மக்கள் கூறியதையே நானும் கூறினேன்

விசாரணை நடத்தியே ஆதாரங்களை கண்டறிய வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன்

0 1,552

சில விட­யங்­களை நாங்கள் அங்கு சென்று கேட்டு அறிந்து சொல்­வ­தில்லை. தமிழ் மக்­க­ளி­டையே நாங்கள் பேசிக் கொண்­டி­ருக்­கும்­போது பர­வ­லாக சொல்­லப்­படும் சில விட­யங்­களை நாங்கள் வெளிப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் எங்­க­ளுக்கு இருக்­கி­றது. ஆனால் அது பொய்­யா இல்­லையா என்­பதை ஒரு மேல்­வா­ரி­யாகப் பார்த்துக் கொள்வோம் என வட மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் முன்னாள் நீதி­ய­ர­ச­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். அவர் விடி­வெள்­ளிக்கு வழங்­கிய விஷேட நேர்­கா­ணலின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

நேர்காணல் : எம்.எஸ்.எம்.நூர்தீன் 

Q முன்னாள் நீதி­ய­ர­ச­ரான நீங்கள் ஆதா­ர­மில்­லாத கருத்­துக்­களை ஒரு­போதும் கூற­மாட்­டீர்கள் என்று நினைக்­கிறேன். ஆனால் சில இடங்­களில் நீங்கள் வெளி­யிடும் கருத்­துக்கள் ஆதா­ர­மற்­றவை எனும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கி­றதே. உதா­ர­ண­மாக கிழக்கு மாகா­ணத்தில் 300 தமிழ் கிரா­மங்­களை முஸ்லிம் கிரா­ம­மாக மாற்­றிய கதையை என்ன ஆதா­ரத்தின் அடிப்­ப­டையில் முன்­வைத்­தீர்கள்?

சில விட­யங்­களை நாங்கள் அங்கு சென்று கேட்டு அறிந்து சொல்­வ­தில்லை, இங்கு வந்து தமிழ் மக்­க­ளி­டையே பேசிக் கொண்­டி­ருக்கும் போது பர­வ­லாக சொல்­லப்­படும் சில விட­யங்­களை நாங்கள் வெளிப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இருக்­கி­றது. ஆனால் அது பொய்­யாக இல்­லையா என்­பதை ஒரு மேல்­வா­ரி­யாக பார்த்துக் கொள்வோம்.

“தொலைந்து போன தமிழ் கிரா­மங்கள் ” எனும் தலைப்பில், கிழக்கு மாகா­ணத்­திலே இல்­லா­ம­லாக்­கப்­பட்ட தமிழ் கிராமங்கள் குறித்து வீரகேசரியில் சில காலங்­க­ளுக்கு முன் கட்­டு­ரைத்­தொடர் ஒன்று பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. அது திடீ­ரென்று நிறுத்­தப்­பட்­டது. ஆனால் அந்தக் காலம் தொடக்­கமே தமிழ் பெயர்கள் இருக்கும் தெருக்­களை முஸ்லிம் பெயர்­களாய் மாற்­று­வதும் தழிழ் கிரா­மங்­களை முஸ்லிம் கிரா­மங்­களாய் மாற்­று­வதும் அங்­கி­ருக்கும் காணி­களை விலை கொடுத்து வாங்கி தமிழ் கிரா­மங்கள் முஸ்லிம் கிரா­மங்­க­ளாக மாற்­று­வதும் நடை­பெ­று­வ­தாக பர­வ­லாக எங்­க­ளு­டைய தமிழ் மக்கள் எங்­க­ளிடம் வந்து கூறி­ய­தைத்தான் நான் கூற வேண்டி இருக்­கி­றது.

நீங்கள் நீதி­ய­ரசர் என்ற முறையில் இதை­யெல்லாம் பார்த்­துத்­தானே சொல்­வீர்கள் என்று கூறு­கின்­றீர்கள், நாங்கள் வழக்­குக்­காக இதை கூற­வில்லை. மக்கள் பர­வ­லாக வந்து தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை சொல்­லும்­போது அதை நாங்கள் வெளிப்­ப­டுத்­து­கிறோம்.

“நீங்கள் சொல்­வ­தற்­கெல்லாம் என்ன ஆதாரம் அத்­தாட்சி இருக்­கு­றது”, “நான் போய் பார்க்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்­டி­ருக்க முடி­யாது. இதில் முன்­னூறு என்­றி­ருக்­கலாம் முப்­ப­தாக இருக்­கலாம் மூவா­யி­ர­மாகக் கூட இருக்­கலாம்.

ஆனால் அதில் ஒரு கொள்கை இருக்­கி­றது. அதா­வது ஒரு இடத்தில் இருக்கும் இனத்தை வெளி­யேற்­று­வ­தற்­காக நட­வ­டிக்­கைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­ற­னவா? அவ்­வாறு நடை­பெற்றால் அது பிழை­யான நட­வ­டிக்கை என்ற கருத்தை வெளி­யி­டு­வ­தற்­கா­கத்தான் இதைப் பற்றி கூறு­கின்றோம்.
ஆனால் அதற்குக் காரணம், அடிப்­படை குறித்­த­தொரு தமிழ் பத்­தி­ரி­கையில் வந்த கட்­டு­ரைகள் மூலம் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­ததால் அதனை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு மக்கள் கூறி­ய­தையும் வைத்­துதான் நான் சில கருத்­துக்­களை வெளி­யிட்டேன்.

Q கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்­புல்லாஹ், கல்­முனை மாந­கர மேயர் சட்­டத்­த­ரணி ரகீப், காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் போன்ற சில முஸ்லிம் சிவில் அமைப்­பு­களும் இது தொடர்பில் உங்­க­ளிடம் ஆதா­ரங்­களை கேட்­டுள்­ள­துடன், இது ஐக்­கி­யத்­துக்கு குந்­தகம் விளை­விக்கும் கருத்து என்று விமர்­சித்­தி­ருக்­கின்­றனர், இது தொடர்பில் என்ன கூறு­கின்­றீர்கள்?

இக்­க­ருத்து ஆதா­ர­மற்­றது என்றால் ஆதா­ர­மில்­லா­தவை என்று கூற முடியும்.
எந்த ஒரு தமிழ் கிரா­மமும் முஸ்லிம் கிரா­ம­மாக மாற்­றப்­ப­ட­வில்லை. எந்த ஒரு தமிழ் பெயரைக் கொண்ட தெரு­வுக்கும் முஸ்லிம் பெயர் வைக்கவில்லை என்றால் கூறுங்கள், அதற்கு தகுந்த பதிலை நான் தருவேன். இதற்­கான ஆதா­ரத்தை விசா­ரணை நடத்­தியே கண்­டு­பி­டிக்க முடியும். வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் பிர­சு­ர­மான கட்­டு­ரை­களும் மக்கள் எனக்குத் தெரி­யப்­ப­டுத்­திய விட­யங்­க­ளும்தான் என்­னு­டைய ஆதாரம்.

இவர்கள் கூறு­வ­துபோல் ஆதா­ர­மற்­றவை எனின், என்­னு­டைய மக்­க­ளை அழைத்து அடிப்­ப­டை­யற்ற விட­யங்­களை கூறி­யமை குறித்து விசா­ரிப்பேன்,
மக்கள் கூறு­வதை நான் கூறு­வ­தற்­காக அது இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தும் என்றால் நீங்கள் எங்­களை பய­மு­றுத்­து­கின்­றீர்கள். ஆதா­ர­மற்­றவை என்று சொல்லிக் கொண்டு “இதை நீங்கள் கதைக்­கி­றீர்கள் என்றால் இன­மு­றுகல் வருது” என்றால் நீங்கள் தமிழ் மக்­களை பய­மு­றுத்­து­வது போன்று கதைக்­கி­றீர்கள். அப்­ப­டி­யெல்லாம் கதைக்­க­வேண்டாம்.

ஆதா­ர­மற்­றவை என்றால் ஆதா­ர­மற்­றவை என்று நிரூ­பி­யுங்கள், நான் என்­னு­டைய மக்­களை அழைத்துக் கேட்­கிறேன்.

முற்­றாக இது ஆதா­ர­மற்­றவை என்று சொல்­லட்டும் அதற்குப் பிறகு நான் என்­னு­டைய மக்­க­ளிடம் கேட்­கிறேன்.

Q நீங்கள் முத­ல­மைச்­ச­ராக பதவி வகித்த காலத்­திலே வடக்கு முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திலே காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை செய்­ய­வில்லை என்ற ஒரு குற்­றச்­சாட்டு உங்கள் மீது வைக்­கப்­ப­டு­கி­ற­து­. அது தொடர்­பிலே என்ன கூறு­கின்­றீர்கள்?

முஸ்லிம் மக்­க­ளுக்கு தேவை­யா­னதைக் கொடுக்க வேண்டும் என்­பதில் மிகவும் பற்­று­று­தி­யோடு இருந்தோம். ஆனால் முல்­லைத்­தீவு போன்ற இடங்­க­ளிலே சம்­பந்­த­மில்­லா­த­வர்கள் குடி­யேற முயற்­சித்­தனர். அங்கு வாழ்ந்த குடும்­பங்­க­ளுக்கும் அவர்­க­ளுக்கு தொடர்­பி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை. காணி­களை கேட்கத் தொடங்­கி­னார்கள். அதன் கார­ணத்­தினால் தான் அங்கு ஒரு முறுகல் நிலை ஏற்­பட்­டது.

ஆகவே, எந்த ஒரு முஸ்லிம் பெரு­ம­கனும் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்தால் அவரோ அல்­லது அவ­ரு­டைய வாரி சுகளோ கட்­டாயம் திரும்பி வரு­வதில் ஒரு பிரச்­சி­னையும் இல்லை.

ஆனால் அதோடு சம்­மந்­தப்­பட்­ட­வர்கள் எங்கோ இருந்து வந்து தங்­க­ளுக்கும் அவர்­க­ளுக்கும் சம­பந்தம் இருப்­பதாய் கூறி காணி­களைப் பெறு­வது அங்­கி­ருக்கும் எங்­க­ளு­டைய மக்­க­ளு­டைய காணி­களை கப­ளீ­கரம் செய்­வ­தாக இருக்கும்.

என­வேதான், சில விட­யங்­களை நாங்கள் எடுத்துக் கூறும்­போது அதை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு வித­மாக பார்க்க.கின்­றனர்.

உண்மை என்­ன­வென்றால் அவர்கள் செய்த பிழை­க­ளால்தான் இது நடை­பெ­று­கின்­றது. சம்­பந்­தப்­ப­டா­த­வர்கள் அதற்கு உரித்­தி­ருப்­ப­தாக சம்­பந்­தப்­ப­டுத்தி சொல்­வதை நாங்கள் கண்­ட­றிந்­ததன் கார­ண­மாக எங்கள் மீது பழி சுமத்­து­கின்­றார்கள். இதற்கும் முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுடன் எங்­க­ளுக்கு இருக்கும் உற­வுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை.

Q வட மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் அஸ்மின் ”விக்­னேஸ்­வரன் ஒரு இன­வாதி” என அறிக்கை ஒன்றில் கூறி­யுள்ளார். இது­பற்றி என்ன கூறு­கின்­றீர்கள்?

அதை அவ­ரி­டம்தான் நீங்கள் கேட்க வேண்டும். என்னால் அதற்கு பதில் சொல்ல முடி­யாது.

Q‘’இலங்­கையில் முஸ்­லிம்­களின் வடிவம் தமிழ் மொழி சார்­புள்­ள­தாக இருந்­தாலும், அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே, தங்கள் வடிவம் – மதம் சார்ந்­தது என, அவர்கள் கூறிக் கொள்­கின்­றனர்” என்று சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நீங்கள் கூறி­யி­ருந்­தீர்கள். இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.

அது உண்மை. அதா­வது, மஷூர் மௌலா­னாவும் நானும் ஒன்­றாக சட்டக் கல்­லூ­ரியில் படித்தோம். அந்தக் கால­கட்­டத்­திலே அவர் செல்­வ­நா­ய­கத்­தி­னு­டைய வலது கர­மாக இருந்தார். அந்தக் கால­கட்­டத்­திலே முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதி­யிலே சகோ­த­ரர்­க­ளா­கத்தான் இருந்­தார்கள். அவர்­க­ளி­டத்­திலே எந்­த­வொரு இன வேறு­பாடும் இருக்­க­வில்லை.

கிறிஸ்­தவ தமி­ழர்கள், இஸ்­லா­மிய தமி­ழர்கள், இந்து தமி­ழர்கள் என்று ஒரு குடையின் கீழ்தான் வாழ்ந்­தார்கள். ஏன் நண்பர் அஷ்­ரபின் அர­சி­யலும் தமிழ் பிள­வுகள் வரு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தது. என்­ன­வென்றால் அன்­றைய கல்வி அமைச்­ச­ராக இருந்த பதி­யுதீன் மஹ்மூத், “தமி­ழர்கள் ஆயுதம் ஏந்தி ஆர்­ப்­பாட்டம் செய்ய விளை­கி­றார்கள். இதில் முஸ்லிம் மக்கள் சேர வேண்­டிய அவ­சியம் இல்லை. நாங்கள் முஸ்­லிம்கள். மத­ரீ­தி­யாக வேறு­பட்­ட­வர்கள்” என்ற கருத்தை சொல்­லி­யி­ருந்தார்.

சிங்­கள முஸ்­லிம்கள் என்றோ தமிழ் முஸ்­லிம்கள் என்றோ இல்­லாமல் நாங்கள் ஓர் இனப் பிரி­வாக முஸ்­லிம்கள் என்று எங்­களை அழைக்க வேண்டும் என்று கூறினார்.

அன்­றி­லி­ருந்து தான் நீங்கள் முஸ்­லிம்கள் என்­பது ஒரு­தனி இனம் என்ற முறை­யிலே சில நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வந்­தன.

இது அர­சியல் ரீதி­யான கார­ணங்­க­ளுக்­கா­கத்தான் நடை­பெற்­றது. ஏனென்றால் அந்தக் கால கட்­டத்தில் நாங்கள் தமி­ழர்கள் என்­றி­ருந்தால் தமி­ழர்­க­ளுக்கு கிடைக்கும் அடிகள் முஸ்­லிம்­க­ளுக்கும் கிடைக்­கக்­கூடும் என்ற எண்ணம் இருந்­தது.

Q கடந்த ஏப்ரல் 21க்குப் பின் முஸ்­லிம்கள் மீது இன வன்­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. இது தொடர்­பிலே நீங்கள் இந்த விட­யங்­களை எவ்­வாறு பார்க்கின்றீர்கள்?

நான் உடனேயே இது சம்பந்தமாகப் பேசினேன். முஸ்லிம் சகோதரர்களுக்கு குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற வன் முறைகளை பற்றி பிழை என்று மிகவும் காரசாரமாக கூறி இருந்தேன். குருநாகலில் நடைபெற்றதெல்லாம், அன்று 1958 இலும் 1983இலும் தமிழ் மக்களுக்கு நடந்தவை தா.ன் இன்று முஸ்லிம் மக்களுக்கு நடைபெறுகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்று ஏற்கனவே சிந்தித்து திட்டமிட்டே இவைகள் நடைபெறுகின்றன. இவைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று என்னால் கூறமுடியாது. ஏப்ரல் 21 தாக்குதல் வெறுமனே ஐ.எஸ்.ஐ.எஸ். என்று கூறுவதைவிட பலம்வாய்ந்த சக்தியின் கரங்கள் பின்னணியில் இருக்கிறதென்று என்னால் கூறமுடியும். இதை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்குவது என்பது பிழையான ஒரு செயல் என்று நான் கூறுகின்றேன்.

நேர்காணல் : எம்.எஸ்.எம்.நூர்தீன் 

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.