நிகாப் தடையை கொண்டு வர ஜனாதிபதியே அவசரப்படுத்துவதாக நீதியமைச்சர் கூறினார்

தெஹிவளை ஜூம்ஆ பள்ளி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

0 644

நிகாப் தடைச் சட்­டத்தைக் கொண்­டு­ வ­ரு­வ­தற்கு ஏன் இந்த அவ­சரம் என நான் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவைத் தொடர்பு கொண்டு கேட்­ட­தற்கு, ஜனா­தி­ப­தியே இதனை அவ­ச­ரப்­ப­டுத்­து­வ­தாக கூறினார். எனவே இது தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தி­யுடன் பேச­வேண்­டி­யி­ருக்­கின்­றது என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் ஆலோ­சனை மற்றும் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்றி எத்­த­கைய முடி­வு­க­ளையும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது­வரை மேற்­கொண்­ட­தில்­லை­யென்றும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னங்கள் இணைந்து தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நேற்று முன்­தினம் நடாத்­திய விசேட மாநாட்டில் உரை­யாற்­றிய போது அமைச்சர் மேலும் கூறி­ய­தா­வது,
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட அச்சம், மன உளைச்­சல்கள் மற்றும் பாதிப்­புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பௌசியின் வீட்டில் பல நாட்­க­ளாக ,பல மணித்­தி­யா­லங்கள் அமர்ந்து பேசி­யி­ருக்­கின்றோம். ஜம்இய்­யத்துல் உல­மா­வுடன் பல தட­வைகள் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றோம். அர­சி­யல்­வா­திகள் சமூக பிரச்­சி­னை­களை தீர்க்­காமல் வெறு­மனே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­க­ளென உங்­களில் யாரா­வது நினைத்தால் அது தவ­றா­னது, உரி­மை­க­ளையும் அடை­யா­ளங்­க­ளையும் இழந்­து­வி­டு­வோமா என்ற அச்சம் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருப்­பது போன்று எமக்கும் இருக்­கின்­றது.

கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் திரு­கோ­ண­ம­லைக்கு நான் சென்­றி­ருந்த போது உல­மாக்­களில் சிலர் “எமது உரி­மை­களை பறிக்க இட­ம­ளித்து விடா­தீர்கள்” என்று கண்ணீர் ததும்ப தெரி­வித்­தனர்.இவ்­வா­றான அச்சம் நாட்டில் பர­வ­லாக காணப்­ப­டு­கின்­றது. சமூ­க­வ­லைத்­த­ளங்­களின் தாக்­கமும் இதி­லுள்­ளதா? என்ற கேள்­வியும் எழு­கின்­றது.

அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்று அடுத்த நாள் காலை 7.30 க்கு இடம்­பெற்ற அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­திற்கு சென்­ற­போது, நிகாப் தடை தொடர்பில் அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­ததை காண முடிந்­தது. அமைச்­ச­ரவை பத்­திர நகலை படித்­துப்­பார்ப்­ப­தற்கு எங்­க­ளுக்கு அவ­காசம் கிடைத்­தி­ருக்­க­வில்லை.

இந்த விடயம் தொடர்பில் ஆகஸ்ட் 3ஆம் திகதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளை­யுடன் பேசினேன். இந்த பத்­தி­ரத்தை சிறிது காலத்­திற்கு நிறுத்­தி­வைக்க முடி­யுமா என கோரிய போது, ஜனா­தி­பதி அவ­ச­ரப்­ப­டுத்­து­வ­தாக கூறினார். அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்த தடை, அந்த சட்டம் நீக்­கப்­பட்டால் இயல்­பா­கவே காலா­வ­தி­யா­கி­விடும் என்­ப­தாலும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் பெறப்­பட்டு சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­திற்கு அது அனுப்­பப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மா­கு­வ­தற்கு இரண்டு அல்­லது மூன்று மாதங்கள் தேவைப்­ப­டு­மெ­னவும் தெரி­வித்தார். எனவே இது தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தி­யு­டனும் பேச­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

முஸ்லிம் திரு­மண மற்றும் விவ­ாகரத்துச் சட்­டத்தை மாற்­ற­வேண்டும் என்ற கோஷம் ஒரு சாரா­ரி­ட­மி­ருந்து எழுந்­துள்­ளது. நமது சமு­தா­யத்­தி­லுள்ள சிலர் முனைப்­புடன் இதற்­காக காரி­ய­மாற்­று­வ­துடன் முழு­நே­ரத்­தொ­ழி­லா­கவும் கொண்டு இயங்­கு­கின்­றனர். சமூ­கத்­தி­லுள்ள பெண்­களில் சிலர் ஆய்­வு­களை செய்து அதற்கு வலுச்­சேர்க்­கின்­றனர். சில பெண்­க­ளுக்கு நடந்த அநி­யா­யங்கள் மற்றும் துன்­பியல் சம்­ப­வங்­களை உதா­ர­ணத்­திற்கு எடுத்­துக்­கொண்டு பெண்­க­ளுக்கு பாதுகாப்பு கவசம் தேவையென வாதிடுகின்றனர். மாற்றுமத பெண்களையும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு இவ்வளவு அநியாயம் நடக்கிறது என்ற மாயையையும் ஏற்படுத்த முனைகின்றனர்.

எனவே இந்த நிலையில் எதிர்காலம் நமக்கு ஆபத்தானதாகவே இருக்கின்றது. எல்லா விடயங்களிலும் நாம் திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

ஏ.எஸ்.எம். ஜாவித்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.