புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மீளத் தொட­ர­ வேண்டும்

0 769

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்கும் பணிகள் கடந்த காலங்­களில் துரி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் அண்­மைக்­கா­ல­மாக அப்­ப­ணிகள் ஸ்தம்­பித்துப் போயி­ருந்­தன. தற்­போது மீண்டும் அப்­ப­ணி­களை மீள ஆரம்­பித்து செயற்­பாட்டைத் தொடர வேண்­டு­மென அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் செயற்­பாட்டை மீள ஆரம்­பிக்க வேண்­டு­மென கடந்த வியா­ழக்­கி­ழமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிரே­ர­ணையைக் கொண்டு வந்­தி­ருந்­தது. தற்­போது அதி­கா­ரத்தில் இருக்கும் அர­சாங்கம் தனது பத­விக்­கா­லத்தை நிறைவு செய்­ய­வி­ருக்கும் நிலையில் என்றோ உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்ந்தும் இழுத்­த­டிக்­கப்­பட்டே வந்­துள்­ளது. தற்­போ­தைய அர­சாங்கம் தனது எஞ்­சி­யுள்ள ஐந்து மாத பத­விக்­கா­லத்தில் இந்தப் பணி­களை நிறை­வு­செய்ய முடி­யுமா? அது சாத்­தி­ய­மா­குமா என்றும் விவா­திக்­கப்­பட்டு வரு­கி­றது.

‘புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றுக்கே இந்த அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை வழங்­கப்­பட்­டது. ஆனால் அர­சாங்­கத்­தினால் அதனை நிறை­வேற்­ற­மு­டி­யாமல் போயுள்­ளது. அதனால் தமிழ் மக்­க­ளைப்போல் நாங்­களும் தீர்வை எட்­டு­வதில் விரக்­தி­யுற்­றி­ருக்­கிறோம்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கு முன்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு அத­னூ­டாக அதி­காரப் பர­வ­லாக்கம் மற்றும் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கப்­படும் என்றே தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் ஏனைய வாக்­கு­று­தி­களைப் போன்று இதுவும் புறந்­தள்­ளப்­பட்டு விட்­டது. அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத் திட்­டத்தின் கீழ் 19 ஆவது திருத்­தத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மாத்­தி­ரமே குறைக்க முடிந்­தது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு கலந்­து­ரை­யா­டல்கள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்­துள்ளார். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சி­களின் கூட்­ட­மொன்று கூட்­டப்­பட்டு முன்­னெ­டுப்­பு­களை ஆரம்­பிக்க வேண்­டு­மெ­னவும் அவர் கூறி­யுள்ளார்.

தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பு வரைபில் பல நல்ல விட­யங்கள் இருக்­கின்­றன. செனட் சபை என்றும் மேல் சபை என்றும் புதிய கட்­ட­மைப்­புகள் இருக்­கின்­றன. அதி­காரப் பர­வ­லாக்கம் மூலமே ஒற்­றுமை மிக்க சமூ­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும். புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக நாடு பிள­வு­படும் என்ற சந்­தே­கத்தில் இருந்து சிங்­கள மக்கள் விடு­பட வேண்டும் எனவும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

கடந்த இரண்டு வருட கால­மாக துரித கதியில் இயங்­கி­வந்த அர­சி­ல­ய­மைப்பை உரு­வாக்கும் பணிகள் தற்­போது முழு­மை­யாக ஸ்தம்­பித்­துள்­ளன. 2016 ஆம் ஆண்டு தேசிய அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்றி புதிய அர­சி­ல­ய­மைப்பு தயா­ரிக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

தேர்தல் முறையில் மாற்றம், இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை ஒழித்தல் எனும் விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன என்­றாலும் இவ்­வி­ட­யங்­களில் எந்த இணக்­கப்­பாடும் கடந்த வருடம் எட்­டப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான நிலையில் கடந்த வருடம் இறு­திக்குப் பின்பு புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் ஸ்தம்­பி­த­ம­டைந்­தன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை அரசு நடை­மு­றைப்­ப­டுத்­தா­து­விட்டால் நாடு முன்­னொ­ரு­போதும் கண்­டி­ராத பாரிய அழிவை எதிர்­கொள்ள நேரிடும். புதிய அர­சி­யல­மைப்பின் வெற்­றி­யி­லேயே நாட்டின் எதிர்­காலம் தங்­கி­யுள்­ளது. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு அர­சாங்கம் மதிப்­ப­ளித்து விரை­வாக அதனை நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­தி­ரனும் தெரி­வித்­துள்ளார்.

புதிய அர­சி­யல­மைப்பை உரு­வாக்­கு­வ­த­ற்கு 2015 ஆம் ஆண்டு சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமைந்­தி­ருந்­தது. கடந்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை வழங்கியிருந்தார்கள்.

2015 இல் இரு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. என்றாலும் இதனூடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கை வீணடிக்கப்பட்டு விட்டது.
அரசாங்கத்தின் பதவிக்காலம் குறுகியது என்றாலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தொடர்ந்தும் ஸ்தம்பித நிலையில் இருக்கக்கூடாது. முன்னரை விட வேகமாகப் பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.