தீயசக்திகள் மதத்தை காரணமாக்கி பயங்கரவாதத்தை கொணர்கின்றன
சமாதான மாநாட்டில் உலக முஸ்லிம் லீக் செயலாளர் தெரிவிப்பு
தீய சக்திகள் மதத்தை சாக்குப் போக்காக காரணமாக்கிக் கொண்டு வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனத் தெரிவித்த உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் தலைவருமான கலாநிதி மொஹமட் அப்துல் கரீம் அல் ஈஸா, இதனை முறியடிக்க சகல மதத்தவர்களும் கைகோர்த்துச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைதி சமாதானம், சகவாழ்விற்கான தேசிய மாநாட்டில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் கிறிஸ்தவ மதவழிபாட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப் பயங்கரவாத தாக்குதல் மதஸ்தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் மத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புதிய அணுகுமுறையாகவே தெளிவாக உள்ளது. இத்தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் நியுசிலாந்து கிரைஸ்ட்சேர்ச்சில் முஸ்லிம் பள்ளிவாசலில் மத வழிபாட்டாளர்கள் மீது கொடுமையான துப்பாக்கி பிரயோக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் பென்சில்வேனியாவில் யூதர்கள் மீது இதே போன்றதொரு தாக்குதல் இடம்பெற்றது.
மதங்களிடையே சமாதானம் பற்றிய இந்த முக்கிய மாநாடு மதங்களின் அடிப்படை உண்மையான அன்பு, சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை மதவழிபாட்டாளர்களிடையே உறுதி செய்ய துணைபுரிகிறது. எந்தவொரு மதமும் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக ஒரு போதும் விளங்குவதில்லை. உலகத்திற்கு அருட்கொடையாகவே உம்மை நாம் அங்கு அனுப்பி வைக்கிறோமென நபிமணி முஹம்மது (ஸல்) பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையை மட்டும் பாதித்துவிடவில்லை கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்கள் பரவலான கண்டனத்திற்கு உட்பட்டது. முஸ்லிம் மதத் தலைவர்களும் இத்தாக்குதல்களை கண்டித்திருந்தனர். இக் கண்டனங்கள் மற்றும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த போதாதது மட்டுமன்றி எந்த விதமான தீர்வையும் வழங்கப் போவதில்லை.
இந்த கொழும்பு தேசிய மாநாடு தற்போதைய நிலைக்கு ஓர் உண்மையான அடிப்படைத் தீர்வை வழங்க வழிவகை செய்கிறது. முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் விடயத்தைக் கையாண்டு திறமையாக செயற்திறனுடன் தீய பயங்கரவாதத்தை அம்மாநாட்டில் பங்கேற்போர் எதிர் கொள்ள திரள வேண்டும்.
இலங்கையில் பன்னெடுங் காலமாக பயங்கரவாதமும் அமைதியின்மையும் நிலவி வந்தது. இந்த சூழலில் இந்த கொழும்பு பிரகடனம் பங்கேற்போரின் எதிர்பார்ப்புகளையும் இயல்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இடம்பெறுமென நம்பிக்கை கொள்வோம்.
தீய சக்திகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் அப்பாற்பட்டு எமது இவ் உலகம் இறைவனின் ஆணைப்படி பாதுகாப்பாக அமையும். பயங்கரவாதத்தை எதிர் கொள்ள அவர்களின் கொள்கையை அது எவ்வகையாக இருப்பினும் அதை புறந்தள்ள இறைவன் ஆணையிட்டுள்ளான். இம் மாநாடு நிலையான தொடர்ந்த ஒற்றுமையின் இயல்பை மதிப்பீடு செய்ய வழிவகை செய்யும். அடிப்படை பயங்கரவாத மற்றும் கடுமையான தீவிரவாத பிரச்சினைகளைத் தீர்க்க எங்களிடையே காணப்படும் குறைபாட்டை நாம் மறுப்பதற்கில்லை இருப்பினும் எமது தீர்மானத்தில் பற்றாக்குறை அல்லது தளர்வு காணப்பட்டால் அதுவே இந்நிலைக்கு விட்டுச் செல்லும்.
கண்காணிக்கப்படாத வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் என்பன பகைமையான நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைகின்றன. கொள்கைகள் மற்றும் எதிர்வு கூறல்கள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டு இவை இயல்பாகவே காணப்படுகின்றன. இந்த சுதந்திரமான உலகில் கடுமையான தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் பிற நாட்டிற்கு பரப்புவதற்கு சிலர் சாக்குப் போக்குகளை கையாண்ட வெளிப்படுத்துவார்கள். நாம் தற்போது இலங்கை மண்ணில் உள்ளோம். இலங்கை, பௌத்தர்களை அதிகமாக கொண்ட நாடாகும். இதனை ஒவ்வொருவரும் அன்பை பரிமாற்றல் பிறரை மதித்தல், அமைதியாக வாழ்தல் என்பவற்றின் மூலம் புரிந்துக் கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
vidivelli