மொட்டுக் கட்­சி­யி­னரை ஆட்­சிக்கு கொண்­டு­வர ஊட­கங்கள் முஸ்­லிம்­களை பலிக்­க­டா­வாக்­கு­கின்­றன

பொலிஸ் ஆணைக்­குழு பத­வி­வி­லக வேண்டும்: அசாத் சாலி

0 755

கண்­ணாடி வீட்­டுக்­குள்ளே இருந்து கல்­லெ­றிய வேண்­டா­மென்று இன­வாத இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களை தான் எச்­ச­ரிப்­ப­தாக தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளு­ந­ரு­மான அசாத் சாலி தெரி­வித்தார்.
நேற்றுக் காலை ராஜ­கி­ரி­யவில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் கருத்து தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது:

தினமும் காலையில் எழுந்­த­வுடன் இவர்­களின் பொய்­க­ளையும் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட செய்­தி­க­ளை­யுமே நாம் பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. வீணாக மக்­களை குழப்­பத்தில் ஆழ்த்­து­கி­றார்கள்.

சதொச நிறு­வ­னத்­துடன் என்னைத் தொடர்­பு­ப­டுத்தி பொய்­யான செய்­தி­களை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளனர்.

மொட்டுக் கட்­சி­யி­னரை ஆட்­சியில் கொண்டு வரு­வ­தற்­காக இந்த இன­வாத ஊட­கங்கள் முஸ்­லிம்­களை பலிக்­க­டா­வாக்­கின்­றனர்.

குரு­நாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்­சிறி ஜய­லத்தின் இட­மாற்ற விட­யத்தில் பொலிஸ் ஆணைக்­குழு, காலையில் ஒரு முடிவும் மாலையில் ஒரு முடிவும் மேற்­கொண்­ட­தி­லி­ருந்து இந்த ஆணைக்­கு­ழு­வினர் முள்­ளந்­தண்­டில்­லா­த­வர்­க­ளென நிரூ­பித்­துள்­ளனர்.

எனவே உட­ன­டி­யாக பொலிஸ் ஆணைக்­குழு பதவி விலக வேண்டும். அழுத்­தங்­க­ளுக்­காக வேலை செய்தால் எவ்­வாறு இதனை சுயா­தீன ஆணைக்­குழு என்­ற­ழைப்­பது?

48 நாடு­க­ளுக்கு ஆறு மாதங்கள் தங்­கக்­கூ­டிய இல­வச விசா வச­தியை அரசு வழங்­கி­யுள்­ளது. இவற்றில் எந்­த­வொரு முஸ்லிம் நாடும் இல்லை. இலங்­கைக்கு கோடிக்­க­ணக்­கான நிதி­யு­த­வியை வழங்கும் முஸ்லிம் நாடு­க­ளுக்கு ஏன் இந்த இருட்­ட­டிப்பு? அவர்கள் உதவி செய்­வ­தற்­காக நீங்கள் காட்டும் நன்­றிக்­க­டனா இது? அது­ர­லிய ரதன தேரர், ஆனந்த சாகர தேரர் மற்றும் ராவண பல­யாக்கள் முஸ்லிம் நாடு­களில் இருந்து எது­வுமே வேண்­டா­மென கூறு­வது நகைப்­புக்­கி­ட­மா­னது.

நெலும் பொகு­ணவில் இன ஐக்­கிய மாநாடு என்று கூறி ஆட்­களை கொண்­டு­வந்து நிரப்பி முஸ்­லிம்­க­ளையும் குர்­ஆ­னையும் கொச்­சைப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.

இஸ்­லா­மிய விரோ­தி­களை மேடையில் அனு­ம­தித்து இந்த அவ­மா­னத்தை தேடித்­தந்­த­வர்கள், உலக முஸ்லிம் லீக் தலை­வரை தரக்­கு­றை­வாக நடத்­து­வ­தற்கும் உத­வி­ய­ளித்­துள்­ளார்கள்.

நான் பத­விக்கு பின்னால் என்­றுமே ஓடி­ய­வ­னல்ல; பத­விதான் எங்­களை தேடி வரும். எங்கள் கை சுத்­த­மா­னது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூட எங்­களில் ஏதா­வது குறை இருக்­குமா என்று தேடிக் களைத்துபோனவர்.
அவரால் முடியாத ஒன்றையா இவர் கள் செய்யப் பார்க்கின் றார்கள்? நிகாப் மற்றும் முஸ்லிம் திருமண சட்டத்தில் எழுந்தமான முடிவுகளையோ சீர்திருத்தங்களையோ செய்வதற்கு நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்றார்.”

vidivelli

Leave A Reply

Your email address will not be published.