சாண் ஏறி மூலம் சறுக்கும் தமிழ் – முஸ்லிம் உறவு

0 1,098

உர­லுக்கு ஒரு பக்கம் அடி தவி­லுக்கு இரண்டு பக்­கமும் அடி என்று கிரா­மங்­களில் பழ­மொ­ழி­யொன்று கூறப்­ப­டு­வது வழக்கம். தவிலைப் போன்று இரண்டு பக்­கமும் மாறி மாறி அடி விழு­வது இலங்கை முஸ்லிம் சமூ­கத்­தின தொடர் கதை­யாக மாறி­விட்­டது. இலங்கை வாழ் முஸ்லிம் சமு­தாயம் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­க­ளாலும் தமிழ் குறுந்­தே­சி­ய­வா­தி­க­ளாலும் சுதந்­திர வர­லாற்­றி­லி­ருந்து இற்­றை­வரை இன நெருக்­கு­வா­ரங்­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­கொண்டு வரு­கின்­றனர் என்­பது கண்­கூடு.

இலங்­கையில் வர­லாற்றுக் காலம் முதல் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்­நிலை தொடர்ந்து வந்­துள்­ளது. தற்­போ­தைய இன முறு­கல்கள் சுமார் 19 ஆம் நூற்­றாண்டின் ஆரம்பப் பகு­தி­யி­லேயே ஆரம்­பித்­துள்­ளன. சேர். பொன்­னம்­பலம் இரா­ம­நா­தனின் இஸ்­லா­மியத் தமி­ழர்கள் என்ற கூற்றும், அதனைத் தொடர்ந்த முஸ்லிம் சிங்­கள இனக் கல­வரம் என்­ப­வற்றில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அவரின் நிலைப்­பாட்­டுடன் தமிழ், முஸ்லிம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முறு­கல்­நிலை ஆரம்­பித்­துள்­ள­மையும் எமது அவ­தா­னிப்­புக்­கு­ரி­யது.

அத்­தோடு, ஜீ.ஜீ. பொன்­னம்­ப­லத்தின் 50 க்கு 50 கோரிக்கை, அதனைத் தொடர்ந்து ஏற்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்கள் மற்றும் மறைந்த தலைவர் தந்தை செல்­வ­நா­ய­கத்தின் வட்­டுக்­கோட்டைப் பிர­க­டனம், அதன் பின்னர் ஏற்­பட்ட மாநா­டுகள் தோல்­வியில் முடிந்­தமை, இதன் தொடர்ச்­சி­யாக 1983 ஆம் ஆண்டு நடை­பெற்ற இனக்­க­ல­வரம் அனைத்தும் தமிழ் – சிங்­கள உறவை மாத்­தி­ர­மன்றி தமிழ்–முஸ்லிம் உற­வையும் பாதித்­தது.

இலங்கை முஸ்­லிம்­களை பொறுத்­த­மட்டில் நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் பரந்து வாழ்­கின்­றனர். குறிப்­பாக, மூன்­றி­லி­ரண்டு பகு­தி­யினர் வட­கி­ழக்கில் வாழ்­கின்­றனர். சிங்­களப் பேரி­னத்­திற்கும் தமிழ் சமூ­கத்­திற்­கு­மி­டை­யி­லான சாத்­வீக வழிப் போராட்­டங்கள் உச்ச கட்­டத்தை அடைந்­த­போது முஸ்­லிம்கள் இடையில் அகப்­பட்டு நசுக்­கப்­பட்­டனர். இவ்­வாறு நீண்­ட­கால கசப்­பான வர­லாற்றைக் கொண்ட இரண்டு சமூ­கங்­களின் உறவு மீளக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டி­யதன் அவ­சியம் இரண்டு தரப்­புக்­க­ளாலும் இன்று வெகு­வாக உண­ரப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் மூன்று தசாப்த கால­மாக இடம்­பெற்­று­வந்த உள்­நாட்டு யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான சூழ்­நி­லையில் இன நல்­லு­றவு என்ற எண்­ணக்­கரு அனை­வ­ரி­னதும் கரி­சனை பெற்ற ஒரு பிர­தான விட­ய­மாக திகழ்­கி­றது. அந்­த­வ­கையில் இலங்கை சிறு­பான்மை சமூ­கங்கள் என்­ற­டிப்­ப­டையில் தமிழ் – முஸ்லிம் உறவு எவ்­வாறு காணப்­பட்­டது என்­பதை கண்­ட­றி­வது அவ­சி­ய­மாகும்.

தமிழ் – முஸ்லிம் ஆகிய இரு சமூ­கங்­க­ளி­டையே அர­சியல், பொரு­ளா­தார, சமூக, சமய, கலா­சார, கல்வி போன்ற சகல துறை­க­ளிலும் நல்­லு­றவு பேணப்­பட்­டுள்­ளது. அந்­நல்­லு­ற­வுக்கு இரு இனங்­களின் தாய்­மொ­ழி­யாக தமிழ் மொழி காணப்­பட்­டமை, அயல் கிராம வாழ்க்கை முறைமை போன்­றன அடிப்­படை உறவுப் பால­மாகத் திகழ்ந்­துள்­ளன. இன்­றைய சூழ்­நி­லையில் பழைய இன நல்­லு­றவை மீண்டும் நினை­வு­ப­டுத்­து­வதும், தமிழ் –- முஸ்லிம் உறவில் புதி­ய­தொரு மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வதும் கட்­டா­ய­மாகும்.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வரை, தமிழர், முஸ்­லிம்­களின் உற­வுக்குப் ‘பிட்டும் தேங்­காய்ப்­பூவும்’, ‘நகமும் சதையும்’ ஆகி­யவை உதா­ர­ணங்­க­ளாக எடுத்துக் காட்­டப்­ப­டு­வ­துண்டு. அந்­த­ள­வுக்கு புவி­யியல், கலா­சார, பண்­பாட்டு அடிப்­ப­டையில் பின்னிப் பிணைந்த சமூ­க­மாக, முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் வாழ்ந்­துள்­ளார்கள்.

தமிழ், முஸ்­லிம்­க­ளுக்­கி­டை­யே­யான உறவு என்­பது பாரம்­ப­ரி­ய­மிக்­கது. சிங்­கள சமூகம் முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் தொடுத்­த­போ­தெல்லாம் தமிழ்த் தலை­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுத்து வந்­துள்­ளனர். தந்தை செல்­வாவின் பெடரல் கட்­சி­யுடன் முஸ்­லிம்கள் நல்ல உற­வு­களைக் கொண்­டி­ருந்­தனர். இலங்கை முஸ்­லிம்­களில் மூன்­றி­லி­ரண்டு பகு­தி­யினர் வட கிழக்­கிற்கு வெளியே வாழ்ந்­ததால் தேசிய சிங்­களக் கட்­சி­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி என தேசிய அர­சி­யலில் இணைந்து அவர்கள் ஈடு­பட்ட போதும் வட கிழக்கில் தமிழ் கட்­சி­க­ளு­டனே ஓர­ளவு புரிந்­து­ணர்­வுடன் முஸ்­லிம்கள் இணைந்து செயல்­பட்­டனர். இன்னும் சொல்­லப்­போனால் சுயாட்­சிக்­கான போராட்டம் ஆரம்­ப­மா­ன­போது தமிழ் மக்­களின் நியா­ய­மான போராட்­டங்­க­ளோடு முஸ்லிம் இளை­ஞர்­களும் தம்மை இணைத்துக் கொண்­டனர்.
காலப்­போக்கில் தமிழ்ப் போரா­ளிகள் முஸ்­லிம்­களின் பக்கம் தங்­க­ளது துப்­பாக்­கி­களை திருப்­பி­ய­போ­துதான் இரு சமூ­கத்­திற்­கி­டையே இடை­வெளி உரு­வா­னது. அந்த இடை வெளியை ஏற்­ப­டுத்­தி­யது தமி­ழின போராட்ட ஆயுத குழுக்­கள்தான். முஸ்­லிம்­களை ‘தமிழ் பேசும் சமூகம்’ அல்­லது ‘தமி­ழர்கள்’ என்ற வரை­ய­றைக்குள் கொண்­டு­வர முடி­யா­தென்று போராளி அமைப்­பு­களால் ஆயுத பாஷையில் முஸ்­லிம்­க­ளுக்குப் புரி­ய­வைத்து இடை­வெளி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

தமிழ்த் தாய­கத்தில் முஸ்­லிம்கள் ‘வந்­தே­றிகள்’ என்ற சொல்­லாக்கம் வர­லாறு நெடு­கிலும் தமிழ் ஆயு­ததா­ரி­களால் சொல்­லப்­பட்­டன. இதன் அடுத்­த­டுத்த கட்­டங்கள் தமிழ், முஸ்லிம் சமூ­கத்­திற்­கி­டை­யி­லான இடை­வெ­ளியை அதி­கப்­ப­டுத்­தி­யது. வட­கி­ழக்கில் முஸ்­லிம்க்ள இனச் சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்­டனர். ஒரே இரவில் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி காத்­தான்­கு­டியில் பள்­ளி­வா­சலில் இரவு நேரம் இஷாத் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­டப்ட தாக்­கு­தலில் முதி­ய­வர்கள் சிறு­வர்கள் உட்­பட 103 பேர் கொல்­லப்­பட்­டார்கள். 140 க்கும் மேற்­பட்டோர் காயப்­டப்­டி­ருந்­தார்கள்
விடு­தலைப் புலி­களின் காத்­தான்­குடி பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தலைத் தொடர்ந்து இக் காலப் பகு­தியில் ஏறாவூர், முள்­ளிப்­பொத்­தானை மற்றும் அழிஞ்­சு­பொத்­தானை உட்­பட கிழக்­கி­லுள்ள முஸ்லிம் கிரா­மங்கள் மீது நடத்­திய தாக்­கு­தல்கள், கொலை வெறி­யாட்­டங்கள் தமிழ், முஸ்லிம் இனங்­க­ளுக்­கி­டை­யே­யான உறவின் ஒரு நிரந்­தரப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அன்று ஏற்­பட்ட பாதிப்பு 30 வருடம் கடந்தும் இன்­னமும் பழைய நிலைக்குத் திரும்­ப­வில்லை என்­பது துர­திஷ்­ட­வ­ச­மாகும்.

இஸ்­ரேலின் ‘மொசாத்’ மற்றும் இந்­தி­யாவின் ‘ரோ’ அமைப்­புகள் மூலம் பயிற்­சி­பெற்ற தமிழ்ப் போரா­ளிகள் முஸ்லிம் எதிர்ப்­பா­ளர்­க­ளாக மாறிப்­போ­யினர். இந்த இரு நாடு­களும் வட கிழக்கில் முஸ்­லிம்கள் இருக்கும் வரை தமிழ்த் தாயகம் என்­கிற இலட்­சி­யத்­திற்கு தடை என்­பதை தமிழ்ப் போரா­ளி­க­ளுக்கு சொல்லிக் கொடுத்­தன. இந்த இரு நாடு­களின் சுய­ந­லன்­க­ளுக்­காக முஸ்­லிம்­களை நோக்கி தமிழ் ஆயு­த­தா­ரிகள் தங்­க­ளது துப்­பாக்­கி­களை திருப்­பிய கசப்­பான உண்­மையை தமிழ் சமூகம் இன்றும் புரிந்­த­தாகத் தெரி­ய­வில்லை.
தமி­ழி­னத்தின் நியா­ய­மான சுயாட்­சிக்­கான போராட்டம் யுத்­தத்தின் மூலம் நசுக்­கப்­பட்­ட­தற்­கான முக்­கிய காரணம் முஸ்­லிம்­களின் தனித்­து­வத்தை, உரி­மை­களை, தமி­ழினம் மறுத்து சிங்­கள இன­வா­தத்தைப் போன்றே தமி­ழி­ன­வா­தத்தை தமிழ்ப் போரா­ளிகள் ஆயுத முனையில் முஸ்­லிம்கள் மீது திணித்­த­மையை யாராலும் மறுக்­க­மு­டி­யாது.

இந்த சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யதில் தமிழ்ப் போரா­ளி­களின் பங்­க­ளிப்பு மிக அதிகம். அந்­த­வ­கையில் தமிழ்ப் போராளி அமைப்­பு­களால் முஸ்­லிம்­க­ளுக்கு மறுக்­கப்­பட்ட உரி­மை­களை, அங்­கீ­கா­ரத்தை தமிழ்க் கட்­சிகள் தர முன்­வர வேண்டும்.

ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று தமிழ் அர­சி­யல்­வா­திகள் சிலர் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அர­சியல் இன­வாதப் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். முஸ்­லிம்கள் பார­பட்சம் காட்­டு­கின்­றனர்; நிலத்தைப் பறிக்­கின்­றனர்; வியா­பா­ரத்தைக் கைப்­பற்­று­கின்­றனர்; மதம் மாற்­று­கின்­றனர்; தமிழ் கலா­சா­ரத்தைக் கெடுக்­கின்­றனர்; அர­சியல் அதி­கா­ரத்தை விட்டுத் தரு­கின்­றார்கள் இல்லை; முஸ்­லிம்­க­ளுக்குள் அடிப்­ப­டை­வாதம் ஊடு­ருவி இருக்­கின்­றது என்ற பிர­சா­ரங்­க­ளோடு தமது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாத பிர­சா­ரங்­களை முடிக்­கி­விட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்­க­மு­டி­கி­றது.
இந்­தி­யா­வி­லி­ருந்து வடக்கு- கிழக்குப் பிர­தே­சங்­களில் ஊடு­ரு­வி­யுள்ள இந்­துத்­துவா அமைப்பும் இதன் பின்­ன­ணியில் செயற்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. பௌத்த – – இந்து உற­வுப்­பாலம் என்று கூறிக்­கொண்டு, தமிழ் மக்­க­ளுக்­குள்­ளேயே சமய முரண்­பா­டு­களை தோற்­று­விப்­பதே இந்­துத்­துவா அமைப்பின் நோக்­க­மென்று ஏலவே குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. பௌத்த– – இந்து என்ற அடிப்­ப­டையில் ஒற்­றுமை ஒன்றைக் கட்­டி­யெ­ழுப்ப பௌத்த பிக்­கு­மாரும் சில தமிழ் சைவக் குருக்­களும் ஒன்­றி­னைந்­துள்­ளனர். அதற்கு ஆத­ர­வாக தமிழ் கிறிஸ்­தவ குரு­மா­ரையும் இவர்கள் அழைத்­துள்­ளனர்.

தமிழ் மக்­க­ளுடன் தங்­க­ளுக்குப் பிரச்­சினை இல்­லை­யென்றும் போர்க்­கா­லத்தில் சில தவ­றுகள் நடத்­த­தா­கவும் ஆனாலும் அதனை மறந்து தமிழ் மக்­க­ளுடன் நல்­லு­றவைப் பேணி பௌத்த – இந்­து­ச­மய உறவை வளர்க்க வேண்­டு­மென்றும் கூறி பௌத்த பிக்­குமார் சிலர் பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

ஆனால், வடக்கு – கிழக்குப் பிர­தே­சங்­க­ளி­லுள்ள தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய காணிகள் இலங்கை இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்­புடன் அப­க­ரிக்­கப்­பட்டு, அங்கு பௌத்த பிக்­குமார் விகா­ரை­களை நிர்­மா­ணித்து வரு­கின்­றனர். புத்தர் சிலை­களை வைக்­கின்­றனர். தமிழர் பகு­தி­களில் திட்­ட­மி­டப்­பட்ட சிங்­கள குடி­யேற்ற்ங்கள் இடம்­பெ­று­கின்­றன. இவற்றை எதிர்க்­காத பௌத்த பிக்­குமார், கல்­முனை வடக்கு தமிழ் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்­காக நடத்­திய உண்­ணா­வி­ரதப் போராட்டம் நகைப்­புக்­கி­ட­மா­ன­தாகும்.

மீண்­டு­மொரு தமிழ் – முஸ்லிம் மோதலை உரு­வாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழு­வ­தையும் பௌத்த – சிங்­கள நாடாக மாற்­று­வதே பௌத்த பேரி­ன­வா­தி­களின் நோக்­க­மாகத் திகழ்­கி­றது. அதன் முதல் நட­வ­டிக்­கையே இந்த பெளத்த – தமிழ் உறவு காதல் பிர­க­டனம் என்­பது வெள்­ளி­டை­மலை.
வட­கி­ழக்கில் தமிழ் , முஸ்லிம் மக்­களின் சமூக உறவை திட்­ட­மிட்ட ரீதியில் பிரிப்­ப­தற்கு சில இனவாதிகள் அரசியல் ரீதியாக முயற்சி செய்கின்றனர். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்தத் தேவைகளை அடைந்துகொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் – தமிழ் உறவு குறித்து அவ்வப்போது பலரும் சாதக பாதகமாக விவாதிப்பதுண்டு. இவ்வாறான விவாதங்களை எடுத்து நோக்கினால், இவ்வகை விவாதங்கள் அனைத்தும் அவ்வப்போது மேலேழும் அரசியல் போக்கில் நிலைகொண்டிருப்பதை காணலாம். துரதிஷ்டவசமாக இலங்கையில் காணப்படும் அரசியல் கட்சிகள் அநேகமானவை இனச்சார்பு கட்சிகளாகவே காணப்படுகின்றன. இனங்களுக்கிடையிலான துவேஷக் கருத்துக்கள் தேர்தல் காலங்களிலேயே அதிகம் பகிரப்படுகின்றன. அதுவும் அரசியல்வாதிகளினாலேயே அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில் சிறுபான்மை சமூக சிவில் அமைப்புக்கள், மதத் தலைவர்கள் அரசியல் இலாபங்களுக்கப்பால் பொதுவான இலக்குகளை வரையறுத்து இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது மிக முக்கியமானது.

எம்.ஐ.எம். அன்வர் (ஸலபி)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.