விசா­ர­ணை­க­ளின்றி நிலு­வையில் 7 இலட்­சத்து 50 ஆயிரம் வழக்­குகள்

0 585

சுமார் 7 இலட்­சத்து 50 ஆயிரம் வழக்­குகள் விசா­ரணை செய்­யப்­ப­டாமல் நிலு­வையில் இருப்­ப­தா­கவும் அவற்றை விரை­வாக விசா­ரணை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அது­கோ­ரள தெரி­வித்தார்.

தேசிய மத்­தி­யஸ்த தின வைபவம் நேற்று வியா­ழக்­கி­ழமை பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய அமைச்சர் நீதித்­து­றையில் வெளி­யி­னரின் தலை­யீட்­டுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க போவ­தில்லை என்றும் நீதித்­துறை முழு சுதந்­தி­ர­மாக செயற்­பட்டு வரு­கி­றது என்றும் குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது, கடந்த வருட இறு­தியில் இடம்­பெற்ற அர­சியல் நெருக்­கடி நிலை­மையின் கார­ண­மாக அநே­கமான அபி­வி­ருத்திப் பணிகள் நிறைவு செய்­யப்­ப­டாமல் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. மத அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­களின் கார­ண­மாக கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தொடர் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளினால் எமது மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். இவ்­வா­றான நிலையில் நாளைய தினம் என்ன நடக்கும் என்று எவ­ராலும் குறிப்­பிட முடி­யாது.

தற்­போது எமது நாட்டில் 335 தேசிய மத்­தி­யஸ்த சபைகள் இயங்கி வரு­கின்­றன. இந்த மத்­தி­யஸ்த சபை­களின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். மத்­தி­யஸ்­த­ச­பைகள் மீது பல்­வேறு முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எவ்­வா­றான முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டாலும் எந்­த­வொரு கார­ணத்­துக்­கா­கவும் அவற்றின் மீது அர­சியல் தலை­யீ­டுகள் இடம்­பெ­று­வ­தில்லை. அதற்கு நாங்கள் இட­ம­ளிக்­கவும் இல்லை.

நீதியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இன, மத வேறு­பா­டு­க­ளின்றி அனை­வரும் ஒற்­று­மை­யாக செயற்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். அடிப்­படை உரி­மைகள், மனித உரி­மை­களை முழு­மை­யாக பாது­காக்க வேண்­டி­யதும் அவ­சி­ய­மாகும். எமது பாட­சாலை கல்வித் திட்­டத்தில் சட்­டங்கள் தொடர்­பான கற்­கைகள் உள்­வாங்­கப்­பட வேண்டும். காரணம், நாட்­டி­லுள்ள சட்­டத்­திட்­டங்­களை முறை­யாக அறிந்­து­கொள்­ளா­மை­யினால் மாண­வர்கள் வழி­த­வறிச் செல்லும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. தற்­போது நீதித்­து­றையின் சுதந்­திரம் தொடர்பில் பல்­வே­று­பட்ட கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எவர் என்ன கூறி­னாலும் எந்தக் கார­ணத்­துக்­கா­கவும் நீதித்­து­றையின் சுதந்­தி­ரத்தில் தலை­யி­டு­வ­தற்கு இட­ம­ளிக்க போவ­தில்லை. எமது நாட்டில் இடம்­பெறும் சம்­ப­வங்கள், தொடர்­பாக எமது நீதி­மன்­றத்­தி­னூ­டாக சுயா­தீ­ன­மான விசா­ர­ணைகள் முன்­னெ­டுத்து தீர்வை பெற்­றுக்­கொள்வோம்.

அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக அர­சாங்­கத்தின் செயற்­றிட்­ட­ங்­க­ளுக்கு பொய்­யான விம்­பத்தை மக்கள் மத்­தியில் தோற்­று­விக்க சிலர் முயற்சிக்கிறார்கள். வெளிநாட்டுத் தேவைகளுக்காக அரசாங்கம் திட்டம் வகுப்பதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் பின்னடைவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அந்த பின்னடைவுகளின் மத்தியிலும் முதலீடுகளை பயன்படுத்தி இன்று நாங்கள் முன்னேறி வருகிறோம் என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.