‘ஹலால்’ முறைமை சட்டமாக்கப்பட்டால் முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிப்போம்

ஞானசார தேரர் எச்சரிக்கை

0 974

முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால் அவ­சி­ய­மென்று பாரா­ளு­மன்றில் பிரே­ர­ணை­யொன்று கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­ய­கரும் அப்­பி­ரே­ர­ணையை பொறுப்­பேற்றுக் கொண்­டுள்ளார்.

இது சிங்­கள பௌத்த நாடு. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தாம் நினைத்­தது போன்று செயற்­பட முடி­யாது. ஹலால் சட்­ட­மாக்­கப்­பட்டால் நாம­னை­வரும் முஸ்­லிம்­களின் கடை­களைப் பகிஷ்­க­ரிப்போம் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பு பலாங்­கொடை கும்­ப­கொட ஸ்ரீ சுதர்­சன மகா விகாரை மண்­ட­பத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;

“ஹலால் அவ­சி­ய­மென்று பாரா­ளு­மன்­றத்தில் பிரே­ர­ணை­யொன்று கொண்டு வரப்­ப­ட­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் என்­னிடம் தெரி­வித்தார். அத்­தோடு உட­ன­டி­யாக அதனை நிறுத்­து­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் என்னை வேண்­டினார். ஹலாலை சட்­ட­மாக்கி வரி அற­விட்டுக் கொள்­வ­தா­கவே முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஹலாலை மீண்டும் சட்­ட­மாக்கிக் கொள்ள முயன்றால் நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்­லிம்­களின் வியா­பா­ரங்­க­ளையும் நாம் பகிஷ்­க­ரிப்போம். இதனால் அப்­பாவி முஸ்லிம் வியா­பா­ரி­களே பாதிக்­கப்­ப­டு­வார்கள். அதனால் உட­ன­டி­யாக ஹலால் பிரே­ர­ணையை வாபஸ் பெற்றுக் கொள்­ளு­மாறு நாம் வேண்டிக் கொள்­கிறோம். கடந்த சில காலம் ஹலால் பிரச்­சினை இருக்­க­வில்லை. ஹலால் இல்­லை­யென்று முஸ்­லிம்கள் சாப்­பி­டாமல் இருந்­தார்­களா? எவ­ரா­வது பசி­யினால் இறந்­தார்­களா? மீண்டும் ஹலா­லுக்கு எதி­ராக நாம் போராட்­டங்­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

தொல்­பொருள் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் இன்னும் முடி­யாமல் இருக்­கி­றது. பலாங்­கொ­டையில் கூர­க­ல­வுக்கும் பொத்­து­விலில் முகுது மகா விகா­ரைக்கும் தொல்­பொருள் சட்டம் அமுல்­ப­டுத்தப்ப­டு­வ­தில்லை. தொல்­பொருள் திணைக்­க­ளத்தில் அதி­க­மானோர் சிங்­க­ள­வர்­க­ளாக இருந்தும் இச்­சட்டம் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை.

கடந்த காலங்­களில் 7000 க்கும் மேற்­பட்ட சிங்­களப் பெண்­களை முஸ்லிம் இளை­ஞர்கள் திரு­மணம் செய்து கொண்டு அவர்­களை இஸ்­லாத்­துக்கு மதம் மாற்றிக் கொண்­டுள்­ளார்கள். எங்­க­ளது பெண்­களை மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு அடிமை வேலை­க­ளுக்கு அனுப்ப வேண்டாம் என வேண்டிக் கொள்­கிறோம்.

இலங்­கையில் எமது பெண்­க­ளுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபா வரையில் தொழில் செய்து உழைத்துக் கொள்ள முடியும். எமது பெண்கள் மத்­திய கிழக்கில் வேலை செய்­யா­விட்டால் நாங்கள் இறந்­து­விடப் போவ­தில்லை.

கிழக்கில் ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் திறக்­கப்­ப­டக்­கூ­டாது. அது தடை செய்­யப்­பட வேண்டும். எமது பிக்­குகள் ஐயா­யிரம் பேர் வரையில் ஒன்று சேர்ந்து அப்­பல்­க­லைக்­க­ழக கட்­ட­டத்தின் கற்­களை ஒவ்­வொன்­றாக அகற்ற வேண்டும்.
2014 இல் நாம் ஐ.எஸ். பயங்­க­ர­வாதம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்தோம். நாம் அன்று கூறியவற்றை கவனத்திற் கொண்டிருந்தால் 300 பேர் வரையில் பலியாகி இருக்க மாட்டார்கள். அவர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் மீது பற்றுக் கொண்டுள்ள வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும்” என்றார்.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.