நாட்டின் இறைமையை பாதுகாக்க தம்முயிரைத் தியாகம் செய்த ஷுஹதாக்கள்

0 644

கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் இலங்கை முஸ்­லிம்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளனர். முஸ்­லிம்கள் மீதும் குறிப்­பாக காத்­தான்­குடி முஸ்­லிம்கள் மீதும் சில­ரினால் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு பல்­வேறு விமர்­ச­னங்­களை அடுக்­க­டுக்­காக முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலையில் இலங்கை முஸ்லிம் சமூக இழப்­புக்­களின் அடை­யாளச் சின்­ன­மான ஷுஹ­தாக்கள் தினம் 03.08.2019 சனிக்­கி­ழமை 29 ஆவது வரு­ட­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது.

வடக்­கையும் கிழக்­கையும் தனி­நா­டாக தமி­ழீ­ழ­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி பிரி­வி­னைக்­காக போரா­டிய தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக இந்த நாட்டின் இற­மையைப் பாது­காத்­த­வர்கள் 03.08.1990 அன்று காத்­தான்­குடிப் பள்­ளி­வா­சல்­களில் இடம் பெற்ற தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த 103 முஸ்­லிம்­க­ளாகும்.

அன்று தமி­ழீ­ழத்­துக்கு முஸ்­லிம்­களும் ஆத­ரவு வழங்­கி­யி­ருந்தால் இந்த நாடு பிரி­வி­னையை சந்­தித்­தி­ருக்கும். நாடு துண்­டாப்­பட்டு நாட்டின் இற­மைக்கும் தேசிய பாது­காப்­புக்கும் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்கும். ஆனால் இந்த நாட்டு முஸ்­லிம்கள் அதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை. நாட்டின் தேசி­யத்­தோடு நின்று இறை­மையைப் பாது­காக்க பாடு­பட்­ட­போ­துதான் முஸ்­லிம்கள் மீதான இனச் சுத்­தி­க­ரிப்பு விடு­த­லைப்­பு­லி­க­ளினால் மேற் கொள்­ளப்­பட்­டது.

1990 ஆம் ஆண்டு இலங்­கையில் மிக மோச­மான காலப்­ப­கு­தி­யாகும். யுத்த மேகங்கள் இலங்­கையின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் சூழ்ந்­தி­ருந்த மரண அச்­சமும் பீதியும் நிறைந்து காணப்­பட்ட ஒரு காலப்­ப­கு­தி­யாகும்.

பல தசாப்­தங்­க­ளாக இருந்து வந்து தேசிய நல்­லி­ணக்கம், இன நல்­லு­றவு, சமூக ஒற்­றுமை அனைத்தும் சீர்­கு­லைந்து இன முரண்­பாடு உக்­கி­ர­மாக இருந்த கால கட்­ட­மாக இந்தக் காலப்­ப­கு­தியை கூற­மு­டியும்.

இந்தக் காலப்­ப­கு­தியில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் முஸ்­லிம்கள் மீதான இனச் சுத்­தி­க­ரிப்பை மிக மோச­மாக மேற்­கொண்­டி­ருந்­தனர்.

வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யமை, கிழக்கில் பல முஸ்லிம் கிரா­மங்­களில் இருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்­றி­யமை, அச்­சத்­தி­னாலும் மரண பயத்­தி­னாலும் தமது சொந்த நிலங்­களை விட்டு முஸ்­லிம்கள் வெளி­யே­றி­யமை, கடத்­தல்­களும் கொலை­களும் என இவ்­வாறு பல அசா­த­ாரண சம்­ப­வங்கள் இடம் பெற்­றன. இந்தக் காலப்­ப­கு­தி­யில்தான் உலகில் இடம்பெற்ற மிக­மோ­ச­மான படு கொலை­களில் ஒன்­றாக கரு­தப்­படும் காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொ­லையும் இடம்­பெற்­றது.

காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை இடம் பெறு­வ­தற்கு ஒரு மாதத்­திற்கு முன்னர் புனித ஹஜ் கட­மையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்­தான்­கு­டிக்கு திரும்­பிக்­கொண்­டி­ருந்த நூற்­றுக்கு மேற்­பட்ட காத்­தான்­குடி ஹாஜி­மார்­களும் அவர்­க­ளோடு வந்த உற­வி­னர்­களும் இன்னும் சில பொதுமக்­களும் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளினால் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள குருக்கள் மடத்தில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டனர். இவ்­வாறு கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­ட­வர்­களில் பெண்கள், சிறு­வர்கள், குழந்­தைகள் என பலரும் அடங்­கு­கின்­றனர்.

இந்த கடத்தல் சம்­பவம் இன நல்­லி­ணக்­கத்­திற்கு மோச­மான ஒரு விளைவை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் மற்­றொரு மிக மோச­மான மிலேச்­சத்­த­ன­மான கொலைச் சம்­ப­வ­மாக பள்­ளி­வாசல் படுகொலைச் சம்­பவம் இடம்பெற்­றது.
காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்­ஆப்­பள்­ளி­வாசல், அதே பகு­தி­யி­லுள்ள மஸ்­ஜிதுல் ஹுஸை­னிய்யா பள்­ளி­வாசல் ஆகிய இரண்டு பள்­ளி­வா­சல்­க­ளிலும் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த 124 முஸ்­லிம்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். பள்­ளி­வா­ச­லுக்­குள்­ளேயே 103 பேரும் பின்னர் 21 பேரு­மாக 124 பேர் இதில் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

03.08.1990 அன்­றி­ரவு இவ்­வி­ரண்டு பள்­ளி­வா­சல்­க­ளிலும் புனித இஷாத் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த போது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் நடாத்­திய குண்­டுத்­தாக்­கு­தல்கள் துப்­பாக்கிச் சூடு­க­ளினால் 103 முஸ்­லிம்கள் ஸ்தலத்­தி­லேயே கொல்­லப்­பட்­டனர்.

அன்று வெள்­ளிக்­கி­ழமை இரவு புனித இஷாத் தொழு­கைக்­கான அதான் சொல்­லப்­பட்­டதும் சிறி­யவர் பெரி­யவர் என அனை­வரும் பள்­ளி­யினுள் சென்று வுழூச் செய்து கொண்டு இமாமின் பின்னால் வரி­சை­யாக நின்று தொழுது கொண்­டி­ருந்த போது விடு­த­லைப்­பு­லிகள் இவர்கள் மீது துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்து குண்­டுத்­தாக்­கு­த­லையும் நடாத்­தினர். இதன் போது பலரின் உயிர் அவ்­வி­டத்­தி­லேயே பிரிந்­தது. விடு­த­லைப்­பு­லிகள் பள்­ளி­யினுள் புகுந்து துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­கின்­றார்கள் என்­பதை அங்கு தொழுது கொண்­டி­ருந்த பலரும் தெரிந்து கொண்­டார்கள்.

பலர் படு­கா­யங்­க­ளுடன் குற்­று­யிராய்க் காணப்­பட்டு பின்னர் மர­ணித்­த­வர்­களும் இதில் அடங்­கு­கின்­றார்கள். இரா­ணுவ சீரு­டையில் அங்கு வந்த புலிகள், இப்­பள்­ளி­வா­ச­லுக்கு தொழு­கைக்­காக வந்த சிலரை ”உள்ளே அவ­ச­ர­மாகச் செல்­லுங்கள்” என பள்­ளிக்குள் அனுப்பி விட்டே அவர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்­ட­தாக பலர் இன்றும் தெரி­விக்­கின்­றனர்.

பள்­ளி­வாசல் எங்கும் இரத்த ஆறு, மரண ஓலங்கள். தந்தை, மகன், ஒரே குடும்­பத்தில் இரண்டு மூன்று சகோ­த­ரர்கள், மச்சான், மச்­சினன்…. இவ்­வாறு உற­வு­மு­றை­யான பலரும் இதில் உயி­ரி­ழந்­த­துடன் இன்னும் சிலர் படு காய­ம­டைந்­தனர்.

இந்த தாக்­கு­தலை மேற் கொண்ட புலிகள் தப்­பித்துச் சென்­ற­தை­ய­டுத்து குடும்ப உற­வி­னர்கள் பொது மக்கள் என பெரும் எண்­ணிக்­கை­யி­லான மக்கள் இவ்­வி­ரண்டு பள்­ளி­வா­ச­லையும் நோக்கிச் சென்று உயி­ரி­ழந்­த­வர்கள் காய­ம­டைந்­த­வர்கள் அனை­வ­ரை­யுமே காத்­தான்­குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லுக்கு கொண்டு சென்று அங்­கி­ருந்து காய­ம­டைந்­த­வர்­களை மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­ய­துடன் மேல­திக சிகிச்சை தேவைப்­பட்டோர் மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து இலங்கை விமா­னப்­ப­டை­யி­னரின் விமா­னத்தின் மூலம் அம்­பாறை மற்றும் கொழும்பு போன்ற இடங்­க­ளி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர். இவ்­வாறு கொண்டு செல்­லப்­பட்­ட­வர்­களில் சிலர் பின்னர் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் உயி­ரி­ழந்­தனர்.

இச் சம்­ப­வத்தில் குடும்பத் தலைவன் உயி­ரி­ழந்­ததால் அக்­கு­டும்­பத்தினர் தமது வாழ்க்­கையைக் கொண்டு செல்­வ­தற்கு கஷ்­டப்­பட்­டனர். இன்றும் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். இளம் வயதில் வித­வை­க­ளான பல பெண்கள், தந்­தையை இழந்த பிள்­ளைகள் என இதில் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு குடும்­பத்­திலும் பல சோக வர­லா­றுகள் இருக்­கின்­றன.

இந்தச் சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்து பல மாதங்கள் வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சை பெற்று ஊன­முற்று வாழும் பலர் இன்றும் இதன் சாட்­சி­க­ளாக இருக்­கின்­றனர். இன்னும் உடம்பில் குண்டுச் சன்­னங்­க­ளுடன் வாழும் சிலரும் இருக்­கின்­றனர்.

இச் சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்து ஊன­முற்று வாழும் ஒரு சகோ­தரர் கருத்து தெரி­விக்­கையில், ” அன்று எனது தாயை பார்ப்­ப­தற்­காக நான் தாயின் வீட்­டுக்குச் சென்­றி­ருந்தேன். அப்­போது எனக்கு திரு­ம­ண­மாகி ஒரு வருடம் முடிந்­தி­ருந்­தது. 58 நாட்­க­ளே­யான குழந்­தையும் எனக்­கி­ருந்­தது.

அப்­போது பள்­ளி­வா­சலில் தொழுக்­காக அதான் சொல்­லப்­பட்டு தொழுகை ஆரம்­ப­மா­கிய போது எனது தாய் தொழுகை ஆரம்­ப­மாகி விட்­டது அவ­ச­ர­மாக பள்­ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள் என அனுப்­பினார்.

அப்­போது நான் மீரா ஜும்­ஆப்­பள்­ளி­வா­ச­லுக்கு வந்தேன். பள்­ளி­வா­சலின் முன் வளவில் எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்­டி­ருந்தார். நானும் அவரும் அவ்­வி­டத்தில் பேசிக் கொண்டு நின்ற போது அந்த வீதி­யினால் ஆயுதம் தரித்த சிலர் வரி­சை­யாக வரு­வதை கண்டேன். அச்சம் அடைந்த நாங்கள் அவ­ச­ர­மாக வுழூச் செய்து கொண்டு பள்­ளிக்குச் சென்று தொழு­கையில் இணைந்து சுஜூது செய்யும் போது பாரிய குண்டுச் சத்­தங்கள் கேட்க ஆரம்­பித்­தன. தொழு­கையில் இருந்த பலர் சரிந்து விழு­வதைக் கண்டேன் . நானும் காயங்­க­ளுடன் விழுந்து விட்டேன். எனது வயிற்றின் மேல் சிறுவன் ஒரு­வனும் விழுந்து கிடந்­ததை கண்டேன்.

சில நிமி­டங்­களின் பின்னர் நான் உட்­பட காயப்­பட்­ட­வர்கள் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு அங்­கி­ருந்து அம்­பாறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு சத்­திர சிகிச்­சைகள் செய்­யப்­பட்டு பல மாதங்கள் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து சிகிச்சை பெற்று இன்று ஒரு ஊன­முற்­ற­வ­ராக வாழ்ந்து வரு­கின்றேன்;.

இந்த பள்­ளி­வாசல் படு­கொலைச் சம்­ப­வத்­திற்கு முன்னர் சுய­மாக தொழிலில் ஈடு­பட்டு தொழிலில் முன்­னேற்­ற­மாக காணப்­பட்ட நான் இன்று ஒரு ஊன­முற்­ற­வ­னாக பாரிய தொழில் எதுவும் செய்ய முடி­யா­த­வ­னாக இருக்­கின்றேன்” என்­கிறார். இவ்­வாறு பலர் இந்த நிலையில் இன்றும் காணப்­ப­டு­கின்­றனர்.
இந்த வகையில் காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை என்­பது இலங்கை வாழ் முஸ்­லிம்­களின் வர­லாற்றில் என்றும் மறக்க முடி­யாத மறைக்க முடி­யாத ஒரு இரத்தக் கறை­ப­டிந்த வர­லாற்றுப் பதி­வாகும்.

இந்த இரண்டு பள்­ளி­வா­சல்­க­ளிலும் இன்றும் இதன் அடை­யா­ளங்கள் அழிக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றன. ஆன்டு தோறும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வாறு ஏறாவூர் உட்­பட வடக்கு கிழக்கின் பல பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்கள் மீதான மிக மோச­மான இனச் சுத்­தி­க­ரிப்பு படு­கொ­லை­களை விடு­த­லைப்­பு­லிகள் மேற் கொண்­டனர். 2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஷுஹ­தாக்கள் தினத்தின் போது காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை மற்றும் ஏறாவூர் படு­கொலைச் சம்­பவம் உட்­பட இவ்­வாறு முஸ்­லிம்கள் மீதான படு­கொ­லை­களின் போது கொல்­லப்­பட்­ட­வர்­களின் நினை­வாக இந்த தினத்தை தேசிய ஷுஹ­தாக்கள் தின­மாக ஷுஹ­தாக்கள் ஞாப­கார்த்த நிறு­வனம் பிர­க­டனம் செய்திருந்தது.

கடந்த கால யுத்தம் இலங்கையில் தமிழ்,சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது. இதில் முஸ்லிம்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்த பள்ளிவாசல்களில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவமும் ஒரு மிகப் பெரிய சான்றாகும்.

இந்த வரலாறுகளை மறந்து விடமுடியாது. முஸ்லிம்கள் இந்த நாட்டுக்காக இரத்தம் சிந்தி இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாத்து பிரிவினையை தடுத்துள்ளார்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையைப் பாதுகாத்த மாவீரர்கள் என்றும் கூறமுடியும்.

முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக காட்டுவதற்கு சில சக்திகள் முயன்று வரும் இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் அவசியமாக நினைவு கூரப்படவேண்டியவையாகும். முஸ்லிம்கள் ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு அல்லது பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தது கிடையாது. மாறாக நாடு பிளவுபடுவதற்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்காக பயங்கரவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது முஸ்லிம்களேயாவர் என்பதற்கு காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகளே இன்றும் அத்தாட்சியாக விளங்குகின்றன.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.