எட்டுப் பேரில் ஒருவர் மன நோயாளிகள்; நமது பொறுப்பென்ன?

0 1,080

சம்­மாந்­துறை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட நிந்­தவூர் பிர­தே­சத்தில், பிறந்து 10 மாதங்­க­ளே­யான இரட்டைப் பெண் குழந்­தைகள் தாயா­ரி­னா­லேயே கத்­தியால் கழுத்து வெட்­டப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்ள பரி­தாப சம்­பவம் அனை­வ­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

குறித்த தாய், சில வரு­டங்­க­ளாக மன நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இவ்­வாறு தான் பெற்ற குழந்­தை­க­ளையே கழுத்தை அறுத்துப் படு­கொலை செய்­கின்ற நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தனக்கு ஆண் குழந்­தை­யொன்று கிடைக்­கப்­பெற்று அந்த குழந்தை கடந்த வருடம் சலவை இயந்­தி­ரத்­திற்குள் சிக்­குண்டு உயி­ரி­ழந்த சம்­ப­வத்­திற்குப் பிறகே குறித்த தாய் மன நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எதுவும் அறி­யாத பச்­சிளம் பால­கர்­க­ளான இரட்டைப் பெண் குழந்­தை­க­ளுக்கு நேர்ந்த இந்த சம்­பவம் ஜீர­ணிக்க முடி­யா­த­தாக இருக்­கின்ற அதே­நேரம், தான் பெற்ற குழந்­தை­க­ளையே படு­கொலை செய்யத் துணிந்த அந்தத் தாய் எந்­த­ளவு தூரம் மன அழுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­திப்பார் என்­ப­தையும் சிந்­திக்கத் தூண்­டு­கி­றது.

தான் இதற்கு முன்னர் பல தட­வைகள் தற்­கொலை செய்து கொள்ள முயற்­சித்­த­தா­கவும் அது வெற்­றி­ய­ளிக்­காத நிலை­யி­லேயே இறு­தி­யாக குழந்­தை­களை கொன்­று­விடத் தீர்­மா­னித்­த­தா­கவும் அவர் பொலி­சா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் மன அழுத்தம் என்­பது அதி­க­ரித்து வரும் கண்­ணுக்குத் தெரி­யாத மிகப் பெரும் ஆபத்­தாகும். உலக சுகா­தார திணைக்­க­ளத்தின் தர­வு­க­ளின்­படி இலங்­கையில் 8 இலட்சம் பேர் இவ்­வாறு மன அழுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதா­வது எட்டுப் பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் இலங்­கை­யர்கள் மன அழுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எனினும் இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டோரில் 40 வீதத்­தினர் மாத்­தி­ரமே தமது நோய்க்­கான சிகிச்­சையைப் பெற்றுக் கொள்­கின்­றனர். ஆண்­களை விடப் பெண்­களே அதிகம் மன நோயினால் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

மன அழுத்­தத்தின் உச்­சக்­கட்­டமே கொலை, தற்­கொலை போன்ற நிலை­க­ளுக்கு இட்டுச் செல்­கி­றது. இலங்­கையில் வரு­டாந்தம் 3000 பேர் தற்­கொலை செய்து கொள்­வ­தாக சுகா­தார அமைச்சின் தேசிய உள சுகா­தார நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் டாக்டர் சித்­ர­மாலீ டி சில்வா குறிப்­பி­டு­கிறார்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் உள நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்­காக சகல அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் விசேட மன நல சுகா­தார பிரி­வுகள் நிறு­வப்­பட்­டுள்­ளன. அதற்­கப்பால் சுமித்­ராயோ, சாந்தி மார்க்கம், சமுத்­தானா, மன நலத்­துக்­கான தேசிய கவுன்சில், தேவை நாடும் மகளிர் போன்ற அமைப்­புகள் செயற்­பட்டு வரு­கின்­றன. இவற்றின் மூல­மா­கவும் மன நலக்­கு­றை­பா­டு­டை­ய­வர்கள் சிகிச்­சை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

துர­திஷ்­ட­வ­ச­மாக ஏதோ­னு­மொரு விதத்தில் மன நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் ‘பைத்­தி­யங்கள்’ என்று குடும்­பத்தை விட்டும் சமூ­கத்தை விட்டும் ஒதுக்­கு­கின்ற மனோ­நி­லையே இலங்­கையில் இன்­னமும் நீடிக்­கி­றது. அவர்­க­ளது உண்­மை­யான மனக்­கு­றை­களை செவி­ம­டுப்­ப­தற்கோ அவர்­க­ளுக்குத் தேவை­யான சிகிச்­சை­களைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கோ நாம் தயா­ரில்லை. இந் நிலை தொட­ரு­மாயின் நிந்­த­வூரில் நடந்­தது போன்ற சம்­ப­வங்கள் மேலும் தொட­ரவே செய்யும்.

என­வேதான் இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுக்கு சமூ­கமும் பொறுப்புக் கூற வேண்டும். இலங்­கையில் எட்டுப் பேரில் ஒருவர் மன­நோ­யினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என தர­வுகள் கூறு­கின்ற நிலையில் நிச்­சயம் நமது குடும்­பத்­திலும் நமது சுற்­றயல் பிர­தே­சங்­க­ளிலும் இவ்­வா­றான பலர் இருக்­கத்தான் செய்­வார்கள். அந்த வகையில் இவ்­வா­றான மன நல குறை­பா­டு­டை­ய­வர்­களை ஒதுக்காது, இனங்கண்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கவும் வழிகாட்டல்களை வழங்கவும் நாம் முன்வர வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டிய வைத்தியசாலைகளும் தொண்டு நிறுவனங்களும் அதற்குத் தயாராகவிருக்கின்றன. நாம் செய்ய வேண்டியது அவர்களது சேவையை தேவையானவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதேயாகும். இது தொடர்பில் நாம் அனைவரும் நம்மீதுள்ள பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.