அடிப்படைவாதிகளுடன் கொஞ்சிக் குழாவ வேண்டாம்

அரசாங்கத்தை எச்சரிக்கிறது பொதுபலசேனா

0 725

நாட்டில் இயங்­கி­வரும் அரபு மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணித்தல் மற்றும் ஒழுங்­கு­ப­டுத்தல் தொடர்­பான சட்­ட­வ­ரை­பொன்று அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு அதில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. உலமா சபையின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக அரபு மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்க தனி­யான சட்­ட­மொன்­றினை உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சே­னாவின் தலை­மைக்­கா­ரி­யா­ல­யத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, “அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­படும் அரபு மத்­ர­ஸாக்கள் தொடர்­பான சட்­ட­மூ­ல­மொன்று அவ­ச­ர­மாக இயற்­றிக்­கொள்ளும் நட­வ­டிக்கை கைவி­டப்­பட வேண்டும் என நாம் அரசைக் கோரு­கிறோம். இதுவோர் சம­யக்­கு­ழுவின் தேவைக்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் திரை­ம­றைவில் செயற்­ப­டக்­கூ­டாது. மாறாக நாட்­டுக்கும், நாட்டு மக்­க­ளுக்கும் வெளிப்­ப­டை­யாகச் செயற்­பட வேண்டும்.

அரபு மத்­ரஸா தொடர்­பான சட்டம் பற்றி அனைத்து மதத்­த­லை­வர்­களும் அறிந்து கொள்­வது அவ­சி­ய­மாகும். எந்­தவோர் மதத்­த­லை­வர்­க­ளு­டனும் கலந்­தா­லோ­சி­யாது, பேச்­சு­வார்த்தை நடத்­தாது உலமா சபை அர­சி­யல்­வா­தி­க­ளையும் ஏமாற்றி இதற்­கான நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளதை நாம் எதிர்க்­கிறோம். இந்த சட்­ட­மூலம் நாட்­டுக்கு ஆபத்­தா­ன­தாகும்.

எமது நாட்டில் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநா­டொன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் 30 ஆம் திகதி உலக முஸ்லிம் தலை­வர்கள் இங்கு ஒன்­று­கூடி சமய மற்றும் இன­நல்­லி­ணக்கம் தொடர்பில் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்­ள­வுள்­ளனர். தீர்­மானம் எடுப்­ப­தற்கு சவூ­தி­யி­லி­ருந்து இங்கு வர­வேண்­டுமா? நாம் இதற்கு வெட்­கப்­ப­ட­வேண்டும். இந்த மாநாட்­டினைத் தடுத்து நிறுத்­தும்­படி நாம் அர­சாங்­கத்தை வேண்­டு­கிறோம்.

தேர்­தல்கள் அண்­மிக்கும் இந்­தக்­கா­லத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ளுடன் கொஞ்­சிக்­கு­லாவ வேண்டாம் என்று அர­சாங்­கத்தை நாம் வேண்­டிக்­கொள்­கிறோம். தேசிய ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பனம் மற்றும் தேசிய தொலைக்­காட்­சி­களில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும், இஸ்­லா­மிய மதத்­த­லை­வர்­க­ளுக்கும் ஒதுக்­கப்­படும் நேரம் எங்­க­ளுக்கும் ஒதுக்­கப்­பட வேண்டும்.
முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கையில் சிக்கியுள்ள இஸ்லாமிய கல்வி மீண்டும் சம்பிரதாய முஸ்லிம்களுக்கு கையளிக்கப்படவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படும் அஹதிய்யா பாடசாலைக்குள் நுழைந்துள்ள அடிப்படைவாத ஆசிரியர்களின் கற்றல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.