உயிர்களை பலியெடுக்கும் சட்டவிரோத மதுபானம்

0 752

மீரி­கம, பல்­லே­வெல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பாது­ரா­கொட பிர­தே­சத்தில் சட்­ட­வி­ரோத மது­பானம் (கசிப்பு) உற்­பத்தி செய்து விற்­பனை செய்யும் வீடொன்றில் கசிப்பு அருந்­திய 13 பேர் உயி­ரி­ழந்துள்ளார். இவர்­களில் மேலும் 20 பேர் ஆபத்­தான நிலையில் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றனர்.

சில தினங்­க­ளுக்கு முன் அப்­பி­ர­தே­சத்தில் சட்­ட­வி­ரோத மது­பானம் அருந்­தி­ய­வர்கள் வாந்தி, வயிற்­று­வலி, கண் எரிச்சல், கண்­பார்வை தெரி­யாமை போன்ற உபாதைகளுக்கு உட்­பட்டு பிர­தேச வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். அவர்களில் நேற்­று­வரை 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சட்­ட­வி­ரோத மது­பானம் (கசிப்பு) உற்­பத்தி செய்­யப்பட்ட வீட்டை வாட­கைக்கு வழங்­கி­யி­ருந்த உரி­மை­யா­ளரை அத்­த­ன­கல நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தரங்கா ராஜபக் ஷ இன்­று­வரை விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்கு உத்­த­ர­விட்­டுள்ளார். கசிப்பு விற்­பனை செய்த இரு­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கசிப்பு என்­பது ஆரம்ப காலத்தில் சீனி மற்றும் ஈஸ்ட் என்­ப­ன­வற்றைக் கலந்து அதி­லி­ருந்து உற்­பத்தி செய்­யப்­பட்­டது. பின்பு கசிப்பு உற்­பத்திச் செல­வினைக் குறைக்கும் முக­மாக ஈஸ்ட்க்குப் பதில் யூரியா உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்­டது. மேலும் இத­னுடன் முள்­ளுக்­கம்­பியும் சேர்க்­கப்­பட்­டது. இந்த உற்­பத்­தியின் பாதகத் தன்­மை­களை இன்னும் நுகர்வோர் சரி­வரப் புரிந்­து­கொள்­ள­வில்லை. கசிப்­பினை அருந்­து­வதால் ஏற்­படும் விப­ரீ­தங்­க­ளையும் உயி­ரா­பத்­து­க­ளையும் மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். கிரா­மங்­களில் பல்­வேறு துறை­களைச் சேர்ந்த அதி­கா­ரிகள் பணி­பு­ரி­கி­றார்கள். பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப்­பாக பொலிஸ் நிலை­யங்கள் இருக்­கின்­றன. இவர்கள் சட்­ட­வி­ரோத மது­பான உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இவ்­வா­றான உற்­பத்­தி­யா­ளர்­க­ளிடம் இலஞ்சம் பெற்­றுக்­கொண்டு நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆப்பு வைத்­தி­ருக்­கி­றார்கள். 

கசிப்பு விலை­யிலும் குறைவா­னது. கிரா­மங்கள் தோறும் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. கட­னுக்கும் வழங்­கப்­ப­டு­கி­றது. கசிப்­புக்கு அடி­மையா­ன­வர்கள் அதி­லி­ருந்தும் மீள முடி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். அவர்கள் தமது உடை­மை­க­ளைக்­கூட விற்று கசிப்பு அருந்த தயார் நிலையில் இருக்­கி­றார்கள். இவ்­வா­றான நிலையில் கசிப்பு விற்­பனை யாளர்கள் தங்­க­ளது பைகளை நிரப்­பிக்­கொள்­கி­றார்கள். நுகர்­வோரின் ஆயுட்­காலம் குறை­வ­டை­கி­றது. அத­னால் அவர்­க­ளது குடும்­பங்கள் நிர்க்­க­தி­யா­கின்­றன.

சில மாதங்­க­ளுக்கு முன்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்­நாட்­டி­லி­ருந்து முற்றும் முழு­தாக கசிப்பை துடைத்­தெ­றி­வ­தாகக் கூறி­யி­ருந்தார். போதை­யற்ற நாட்டை உரு­வாக்­கு­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.
ஜனா­தி­பதி எத்­தனை முயற்­சிகள் மேற்­கொண்­டாலும் சம்­பந்­தப்­பட்ட அரச அதி­கா­ரிகள் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரி­களின் ஒத்­து­ழைப்பு இன்றி அவ­ரது இலட்­சியம் நிறை­வே­றாது.

கசிப்பு அரக்­க­னினால் 13 உயிர்கள் பலி­யெ­டுக்­கப்­பட்ட பின்பு பொலிஸ் திணைக்­களம் சில இட­மாற்­றங்­களைச் செய்­துள்­ளது. அத்­த­னகலை பதில் உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் துசித குமார மன்னார் பொலிஸ் பிரி­விற்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். பல்­லே­வெல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கமல் ரத்­நா­யக்க களுத்­துறை பொலிஸ் பிரி­விற்கு உட­னடி இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ளார். மேலும் 5 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பிட்ட சட்­ட­வி­ரோத கசிப்பு உற்­பத்தி நிலை­யத்­துக்கு எதி­ராக உரிய சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­மையே இந்த இட­மாற்­றத்­துக்குக் கார­ண­மாகும். பொலிஸார் கசிப்பு உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து இலஞ்சம் பெற்­றுக்­கொண்டு கண்­மூடி மௌனம் காப்­ப­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கசிப்பு அருந்­தி­ய­வர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளதால் அவர்­க­ளது இறப்­புக்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய இறந்­த­வர்­க­ளது உடல் உள்­ளு­றுப்பு பாகங்கள் இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாது­ரா­கொ­டையின் கசிப்பு உற்பத்தி அப்­பி­ர­தே­சத்தை சூழ­வுள்ள பல குடும்­பங்­க­ளுக்கு உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. தொடர்ந்தும் 20 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏன் மக்கள் கசிப்புக்கு உந்தப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கத்தவறும் பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை இடமாற்றுவதால் மாத்திரம் கசிப்பு பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்பதை வலியுறுத்துகிறோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.