கல்முனை விவகாரத்திற்கு ஒரு வாரத்தில் நிரந்தரத் தீர்வு

0 703

முஸ்லிம் தரப்பும், தமிழ் தரப்பும் முரண்­பட்டுக் கொண்­டுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு­வார காலத்­தினுள் நிரந்­தர தீர்வு வழங்­கப்­படும் என உள்­ளக, உள்­நாட்­ட­லு­வல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தன்னைச் சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் உறு­தி­ய­ளித்தார். 

இந்தச் சந்­திப்பு நேற்று முன்­தினம் இரவு அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவின் இல்­லத்தில் இடம்­பெற்­றது. சந்­திப்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதி­யுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

நேற்று முன்­தினம் மாலை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு­வொன்று அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைச் சந்­தித்து முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள், கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக விவ­காரம், அநா­வ­சிய கைதுகள், வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்ட ஈடுகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்­கப்­பட வேண்டும் எனவும் அது­வரை அமைச்சுப் பொறுப்­பு­களை கையேற்கப் போவ­தில்லை எனவும் தெரி­வித்­தனர்.

கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக பிரச்­சி­னைக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் உடனே அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­மாறு பிர­தமர் வேண்டிக் கொண்டார். அமைச்சர் அபே­வர்­த­ன­வுக்கும் உரிய பணிப்­புரை விடுத்தார். இதற்கு அமை­வா­கவே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­த­னவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தொடர்பில் தங்­க­ளது யோச­னை­களை முன்­வைத்­தனர்.

அமைச்சர் வஜிர அபே­வர்­தன தமிழ் தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடி அவர்­க­ளது யோச­னை­க­ளையும் பெற்றுக் கொண்டு ஒரு­வார காலத்தில் நிரந்­தர தீர்­வொன்­றினை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார். இவ்­வி­வ­கா­ரத்தில் அதி­கா­ரிகளுக்கு தங்கள் பணி­களை துரி­தப்­ப­டுத்­தும்­படி பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.