கண்டி எசல பெரஹரா : முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் கடைகளை மூட வேண்டியதில்லை

வீடுகளுக்கு புதியவர்கள் வந்தால் அறிவிக்குக : பொலிஸ்

0 728

கண்­டியில் எசல பெர­ஹரா வைபவம் நடை­பெ­று­வதால் முஸ்­லிம்கள் கண்டி நக­ரி­லுள்ள தங்கள் வர்த்­தக நிலை­யங்­க­ளையோ பள்­ளி­வா­சல்­க­ளையோ மூட வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பள்­ளி­வா­சல்­களில் தங்கள் சமய கட­மை­களை எது­வித தடை­யு­மின்றி நிறை­வேற்­ற­மு­டியும்.

கண்டி நகர முஸ்­லிம்கள் மிகவும் நம்­பிக்­கை­யா­ன­வர்கள். ஆனால் அவர்கள் தங்கள் வீடு­க­ளுக்கு உற­வி­னர்­களோ அல்­லது புதி­ய­வர்­களோ வந்தால் அது பற்றி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­க­வேண்டும் என மத்­திய மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளுக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் எஸ்.எம்.விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

கண்டி பிரதி பொலிஸ்மா அதி­பரின் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போதே அவர் இவ்­வாறு கூறினார். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், ‘பெர­ஹரா வைபவம் தற்­போது இடம்­பெற்று வரு­வதால் கண்­டியில் சோதனை நட­வ­டிக்­கைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

கண்டி நக­ருக்குள் பிர­வே­சிக்கும் வாக­னங்கள் அனைத்தும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. சோதனை நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனை­வரும் ஒத்­து­ழைக்­க­வேண்டும். வீடு­க­ளுக்கு வரு­கை­தரும் உற­வி­னர்கள், புதி­ய­வர்கள் தொடர்பில் பொலிஸார் கண்­கா­ணித்து வரு­கி­றார்கள். அவ்­வாறு வீடு­க­ளுக்கு வரு­ப­வர்கள் தொடர்­பான விப­ரங்­களை கட்­டா­ய­மாகப் பொலி­ஸா­ருக்கு வழங்­க­வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களில் எவ்­வித பிரச்­சி­னை­க­ளு­மின்றி பெருநாள் தொழு­கை­க­ளையும் நடாத்­தலாம். கண்டிப் பகுதி முஸ்­லிம்கள் மீது எமக்கு நம்­பிக்கை இருக்­கி­றது என்றார்.

கண்டி எசல பெர­ஹரா கண்டி நகர வீதி­களில் வலம் வரு­வது கடந்த 5 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்டு எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கண்டி பொலி­ஸா­ருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமி­டையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் கண்டி நகர மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கண்டி மாவட்டக் கிளை பிர­தி­நி­திகள், கண்டி வர்த்­தகர் சங்கம், வை.எம்.எம்.ஏ. கண்டி மஸ்ஜித் சம்­மே­ளனம் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

மேலும் பிரதி பொலிஸ்மா அதிபர்களான ரணவீர, சிசிர குமார உட்பட பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உபதலைவர் மௌலவி எம்.எப்.பஸ்ருல் ரஹ்மான் இந்தச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.