இரு தரப்பிலும் விட்டுக்கொடுப்பு வேண்டும்

கல்முனை விவகாரம் குறித்து அமைச்சர் வஜிர வலியுறுத்து

0 780

கிழக்கில் தமிழ் சமூ­கமும் முஸ்லிம் சமூ­கமும் சமா­தா­னத்­து­டனும் ஒற்­று­மை­யு­டனும் வாழக்­கூ­டிய வகையில் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­படும். இவ்­வி­வ­கா­ரத்தில் இரு தரப்பும் விட்­டுக்­கொ­டுப்­புடன் செயற்­பட வேண்டும் என உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளையும் வேண்­டி­யுள்ளார்.

அமைச்சர் வஜிர அபே­வர்­தன முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கோடீஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­யுள்ளார். ஒரே மொழியைப் பேசும் இரு சமூ­கங்­களும் ஒற்­று­மை­யாக வாழக்­கூ­டிய சூழலை உரு­வாக்கும் வகை­யி­லான தீர்­வொன்­றினைப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனக்கு பணிப்­புரை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் கருத்து தெரி­விக்­கையில், கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் 30 வரு­ட­கால வர­லாற்றைக் கொண்­ட­தாகும். 30 வரு­ட­கா­ல­மாக இங்கு பிரச்­சினை நிலவி வரு­கி­றது. இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணப்­பட வேண்டும். இரு தரப்­பி­னரும் ஓர் இணக்­கப்­பாட்­டுடன் சுமு­க­மான தீர்­வுக்கு உடன்­பட வேண்டும்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதும் அவர் இவ்­வ­கை­யி­லான தீர்­வினை எட்­டு­வதே நன்மை பயக்கும் என்று தெரி­வித்தார். அமைச்சர் வஜிர அபே­வர்­தன விரை­வான தீர்­வொன்­றினை எட்­டு­வ­தற்­காக துரித கதியில் செயற்­பட்டு வரு­கிறார்.

நான் உட்­பட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம், எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் ஏ.எச்.எம். பெளஸி ஆகியோர் தொடர்ந்தும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி வரு­கிறோம். தொடர்ந்தும் இரு சமூ­கமும் கிழக்கில் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும். அதன் அடிப்­ப­டை­யி­லான தீர்­வையே அனை­வரும் விரும்­பி­யி­ருக்­கி­றார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைகளுக்கு ஒரு வார காலத்தினுள் தீர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் வஜிர அபேவர்தனவும் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.