முஸ்லிம் தனியார் சட்டம் : முஸ்லிம் எம்.பி.க்களின் தீர்மானங்களும் உலமா சபையின் எதிர்வினைகளும்!

0 1,820

முஸ்லிம் தனியார் சட்டம் அல்­லது முஸ்லிம் விவாகம் மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் (MMDA) மிகவும் இக்­கட்­டான கட்­டத்தை எட்டி உள்­ளது. சுமார் பத்து வரு­டங்­களின் பின்னர் இச்­சட்­டத்­திற்­கான சீர்­தி­ருத்த அறிக்கை நீதி அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ளை­யிடம் ஜன­வரி 2018 ஆம் ஆண்டு கைய­ளிக்­கப்­பட்­டது.

சீர்­தி­ருத்த அறிக்கை ( Reform report) கைய­ளிக்­கப்­படும் போதும் அதற்கு முன்­னரும் சீர்­தி­ருத்தம் தொடர்பில் வாத– விவா­தங்கள் உச்ச நிலையை அடைந்­து­விட்­டன. சீர்­தி­ருத்தக் குழுவின் தலை­வ­ரான முன்னாள் உச்ச நீதி­மன்ற நீதி­பதி சலீம் மர்சூப் கைய­ளித்த அறிக்கை இரண்டு அறிக்­கை­களைக் கொண்ட ஓர் அறிக்­கை­யாகும்.

முஸ்லிம் சமூ­கத்தில் புரை­யோ­டிக்­கி­டக்கும் பூசல்­களின் அடை­யா­ள­மா­கவும் முன்­னேற்­றத்­துக்கு இசை­வான முடி­வு­க­ளுக்கு முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு­மைப்­பாட்டைக் காண்­பது கடினம் என்­ப­தற்குச் சான்­றா­கவும் அந்த ஓர் அறிக்கை வேறு­பட்ட இரு அறிக்­கை­க­ளாகக் காட்­சி­த­ரு­கி­றது. அதில் இடம்­பெற்­றுள்ள பிர­தான அறிக்கை அந்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் சலீம் மர்­சூபின் தலை­மையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­க­ளைக்­கொண்­டது. அதே அறிக்­கையில் இடம்­பெற்­றுள்ள சிறிய அறிக்கை பிர­தான அறிக்­கையை மறுக்கும் அல்­லது விமர்­சிக்கும் அறிக்­கை­யாக இணைக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் செய்யக் கூடாது என்று கூறி­வரும் பிரி­வினர் சலீம் மர்­சூபின் பிர­தான அல்­லது மைய அறிக்­கையை மறுத்து வரு­கின்­றனர். சீர்­தி­ருத்­தங்கள் என்ற வடிவில் சட்ட மூல­மாகப் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டாலும் அதை முறி­ய­டித்தே தீருவோம் என்றும் அப்­பி­ரி­வினர் பகி­ரங்­க­மாகக் கூறி­யுள்­ளது. முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்தை எதிர்ப்­பதில் ஜம்­இய்­யத்துல் உலமா முன்­ன­ணியில் உள்­ளது. இந்த எதிர்ப்பை ஜம்­இய்­யத்துல் உலமா பல வரு­டங்­க­ளாக வெளி­யிட்டு வரு­கி­றது. சலீம் மர்­சூபின் திருத்த அறிக்கை இரண்டு அறிக்­கை­க­ளாக்­கப்­பட்­ட­தற்கும் ஜம்­இய்­யத்துல் உல­மாவின் செல்­வாக்கே கார­ண­மாக இருந்­துள்­ள­தென்றும் கரு­தப்­ப­டு­கி­றது.
ஐம்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இச்­சட்டம் திருத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பெண்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பெண்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் பெண்கள் தரப்­பி­லி­ருந்தும் இச்­சட்­டத்­திற்கு எதிர்ப்­புகள் எழுந்­தன. சீர்தி­ருத்தம் தவிர்க்­க­மு­டி­யா­தது என்ற சூழ­லில்தான் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­து­த­ரும்­படி சலீம் மர்சூப் தலை­மையில் ஒரு ஆணைக்­கு­ழு­வினை அர­சாங்கம் நிய­மித்­தது. ஜம்­இய்­யதுல் உல­மாவின் அங்­கத்­த­வர்கள் மற்றும் உல­மாக்கள் உள்­ளிட்ட 18 அங்­கத்­த­வர்கள் சீர்­தி­ருத்­தப்­ப­ணியில் பங்­கேற்­றி­ருந்­தனர். எனினும் முடி­வுகள் பூச்­சிய நிலையில் உள்­ளன.

19 ஆம் நூற்­றாண்­டிற்கும் முற்­பட்ட சட்­டங்­களால் 21 ஆம் நூற்­றாண்டின் தேவை­களைப் பூர்த்தி செய்­ய­மு­டி­யாது. முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பல நாடு­களில் (எகிப்து, மொரோக்கோ, டியூ­னீ­சியா, துருக்கி) நாட்டின் சமய சட்­டங்­க­ளிலும் குறிப்­பாக தனியார் சட்­டங்­க­ளிலும் மாற்­றங்கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. ஷரி­யாவின் வழி­காட்­டு­தலில் நவீன விளக்­கங்­களின் ஊடாக சட்­டத்தில் மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. குர்­ஆனின் அடிப்­படைச் சிந்­த­னை­க­ளுக்கு மாற்றம் இன்­றியும் இம்­மாற்­றங்கள் அங்கு நிகழ்ந்­து­வ­ரு­கின்­றன. ஸலீம் மர்­சூபின் அறிக்கை பெரும்­பாலும் இந்த ஒழுங்­கி­லேயே அமைந்­துள்­ளது. நவீன தேவை­க­ளுக்கும் புதிய சிக்­கல்­க­ளுக்கும் பதில் தரக்­கூ­டிய அறிக்கை என்றும் இதனைக் குறிப்­பி­டலாம்.

சமூக மாற்­றத்­துக்கும் புதிய சவால்­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­து­வரும் இன்­றைய சூழலில் சட்­டங்­களில் சீர்­தி­ருத்தம் அவ­சி­ய­மா­ன­தாகும். நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்­டத்தைப் பொறுத்­த­வரை பெண்­க­ளுக்­கான நீதி என்ற விட­யத்தில் அது மிகவும் பின்­னடை வான­தாக உள்­ளது. 18 ஆம் நூற்­றாண்டு மனப்­பான்­மையில் வாழ்­வோ­ரினால் புதிய சட்­டங்­க­ளையும் மாற்­றங்­களையும் புரிந்­து­கொள்­ளவே முடி­யா­தி­ருக்­கின்­றது. ஆண் தலை­மைத்­து­வமும் பெண்கள் பற்­றிய குறு­கிய நோக்­கு­களும் இன்னும் நிலைத்­தி­ருக்கும் சமூ­கத்தில் மாற்­றங்கள் பற்­றிப்­பே­சு­வது இல­கு­வா­ன­தல்ல. எமது சமயத் தலை­மைகள் பழை­மைக்­கோட்­பா­டு­க­ளுக்­கா­கவும் சமய அடிப்­ப­டை­வா­தத்தின் வெற்­றிக்­கா­கவும் மட்­டுமே போரா­டு­வ­தாகத் தெரி­கி­றது.

‘இன்று இம்­மாற்றம் நடை­பெ­றா­விட்டால் இனி எப்­போதும் இல்லை’ என்ற ஒரு இக்­கட்­டான சூழ்­நிலை உரு­வாகி உள்­ளது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று இன­வா­திகள் எழுப்பும் கோஷங்­களில் முஸ்லிம் தனியார் சட்­டமும் குறி­வைக்­கப்­பட்­டுள்­ளது. திருத்­தங்கள் இருந்தால் அவற்றை நாம்தான் முன்­வந்து செய்­ய­வேண்டும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதை உணர்ந்­துள்­ளனர்.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்ற வளா­கத்தில் அண்­மையில் கூடி எடுத்த முடிவில் சலீம் மர்­சூபின் மைய அறிக்­கையில் இருக்கும் முக்­கிய தீர்­மா­னங்­களை ஏற்றுக் கொள்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இச்­செய்தி ஊட­கங்கள் மூலம் அறி­விக்­கப்­பட்­ட­போது மக்கள் ஆறுதல் அடைந்­தனர். சீர்­தி­ருத்­தங்கள் வேண்­டப்­படும் வேளையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதைச் சட்­ட­மாக்க விரும்­பி­யது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய முன்­னேற்­ற­மான நட­வ­டிக்­கை­க­ளாகும். ஆனால் ஜம்­இய்­யத்துல் உலமா தலை­வர்கள் இந்த முடிவைக் கடு­மை­யாக எதிர்த்­தனர். இதற்கு எதி­ரான பிர­சா­ரங்­களை ஜம்­இய்­யத்துல் உலமா நாடு முழுக்கக் கொண்டு சென்­றது.

பெண்கள் தொடர்பில் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­களும் வெளியில் பேசப்­ப­டாத விட­யங்­களும் அதி­க­ரித்­துள்ள நிலையில் சம­யத்தின் பேரில் தடை­களைக் கொண்டு வரு­வது பாரா­ளு­மன்ற விவா­தங்­களின் போதும் வெளியில் விவா­தங்­களை முன்­வைக்கும் போதும் சிக்­க­லான நிலை­மைகள் உரு­வா­கலாம். இஸ்லாம் மார்க்கம் பற்­றிய தவ­றான விளக்­கங்­க­ளுக்கு இட்­டுச்­செல்­லவும் வாய்ப்­புக்கள் உள்­ளன.

இந்தப் பின்­ன­ணியில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முடிவை எப்­படி நாம் குறை­காண்­பது. ரதன தேரரின் உண்­ணா­வி­ர­தத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கும் நாட்­டிற்கும் ஏற்­ப­ட­வி­ருந்த பாரிய அழிவை நிறுத்­து­வதில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எடுத்­த­மு­டிவில் நாம் குறை­கா­ண­வில்­லையே. அந்த அதி­ரடி முடி­வினால் ஏற்­பட்ட நன்­மையை முழு நாடுமே அவ­தா­னித்­தது. அர­சியல் களத்தில் இருந்­ததால் ஆபத்தின் உச்­சத்தை அவர்கள் அறிந்து அந்த முடி­விற்கு வந்­தனர். முஸ்லிம் தனியார் சட்ட விட­யத்தில் தற்­போதும் அவர்கள் எடுத்­துள்ள முடிவும் அதற்குச் சற்றும் குறை­வா­ன­தல்ல. நீதி­யையும் பகுத்­த­றி­வையும் பயன்­ப­டுத்­து­வ­தோடு பல்­லின நாடொன்றில் சமயச் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கவ­லை­யோடு சிந்­திக்­கின்­றனர்.

ஹலால் பிரச்­சினை கொழுந்­து­விட்டு எரிந்­த­போது முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் மௌனம் சாதித்­ததால் நிகழ்ந்த அனர்த்­தங்­களை முஸ்லிம் சமூகம் இன்னும் மறக்­க­வில்லை. ஜம்­இய்­யத்துல் உலமா தலை­வர்­களின் ஹலால் முன்­னெ­டுப்­புகள் பெரும்­தோல்­வியில் முடிந்­தன. இன­வா­தி­களும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் இப்­பி­ரச்­சி­னையைத் தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்­து­வதில் வெற்­றி­பெற்­றனர். முஸ்லிம் சமூகம் பெரும் அவ­லங்­க­ளைச்­சந்­தித்­தது.

வாக்­கு­வங்­கி­களைப் பலப்­ப­டுத்­து­வது கண்­ட­தை­பேசி மக்கள் மத்­தியில் பிர­பல்யம் அடை­வது போன்ற வழ­மை­யான அர­சியல் முயற்­சி­களை கடந்து, கொள்கை ரீதி­யா­கவும் தூர நோக்­கு­டனும் முடி­வுகள் எடுக்க முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் முன்­வந்­துள்­ளனர். இவ்­வகை முடி­வு­க­ளுக்குச் சமூகம் ஆத­ரவு தர­வேண்டும்.

ஆனால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒரு முக­மான இந்த முடிவை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் சில தலை­வர்கள் சவா­லுக்­குள்­ளாக்கி உள்­ளனர். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முடிவு மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்டும் என்றும் இவர்கள் கூறி­வ­ரு­கின்­றனர். ஹலால் பிரச்­சி­னைபோல் மீண்டும் ஒரு குழப்­ப­நிலை நாட்டில் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. ஐம்­பது வரு­டங்­க­ளாக எதிர்­பார்க்­கப்­பட்ட சீர்­தி­ருத்­தங்கள் சாத்­தி­ய­ம­டை­யக்­கூ­டிய சூழலில் இவர்கள் ஏற்­ப­டுத்தும் இத்­தடை மாபெரும் வர­லாற்றுத் தவ­றாகும்.
ஹலால் திட்­ட­மாக இருந்­தாலும் தனியார் சட்­ட­மாக இருந்­தாலும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஒரு தலைப்­பட்­ச­மாகத் தீர்­மா­னங்கள் எடுப்­பதும் தமக்­கி­ருக்­கின்ற சமய செல்­வாக்கைப் பக்­க­சார்­பாகப் பயன்­ப­டுத்­து­வதும் சிறந்­த­தல்ல, ஜன­நா­யக நடை­மு­றையும் அல்ல. முக்­கி­ய­மான தேசிய விட­யங்­களில் உலமா சபை முஸ்லிம் அர­சி­யல்­வா­திளை ஓரங்­கட்­டு­வது நாடு இப்­போ­துள்ள சூழ்­நி­லையில் எவ்­வ­கை­யிலும் நல்­ல­தல்ல.

அர­சி­யல்­வா­தி­க­ளாக இருந்­தாலும் உலமா சபைத் தலை­வர்­க­ளாக இருந்­தாலும் மக்­களின் பொது­நலன், சமூகப் பாது­காப்பு, தூர­நோக்கு, ஜன­நா­யக உணர்வு, தேசிய ஐக்­கியம் என்ற கொள்­கை­க­ளுக்கே முன்­னு­ரிமை தர­வேண்டும். மக்­க­ளி­டையே அதி­ருப்­தியும் மனக்­கு­ழப்­பமும் அதி­க­ரித்­தி­ருப்­பதை உணரத் தவ­று­வது ஆபத்­தா­ன­தாகும். குறு­கிய உணர்­வு­க­ளுக்கு அடி­மை­யாகி எடுக்­கப்­படும் தீர்­மா­னங்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்குப் பேரா­பத்­துக்­களை விளை­விக்­கக்­கூடும்.

இன்று முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்­சி­னைகள் பெரும்­பான்­மை­யினர் மத்­தி­யிலும் இன­வா­திகள் மத்­தி­யிலும் பிர­தான பேசு­பொ­ரு­ளாகி உள்­ளது. சிறு­மிகள் திரு­மணம், முஸ்லிம் பெண்கள் தலாக் பெறு­வதில் பிரச்­சி­னைகள், குழந்­தைகள் தாப­ரிப்பில் பார­பட்சம் என்­ப­வற்றை பற்றி சரி­யா­கவும் தவ­றா­கவும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன்று இது நான்கு சுவர்­க­ளுக்குள் பேசப்­படும் விடயம் அல்ல. பெண் உரிமை, மனித உரி­மைகள், பால் நிலை சமத்­துவம் (Gender Equality), சிறுவர் உரி­மைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாட வேண்­டிய பல விட­யங்கள் தனியார் சட்­டத்தில் இருப்­பதால் மற்­ற­வர்கள் முன்­வைக்கும் எல்லா வாதங்­க­ளையும் எதிர்­கேள்­வி­க­ளையும் இன ரீதி­யா­னவை என்று அலட்­சி­யப்­ப­டுத்­த­மு­டி­யாது.

சிறு­பான்­மை­யினர் விட­யத்தில் நடு­நி­லை­யா­கவும் சாத­க­மா­கவும் கருத்­து­களை வெளி­யிடும் அர­சியல் விமர்­சகர் ஜெஹான் பெரேரா கொழும்பு டெலிக்­ராபில் (3, June 2019) எழு­தி­யுள்ள கட்­டு­ரையில், தனியார் சட்­டமும் ஜம்­இய்­யத்துல் உல­மாவும் பற்­றியும் குறிப்­பி­டு­கின்றார். முஸ்லிம் சமூகம் தன்னை சுய விமர்­ச­னத்­திற்­குள்­ளாக்­கு­வது அவ­சியம் என்றும் மைய நீரோட்­டத்தில் உள்ள முஸ்­லிம்­களின் நடு­நி­லை­யான முன்­னேற்­ற­மான கருத்­துகள் கடும் போக்­கா­ளர்­களால் தடைப்­ப­டக்­கூ­டாது என்றும் அதில் அவர் கூறி­யுள்ளார். அதி­லி­ருந்து ஒரு சிறு பகு­தியைப் பார்ப்போம்.

மைய நீரோட்ட முஸ்­லிம்­களின் (Mainstream Muslim Community) சமயத் தலை­வர்கள் அங்­கம்­வ­கிக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா (ACJU) தனியார் சட்டச் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு கடந்த காலத்தில் தடை­யாக இருந்­தது. ஆனால் தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிகள் கார­ண­மாக பல பிரச்­சி­னை­களில் தனது நிலைப்­பாட்டை மீள் பரி­சீ­லனை செய்­வ­தற்கு அது முன்­வந்­துள்­ளது. அவ­சர காலச்­சட்­டத்தை உத்­தே­சித்து முகத்தை முழு­வ­து­மாக மறைக்கும் புர்க்­காவை அது தடை­செய்­துள்­ளது. தமது சமூ­கத்­திற்குள் தலை தூக்­கி­யுள்ள வன்­மு­றைத்­தீ­வி­ர­வாதம் பற்றி அறிந்­து­கொள்­வ­தற்கும் முஸ்லிம் சமூ­கத்­தினுள் ஒரு பிரி­வினர் முன்­வந்­துள்­ளனர். சுய­வி­மர்­சனம் தேவை என்­ப­தையும் இன்று முஸ்­லிம்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளுடன் மேலும் அதிகத் தொடர்புகள் தேவை என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
முஸ்லிம்களின் இந்த நிலைப்பாட்டை நாம் பாராட்டவேண்டும். தீவிரவாதிகள் ஒரு சிலரின் செயல்களுக்காக அனைத்து முஸ்லிம் மக்களையும் தண்டிப்பது தவறாகும் என்று ஜெஹான் பெரேரா அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதாவது மைய நீரோட்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளும் முன்னெடுப்புகளும் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளது என்பதை அவர் பதிவு செய்கிறார்.

ஆபத்து தலைக்கு மேல் ஆயத்தமாக இருந்தபோது அ.இ.ஜ.உ. சில விட்டுக் கொடுப்புகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் மைய நீரோட்ட முஸ்லிம் சமூகத்தின் நியாயமான உணர்வுகளை அது அலட்சியப்படுத்தி வருகிறது. தனியார் சட்ட சீர்திருத்தத்தைத் தடுப்பதற்கு அல்லது அதை வெறும் சடங்காக உருமாற்றுவதற்கு பகீரத முயற்சிகளில் அது ஈடுபட்டு வருகிறது.

சட்டத் திருத்தம் என்பது சமூகத்தின் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எடுக்கப்படும் முக்கிய பணியாகும். முஸ்லிம் தனியார் சட்டம் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், பெண்களுக்கான நீதி, சிறுவர் உரிமை, பணக்கொடுக்கல் வாங்கல் பற்றியது என்பதை நாம் மறக்கக் கூடாது. புதிய சட்டத்திருத்தத்தினால் இப்பிரச்சினைகளை தீர்க்கமுடியாது போனால் சீர்திருத்தத்தினால் எந்தப் பயனும் இல்லை. உலமா சபையின் போக்கில் மாற்றங்கள் தேவை.

பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம்.அனஸ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.