முஸ்லிம் மாணவிகள் பர்தாவுடன் பரீட்சை எழுத தடை விதிக்கவில்லை

பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிப்பு

0 948

2019 ஆம் ஆண்­டுக்­கான கல்வி பொதுத் தரா­தர (உயர் தர) பரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் பர்­தா­வுடன் பரீட்­சைக்குத் தோற்­று­வதில் எந்­த­வித தடை­களும் இல்லை என பரீட்­சைகள் ஆணை­யாளர் சனத் பூஜித தெரி­வித்தார்.

இது தொடர்பில் தேவை­யான அனைத்து அறி­வு­றுத்­தல்­க­ளையும் பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
பூகொட, நிட்­டம்­புவ மற்றும் வெலி­மட உள்­ளிட்ட சில பகு­தி­களில் பர்தா அணிந்து உயர்­தர பரீட்­சைக்கு தோற்­று­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தாக நேற்று (05) திங்­கட்­கி­ழமை கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டுகள் குறித்து கேட்­ட­போதே பரீட்­சைகள் ஆணை­யாளர் மேற்­கண்­ட­வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கல்வி பொதுத் தரா­தர (உயர் தர) பரீட்­சைகள் நேற்று ஆரம்­ப­மா­கின. நிட்­டம்­புவ பிர­தே­சத்தில் இந்த பரீட்­சைக்கு தோற்றச் சென்ற முஸ்லிம் மாண­விகள் பர்­தா­வினை கழற்­று­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­ட­தாக எனது கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­விகள் பர்­தா­வினை கழற்ற வேண்­டிய எந்தத் தேவை­யு­மில்லை. ஆனால், பரீட்­சார்த்­திகள் அனை­வரும் தங்­களின் இரு காது­க­ளையும் மட்­டுமே வெளிப்­ப­டுத்த வேண்டும். இது தொடர்பில் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்கியுள்ளேன்” என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.