மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன

உயர் கல்வி அமைச்சர் தலையிட வேண்டும் என்கிறார் முஜிபுர் ரஹ்மான்

1 684

ஹிஜாப் அணிந்து உயர்­தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய  முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு சில பரீட்சை நிலை­யங்­களில் அதி­கா­ரி­க­ளினால் இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இது தொடர்­பாக உயர்­கல்வி அமைச்சர் உட­ன­டி­யாகத் தலை­யிட்டு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஹிஸ்­புல்­லாவின் ‘மட்­டக்­க­ளப்பு கெம்பஸ்’ தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், உயர்­த­ரப்­ப­ரீட்சை எழு­து­வ­தற்­காக ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு சில பரீட்சை மத்­திய நிலை­யங்­களில் அதி­கா­ரி­க­ளினால் இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தப் பிரச்­சி­னை­யினால் பல மாண­விகள் உறு­தி­யான மனோ­நி­லையில் பரீட்­சைக்குத் தோற்­ற­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

பரீட்­சைகள் திணைக்­களம் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ள­போதும் அதி­கா­ரி­களே அதனை மீறி செயற்­பட்­டுள்­ளனர். குறித்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக உயர் கல்­வி­ய­மைச்சர் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் முஸ்லிம் மாண­வி­களின் கல்வி உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும். அவர்கள் சுதந்­தி­ர­மாகப் பரீட்சை எழுத அனு­ம­திக்­கப்­பட வேண்டும் என்றார்.

இதன்­போது எழுந்த அத்­து­ர­லிய ரதன தேரர் எம்.பி.,
அந்த முஸ்லிம் மாண­விகள் தமது காதுகள் தெரியும் வண்ணம் ஹிஜாப் அணிந்தா சென்­றார்கள் எனக்­கேட்டார்.

அதற்கு முஜிபுர் ரஹ்மான் எம்.பி. பதி­ல­ளிக்­கையில், ஆம். அவர்கள் தமது தேசிய அடை­யாள அட்­டையில் உள்­ள­வாறு காதுகள் தெரியும் வகை­யி­லேயே ஹிஜாப் அணிந்து சென்­றார்கள். சில இடங்­களில் இருந்த பரீட்சை அதி­கா­ரிகள் தான் இவ்­வாறு ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு பரீட்சை எழுதுவதில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இப்பிரச்சினையில் உயர் கல்வி அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்

vidivelli

1 Comment
  1. சலீம் says

    இத போய் பாராளுமன்றத்துல நேத்து பேசி என்ன செய்ய? இந்த மேட்டரை முன்நாள் ஆளுநர் ஆசாத் சாலி இது நடந்த அன்னிக்கே ரானுவ தளபதியுடன் பேசி தீர்த்துப்புட்டாரே.

Leave A Reply

Your email address will not be published.