அல்-­அக்ஸா பள்­ளி­வா­யலில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ரு­ந்தோர் மீது இஸ் ரேல் தாக்­குதல்

14 பேர் காயம்

0 939

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழு­கையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஜெரூ­ச­லத்­தி­லுள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலில் சுமார் ஒரு இலட்­சம்பேர் கலந்­து­கொண்­டி­ருந்த வேளையில் இறப்பர் துப்­பாக்கி ரவைகள் மற்றும் ஒலி­யெ­ழுப்பும் கைக்­குண்­டு­க­ளையும் பயன்­ப­டுத்தி இஸ்ரேல் பொலிஸார் மேற்­கொண்ட தாக்­கு­தலில் 14 பலஸ்­தீ­னர்கள் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளனர். 

பள்­ளி­வாசல் வளா­கத்­தினுள் யூத கடும்­போக்­கா­ளர்கள் நுழை­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­திலும் பின்னர் அனு­மதி வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. உயர்­மட்ட அர­சியல் அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னையின் போரில் கொள்­கையில் மாற்றம் செய்­யப்­பட்­ட­தாக ஜெரூ­சல பொலிஸ் கட்­டளைத் தள­பதி டோரோன் யேடிட் தெரி­வித்தார்.

இஸ்­ரே­லுக்கும் முஸ்லிம் அதி­கா­ரி­க­ளுக்கும் இடை­யே­யான நீண்­ட­கால ஒழுங்­க­மைப்­புக்கு அமை­வாக அல்-­அக்ஸா வளா­கத்­தினுள் யூதர்கள் வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும், அந்த ஒழுங்­க­மைப்­பிற்கு சவால் விடுக்கும் வகையில் அண்­மைய ஆண்­டு­களில் வல­து­சாரி தேசி­ய­வா­திகள் குறித்த வளா­கத்­தினுள் நுழை­வதை வழக்­க­மாக்கிக் கொண்­டுள்­ளனர். யூத கடும்­போக்­கா­ளர்கள் அல்-­அக்ஸா பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட வேண்டும் எனவும் அதே இடத்தில் விவி­லி­யத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள தேவா­லயம் அமைக்­கப்­பட வேண்டும் எனவும் கோரி வரு­கின்­றனர்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை நேரத்தில் தொழ வேண்டி பொருநாள் தொழு­கை­யினை இஸ்­லா­மிய வக்ப் அதி­கா­ரிகள் ஒரு மணி­நேரம் தாம­தித்­த­தோடு கடும்­போக்­கா­ளர்­களின் அத்­து­மீறி நுழையும் செயலைத் தடுப்­ப­தற்கு அனைத்து முஸ்­லிம்­க­ளையும் தரையில் அம­ரு­மாறு வேண்­டுகோள் விடுத்­தனர்.

1967 தொடக்கம் இருந்து வரும் புரிந்­து­ணைர்வை தெளி­வாக மீறும் செயல் இது­வாகும். அல்-­அக்ஸா முஸ்­லிம்­க­ளு­டை­ய­தல்­ல­ என்­பதைக் காண்­பிக்க எடுக்­கப்­படும் முயற்­சி­யு­மாகும் என இஸ்­லா­மிய வக்ப் சபையின் உறுப்­பி­ன­ரான கலீல் அஸ்­ஸாலி தெரி­வித்தார்.

அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலைப் பரி­பா­லிக்கும் ஜோர்தான் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தாக்­கு­த­லுக்கு இஸ்­ரேலே காரணம் என குற்றம் சுமத்­தி­யுள்­ள­தோடு முறை­யான முறைப்­பா­டொன்­றையும் இஸ்ரேல் அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பித்­துள்­ளது. அல்-­அக்ஸா பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ரா­கவும் மேற்­கொள்­ளப்­படும் அனைத்து மீறல்­க­ளையும் தரையில் அமர்ந்திருந்த தொழுகைக்காக வந்திருந்தவர்கள் மற்றும் வக்ப் சபையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் கண்டிக்கின்றோம். இதற்கு இஸ்ரேல் அரசாங்கமே பொறுப்பு எனவும் குற்றம்சாட்டுகின்றோம் எனவும் அம்மானிலுள்ள வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

எம்.ஐ.அப்துல் நஸார்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.