கட்சி மாறியுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் பாராளுமன்ற உறுப்புரிமை கேள்விக்குறி

சபையில் முறையிடுவோம் : முஜிபுர் ரஹ்மான்

0 880

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலைமைப் பத­வியை ஏற்று கட்சி மாறி­யுள்ளார். அவர் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைப் பெற்றார். இந்­நி­லையில் அவ­ரது கட்சி மாற்­றத்­தினால் அவ­ரது உறுப்­பு­ரிமை சவா­லுக்­குள்­ளா­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வில் முறை­ப்பா­டொன்றை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

மஹிந்த ராஜபக் ஷவின் கட்சி மாற்றம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்; ‘எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கடந்த பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டே பாரா­ளு­மன்­றுக்குத் தெரி­வானார். அக்­கூட்­ட­மைப்பின் சார்­பா­கவே எதிர்க்­கட்சி தலைமைப் பத­வி­யையும் பெற்றுக் கொண்டார். தற்­போது பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தாக கட்­சி­யொன்றின் தலைமைப் பொறுப்­பினை ஏற்றுக் கொண்­டுள்ளார். இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் மஹிந்த ராஜபக் ஷ எதிர்க் கட்சித் தலைவர் பத­வியை தொடர்ந்தும் வகிப்பதற்கு சட்ட பூர்வமாக இடமிருக்கிறதா? என்பதை சபாநாயகர் அறிவிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.