சட்­டமா அதிபர் திணைக்­களம் மீது பழி­சு­மத்­து­வதை ஏற்க முடி­யாது

பிரதி சொலிசிஸ்ட்டர் ஜெனரல் ஹபீஸ் நஸாட் நவபி

0 750

சஹ்­ரானை கைது செய்­வது தொடர்பில் சட்­டமா அதிபர் திணைக்­களம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் அவரை பிடித்­தி­ருக்­கலாம், குண்­டு­வெ­டிப்­புக்கள் இடம் பெற்­றி­ருக்­காது என தெரி­வுக்­குழு முன்­னி­லையில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டை முற்­றாக மறுப்­ப­தாக பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ஹபீஸ் நஸாட் நவவி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தெரி­வித்தார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்­ட­போதே இந்த வாக்­கு­மூ­லத்தை வழங்­கினார்.

2017 ஜுன் மாதத்தில் ஈ.ஈஆர் பிரிவில் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் ஊடாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு கோப்பு ஒன்று வரு­மாயின் எனக்கு அந்தக் கோப்பு வழங்­கப்­படும். பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ளரின் இறுதி அறிக்கை அடங்­கிய கடி­தங்கள் சில 2017.06.07 இல் எமக்குக் கிடைத்­தன. 2017.06.12 ஆம் திகதி எனக்கு அந்த கடி­தங்கள் அடங்­கிய கோப்பு கிடைத்­தது.

இதனை அப்­போது எனது கண்­கா­ணிப்பின் கீழ் இருந்த குழுவில் மலீக் அஸீ­ஸிடம் வழங்­கினேன். சஹ்ரான் என்ற நபர் கூறிய கருத்­துக்கள் தமிழ் மொழியில் இருந்­த­மையால் மலீக் அஸீ­ஸிடம் இந்த கோப்பை பார்க்­கு­மாறு வழங்­கி­யி­ருந்தேன். அதன் அடிப்­ப­டை­யி­லேயே அக்­கோப்பை வழங்­கினேன்.
பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ரு­டைய இறுதி அறிக்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே அது தொடர்பில் கோப்­பொன்றை ஆரம்­பித்தோம். அதில் சஹ்ரான் இரண்டு கருத்­துக்­களைக் கூறி­யுள்ளார். முஸ்­லிம்கள் பிறந்த நாளை கொண்­டா­டு­வது தவ­றா­னது என்று ஒரு பேச்­சிலும், தேசிய கொடியை ஏற்­று­வது இஸ்­லாத்­துக்கு எதி­ரா­னது என மற்­று­மொரு பேச்சை மேற்­கொண்­டுள்ளார். இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு குறித்த நபரை கைது­செய்து விசா­ரிக்க முடி­யுமா எனக் கேட்­டி­ருந்­தனர். ஏதா­வது குற்றம் இழைத்­தி­ருப்­ப­தாக ஒருவர் மீது நியா­ய­மான சந்­தேகம் இருந்தால் அதன் அடிப்­ப­டையில் பொலி­ஸா­ருக்கு அந்த நபரைக் கைது­செய்ய முடியும். ஒரு­வரை கைது­செய்ய முடி­யுமா என சட்­டமா அதி­ப­ரிடம் கேட்­ப­தாயின், பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு ஒரு­படி மேற்­சென்றே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஒரு­வரை கைது­செய்­யு­மாறு சட்­டமா அதிபர் பணிப்­புரை வழங்­கு­வ­தாயின் அந்த நபர் தொடர்பில் வலு­வான சாட்சி அடிப்­ப­டை­யொன்று இருக்க வேண்டும். ஆனால் வலு­வான சாட்­சி­யங்கள் அடங்­கிய விசா­ர­ணைகள் உள்­ள­டக்­கிய ஒரு பக்கம் கூட இருக்­க­வில்லை.

பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வி­னரால் ஆலோ­சனை கோரி கோப்பு ஒன்றை எமக்கு அனுப்­பி­யி­ருந்­தனர். 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் எம்மைச் சந்­தித்­த­போது முழு­மை­யான தக­வல்­க­ளுடன் வந்­தி­ருந்­தனர். ஏன் அவர்கள் அதனை முதலில் எமக்கு அனுப்­ப­வில்லை. திணைக்­க­ளத்தின் பக்­கத்தில் எந்தத் தவறும் இல்லை. சட்­டமா அதிபர், பொலிஸ்மா அதி­ப­ருக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளார். சட்­டமா அதிபர் திணைக்­களம் சஹ்­ரானை கைது­செய்­யு­மாறு ஆலோ­சனை வழங்­கா­மை­யினா­லேயே குண்டு வெடித்­தி­ருப்­ப­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டை முழு­மை­யாக மறுக்­கின்றோம்.

2017 ஜூன் மாதம் மட்­டக்­க­ளப்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் கொழும்பு மஜிஸ்­தி­ரேட்­டி­னாலும் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஏறத்­தாழ இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே சஹ்­ரா­னுக்கு எதி­ராக இரண்டு பிடி­யா­ணைகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான தரப்­பினர் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இன்று சட்­டமா அதிபர் திணைக்­களம் சஹ்­ரானை கைது­செய்ய ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தால் குண்டு வேடி­த்தி­ருக்­காது என்ற கருத்து பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. நாம் ஆலோ­சனை வழங்க முன்னர் இரண்டு திறந்த பிடி­யாணை இருந்தது. இரண்டு ஆண்டு காலம் ஒரு நபர் மீது இரண்டு திறந்த பிடியாணை இருந்தும் கைது செய்யவில்லை. இரண்டு ஆண்டுகள் இரண்டு பிடியாணை இருந்தும் சட்டம் நீதி அமைச்சு ஒழுங்காக சட்டத்தை கையாளாத நிலையில் சஹ்ரானை கைதுசெய்ய முடியாது போயுள்ளது. தயவு செய்து சட்டமா அதிபர் திணைக்களம் மீது சுமத்தும் குற்றச்சாட்டு மோசமானது. ஆதாரபூர்வமற்றது என்றார்.

(ஆர்.யசி)

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.