தனியார் சட்ட திருத்தம் ; நேற்றும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை

0 714

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை மீளாய்வு செய்து உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யாடல் நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலை­மையில் நடை­பெற்­ற போதிலும் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டாத நிலையில் முடி­வுற்­றது. மீண்டும் இன்று மீளாய்வு குழு ஒன்­று­கூடி திருத்­தங்கள் தொடர்பில் ஆரா­ய­வுள்­ளது. நேற்று மூன்று மணித்­தி­யா­லங்கள் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்ற போதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­க­னவே அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்த 14 திருத்­தங்­களில் 4 திருத்­தங்கள் தொடர்­பா­கவே ஆரா­யப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலை­மையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரிஷாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் பைஸர் முஸ்­தபா என்போர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் பத்வா குழு உறுப்­பி­னர்கள் மௌலவி எம்.ஏ.எம்.ஹரீஸ், மௌலவி சல்மான் மௌலவி முர்சித் ஆகி­யோரும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான அறிக்­கைக்கு உட­ன­டி­யாக அங்கீகாரம் வழங்கப்பட்டு நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.