வடமேல் மாகாண வன்முறை : 50 குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கல் இன்று

0 743

கடந்த மே மாதம் 12, 13 ஆம் திக­தி­களில் வடமேல் மாகா­ணத்தில் நாத்­தாண்­டியா பகு­தியில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட 98 குடும்­பங்­களில் 50 குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டாக 7 மில்­லியன் ரூபா இன்று வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

நாத்­தாண்­டியா பிர­தேச செய­ல­கத்தில் இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பர்­ணாந்து தலை­மையில் இன்று காலை10 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள நிகழ்வில் நஷ்­ட­ஈ­டுகள் உரிய குடும்­பங்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஏனைய 48 குடும்­பங்­களின் நஷ்­ட­ஈடு விண்­ணப்­பங்­க­ளி­லுள்ள குறை­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டதன் பின்பு வழங்­கப்­படும் என புனர்­வாழ்வு அமைச்சின் இழப்­பீட்டுப் பணி­ய­கத்தின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார்.

கொட்­டா­ர­முல்­லையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளின்­போது பலி­யான பௌசுல் அமீரின் குடும்­பத்­திற்கு வழங்­கப்­ப­ட­வுள்ள நஷ்­ட­ஈடு நிலுவை 7 இலட்சம் ரூபாவும் அன்­றைய தினம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

அவ­ரது குடும்­பத்­துக்கு ஒரு மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் ஏற்­க­னவே 3 இலட்சம் ரூபா வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தச்சுத் தொழிலில் ஈடுபட்டு வந்த பௌசுல் அமீர் இனவாதிகளால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.