைவருக்கும் இனிய வந்தனங்கள். கூடவே இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம் அன்பர்கள் அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும். ஈத் முபாரக்!” என்றார்.

வாஹிட் குத்தூஸ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.