மக்­காவின் நடை­பா­தை­களின் வெப்­பத்தை குறைக்கும் திட்டம்

0 908

மக்காவின் புனித இடங்­களில் அதிக வெப்­ப­நிலை நில­வு­வதால் வெப்­பத்தை தணிக்கும் ஒரு செயற்­றிட்­டத்தை செயற்­ப­டுத்த புனித நக­ரங்­களின் நடை­பாதைப் பரப்­புக்­களில் பல்­வேறு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
அதன் முதற்­கட்­ட­மாக மினா­வி­லி­ருந்து ஜமாரத் நோக்கிச் செல்லும் பகு­தியில் சுமார் 3,500 சதுர அடிப்­ப­ரப்பில் வெப்­பத்தை நிலத்­தோடு உள்­வாங்­கக்­கூ­டிய தொழில்­நுட்ப முறையில் வெப்பம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

ஜப்­பா­னிய நிறு­வ­ன­மான ஸுமி­டோமோ கூட்­ட­மைப்பின் அனு­ச­ர­ணையின் கீழ் இந்த செயற்­றிட்டம் வெற்­றி­க­ர­மாக செய்து முடிக்­கப்­பட்­ட­தாக புனித தலங்­களின் பணிப்­பாளர் நாயகம் அஹமத் மன்ஷி தெரி­வித்தார்.

“இந்த செயற்­றிட்டம் ஷய்பென் நடைப் பிர­தே­சத்தின் வெப்­ப­நி­லையை குறைப்­பதை நோக்­க­மாகக் கொண்­ட­தாகும். இது ஜமா­ரத்­து­டைய வச­தி­வாய்ப்­புக்­களை மேம்­ப­டுத்த வாய்ப்­பாக அமை­வ­துடன் புனித பகு­தி­களின் ஏனைய நடை­ப­கு­தி­களின் வசதி வாய்ப்­பு­க­ளையும் இது மேம்­ப­டுத்தும்.” என அவர் தெரி­வித்தார்.

இந்த செயற்­றிட்­டத்தின் மூலம் 15 – 20 டிகிரி செல்­சியஸ் வரை­யான வெப்­ப­நி­லை­யயை குறைக்­கலாம். இந்த காலத்தில் ஒவ்­வொரு 10 செக்­க­னுக்கும் சென்சர்கள் மூலம் வெப்­ப­நி­லையை அள­விட்டு பதி­விடும் தொழில்­நுட்பம் நிலத்­துக்கு கீழ் பொருத்­தப்­பட்­டுள்­ளது என மன்ஷி தெரி­வித்தார்.

இந்த ஹஜ் காலத்தில் வெப்­ப­நி­லையை சரி­யான முறையில் அள­விட்டு யாத்­தி­ரி­கர்­களை பாது­காக்கும் வழி­மு­றை­களை பிர­யோ­கிப்­பதே இந்த செயற்­றிட்­டத்தின் வெற்­றி­யாகும் என அவர் தெரி­வித்தார்.

நாங்கள் இரண்டு புனித பள்­ளி­வா­சல்­களின் பாது­காப்பு தொடர்­பா­கவும் ஹஜ் உம்ரா கற்­கைகள் தொடர்­பான ஆய்­வு­களில் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்டு ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் இதன் சாத்­தியம் குறித்த ஆய்­வு­களை மேற்­கொள்­கிறோம். இதன் மூலம் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு உயர்ந்த சேவை­களை வழங்­கு­வதே நோக்­க­மாகும்.

தற்­போது புனித மலைத்­தொ­ட­ரான ஜபல் அல் ரஹ்மா, மினா மற்றும் முஸ்­த­லிபா ஆகிய இடங்­களில் இந்த செயற்­றிட்டம் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. புனித நக­ரங்­களில் யாத்­தி­ரி­கர்­களின் உயர்ந்­த­பட்ச வசதி மற்றும் பாது­காப்பு என்­ப­வற்றை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் இந்த செயற்­றிட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும் யாத்­தி­ரி­கர்­களின் நடைப்­பா­தையில் இன்­டர்­லொகிங் டைல்ஸ் பொருத்­தப்­பட்­டுள்­ள­துடன் பாதையின் இரு­ம­ருங்­கிலும் யாத்­தி­ரி­கர்கள் ஓய்­வெ­டுப்­ப­தற்­காக வேண்டி இருக்­கை­களும் பெருத்­தப்­பட்­டுள்­ளன.

யாத்­தி­ரி­கர்­களை சூரிய வெப்­பத்தில் இருந்து பாது­காப்­ப­தற்­காக நிழலைப் பெற்­றுக்­கொள்ளும் நடவடிக்கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் நடை­பா­தை­களில் வாக­னங்கள் உட்­செல்­லாமல் இருக்க ஆங்­காங்கே கொங்ரீட் தடைகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் நடை­பா­தையை ஒளியூட்­டு­வ­தற்­காக வேண்டி உயர்ந்­த­பட்ச போல்ஸ் தொழில்­நுட்­பமும் சாதா­ரண மின் விளக்­கு­க­ளுக்கு மாற்­ற­மாக எல்.ஈ.டி. மின்­கு­மிழ்­களும் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

எம்.ஏ.எம். அஹ்ஸன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.