ஹஜ் யாத்திரைக்கு சென்ற இலங்கை பெண் மரணம்

0 929

புனித ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்­காக சவூதி அரே­பி­யா­வுக்கு சென்­றி­ருந்த நிலையில் இலங்­கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார். திடீர் சுக­வீ­முற்ற நிலையில் புனித மக்கா நகரில் உள்ள மலிக் பைஸால் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலை­யி­லேயே அவர் நேற்றுக் காலை மர­ண­மா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர், புதிய காத்­தான்­குடி பது­ரியா வீதி, மில்லத் லேனில் வசிக்கும் நாகூர் சித்தி நபூரா (39) என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். அன்­னாரின் ஜனாஸா நல்­ல­டக்கம் நேற்று மாலை மக்­காவில் இடம்­பெற்­ற­தாக அவ­ரது உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.

இவர் மட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­யத்தின் முன்னாள் உதவிக் கல்­விப்­ப­ணிப்­பாளர் ஏ.எல்.எம்.சரீபின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.