ஜமாஅத்தே இஸ்லாமி, ஸலாமா அமைப்புகளை தீவிரவாத அமைப்பென முஸம்மில் கூறியது தவறு

முஸ்லிம்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளாதீர் என்கிறார் ம.வி.மு. உறுப்பினர் சகீப்

0 824

அஸாத் ஸாலி, ஹிஸ்­புல்லா, முஸம்மில் உள்­ளிட்ட அர­சி­யல்­வா­தி­களும் அப்துல் ராஸிக் போன்­ற­வர்­களும் ஊட­கங்­க­ளுக்குப் பல கருத்­துக்­களை கூறி நாட்டு மக்­களை உசுப்­பேற்றிக் கொண்­டி­ருக்­கின்­றனர். இவர்கள் பிரச்­சி­னையை தடுப்­ப­தற்குப் பதி­லாக இதனை மேலும் வளர்­ப்பதற்­கான வேலை­க­ளையே செய்­தனர். இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் பற்றி விமல் வீர­வங்­சவின் கட்சிக்கார­ரான முஸம்மில் குறிப்­பிட்­டி­ருந்த கருத்து மிகவும் கண்­டிக்­கத்­தக்­கது. ஜமா­அத்தே இஸ்­லாமி மற்றும் ஸலாமா போன்ற அமைப்பை அவர் தீவி­ர­வாத அமைப்­புகள் என குறிப்­பிட்­டி­ருந்த கருத்து தவ­றா­ன­தாகும் என பாத்­த­ஹே­வா­ஹெட்ட பிர­தேச சபை மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உறுப்­பி­னரும் சோச­லிச இளைஞர் சங்­கத்தின் முக்­கி­யஸ்­த­ரு­மான சகீப் சாம் நிஜாம் தெரி­வித்தார்.

சோச­லிச இளைஞர் சங்­கத்தின் சகோ­த­ரத்­துவ தினத்தை முன்­னிட்டு “இன்­னு­மொரு கறுப்பு ஜூலை வேண்டாம்” எனும் தலைப்பில் நடத்­தப்­படும் நிகழ்ச்­சித்­திட்டம் குறித்து பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­மை­ய­கத்தில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
மேலும் கருத்து தெரி­வித்த அவர், “நாட்­டையே உலுக்­கிய கோர சம்­ப­வ­மான கறுப்பு ஜூலை சுமார் 36 வரு­டங்­க­ளுக்கு முன் அதா­வது, 1983 ஜூலை மாதம் 23ஆம் திகதி கட்­ட­விழ்க்­கப்­பட்­டது. அதனை தொடர்ந்து நாடு முழு­வதும் இன­வாத வன்­மு­றைகள் பல நாட்கள் நீடித்­த­துடன் பல்­லா­யிரம் உயிர்­களும் கோடிக்­க­ணக்­கான உடை­மை­களும் சேத­மாக்­கப்­பட்­டன. அது மட்­டு­மில்­லாமல் 30 வருட ஆயுதப் போராட்­டத்­திற்கு நாட்டை இட்டுச் சென்­றதும், ஆயி­ரக்­க­ணக்­கான வித­வைகள், அனா­தைகள் உரு­வா­னதும், நாட்டை பின்­ன­டையச் செய்ததும் இந்த கறுப்பு ஜூலை சம்­ப­வமே.”

நாட­றிந்த துர­திஷ்­ட­வ­ச­மான இந்தக் கொடூர வர­லாற்றை நினைவு கூரு­வது மட்­டு­மன்றி மீண்டும் எமது நாட்டில் ஒரு கறுப்பு ஜூலை ஏற்­பட வழி­வ­குக்­காது தடுப்­பதற்கே சோச­லிச இளைஞர் சங்கம் பல வேலைத்­திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கி­றது. எமது நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையே நிலவும் பிள­வு­களை யுத்­தத்தால் தீர்க்க முடி­யாது என நம்பும் நாம், யுத்த காலத்­தி­லிருந்தே பல நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

தமிழ், முஸ்லிம், சிங்­கள இளை­ஞர்­க­ளுக்கு இடை­யி­லான சகோ­த­ரத்­து­வமும் விட்­டு­க்கொ­டுப்பும் மாத்­தி­ரமே இன்­னு­மொரு கறுப்பு ஜூலை அரங்­கே­றாது தடுக்க முடி­யு­மென நம்பும் கோஷ­லிச இளைஞர் சங்கம், ஜூலை 23ஆம் திக­தியை (இன்­றைய தினத்தை) சகோ­த­ரத்­துவ தின­மாக அறி­மு­கப்­ப­டுத்தி 2008 முதல் தொடர்ச்­சி­யாகப் பல திட்­டங்­களை அனைத்­தின இளை­ஞர்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு முன்­ன­டுத்து வந்­துள்­ளது.

அதன் தொடர்ச்­சி­யாக இவ்­வ­ரு­டமும் கறுப்பு ஜூலையை அனுஷ்­டிக்கும் சகோ­த­ரத்­துவ தின நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் மேலும் பல கசப்­பான அனு­ப­வங்­க­ளுடன் இவ்­வ­ருட சகோ­த­ரத்­துவ தினம் நடை­பெ­ற­வுள்­ளது.

சோச­லிச இளைஞர் சங்கம் 1983 ஜூலை 23 உட்­பட 2019– 4 – 21 மற்றும் 2019 – 5 – 13 வரையும் நடை­பெற்ற அனைத்து இன­வாத வன்­மு­றை­க­ளையும் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இன­வாத வன்­மு­றைகள் தமிழ், முஸ்லிம், சிங்­கள எந்த சார்­பினர் செய்­தாலும் கண்­டிக்­கப்­பட வேண்­டு­மென்­பதே எமது சங்­கத்தின் நிலைப்­பா­டாகும். எனவே இவ்­வ­ருட சகோ­த­ரத்­துவ தின­மா­னது இன­வாத வன்­மு­றை­களை தடுப்­ப­தற்­கா­கவும் சகோ­த­ரத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கவும் அனைத்­தின சகோ­த­ரர்­க­ளையும் ஒன்­றி­ணைத்த நிகழ்­வாக அமை­கின்­றது. சுருக்­க­மாகக் கூறு­வ­தெனில் ஆட்­சி­யா­ளர்கள் கட்­ட­விழ்த்து விட்ட கறுப்பு ஜூலைக்கு சகோ­த­ரத்­து­வத்தை கொண்டு நிற­மூட்­டு­வதே எமது இலக்­காகும். அதா­வது இன, மத பேத­மின்றி இளை­ஞர்கள், யுவ­திகள், சிறு­வர்கள், கலை­ஞர்கள் மற்றும் சிவில் அமைப்­பு­களை அணி திரட்டி சகோ­த­ரத்­து­வத்தை வலுப்­ப­டுத்­து­வது எமது திட்­ட­மாக அமைந்­துள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் – சிங்­க­ளவர் மற்றும் தமிழ் – முஸ்­லிம்கள் மத்­தியில் எழுந்­துள்ள சந்­தே­கங்­க­ளையும் பதற்ற நிலை­யையும் ஒழிப்­ப­தற்­கான முயற்­சி­யாக சோஷ­லிச இளைஞர் சங்கம் ஜூலை 1 முதல் இன்­று­வரை நாடு முழு­வதும் பல கிரா­மங்­களில் வீடு வீடாகச் சென்று உரை­யாடும் வேலைத்­திட்­ட­மொன்­றையும் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்­தது. கடந்த வருடம் திகன தாக்­கு­தலின் பின்பும் கிராம மட்­டத்தில் மூவின இளை­ஞர்­களும் உள்­ள­டக்­கிய பாது­காப்பு குழுக்­களை நிய­மித்து பல கலந்­து­ரை­யா­டல்கள், பாது­காப்புத் திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். எனவே பல வன்­செ­யல்கள் தடுக்­கப்­பட்­ட­தாக நாம் நம்­பு­கிறோம்.

துர­திஷ்­ட­வ­ச­மாக குறு­கிய அர­சியல் இலா­பத்­திற்­காக சில தீய சக்­தி­கள்­ மூலம் இன­வாத கருத்­துக்கள் இளை­ஞர்கள் மத்­தியில் பிர­சாரம் செய்­யப்­ப­டு­வ­துடன், இன­வாத செயல்­க­ளுக்கு அவர்­களைத் தூண்­டி­வி­டு­கின்­றது. சில மதத் தலை­வர்­களும் ஊட­கங்­களும் இதில் பாரிய பங்கு வகிக்­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தீவி­ர­வாத தாக்­கு­த­லின்பின் நாட்டில் நில­விய பதற்­ற­மான அசா­தா­ரண சூழ்­நி­லைக்கு அஸாத் ஸாலி, ஹிஸ்­புல்லாஹ், முஸம்மில், அப்துர் ராஸிக் போன்­ற­வர்கள் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய கருத்­துக்­களும் கார­ணங்­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன. அவர்கள் நாட்­டு­மக்­களை உசுப்­பேற்­று­வ­தற்­கா­கவே கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றனர். இதனால் பிரச்­சினை தணி­வ­தற்குப் பதி­லாக வளர்­கின்­றன.

தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்­பினர் முஸம்மில் இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களின் பெயர்­களை குறிப்­பிட்டு அவர்­களை தீவி­ர­வாத இயக்­கங்­க­ளாக பட்­டி­ய­லி­டு­கின்றார். ஜமா­அத்தே இஸ்­லாமி, ஸலாமா போன்ற அமைப்­பு­க­ளையும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளாக சித்­தி­ரித்­தி­ருக்­கிறார். இது ஒரு பொய்ப்­பி­ர­சா­ர­மாகும். அத்­துடன் இக்­க­ருத்­துக்கள் மிகவும் தவ­றா­ன­தாகும். அவரின் இவ்­வா­றான தான்­தோன்­றித்­த­ன­மான கருத்­துக்­களை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.

இவர்கள் போன்ற போலித் தலை­மை­களால் முஸ்­லிம்கள் பாது­காப்­பற்ற நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கின்­றனர்.

இவ்­வா­றான கசப்­பான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய செயற்­பா­டு­களை அரச அங்­கீ­கா­ரத்­து­டனோ அல்­லது அரசின் கவ­ன­யீனம் கார­ண­மா­கவோ தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவற்­றிற்கு பொது­ஜன பெர­மு­னவின் நேர­டி­யான அனு­ச­ரணை கிடைக்­கி­றது என்­பது யாவரும் அறிந்த இரகசியம். எனவே மிகவும் பாரதூரமான, அபாயகரமான, அசாதாரண சூழ்நிலையில் சோஷலிச இளைஞர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களின் ஊடாக சகோதரத்துவத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்தி நிலையான சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே 23ஆம் திகதி (இன்று) மாலை 3.00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கும் எதிர்ப்பு போராட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு முற்போக்கு சிந்தனையாளர்கள் உட்பட மூவின இளைஞர்களையும் அழைக்கிறோம் என்றார்.

ஊடக சந்திப்பில் சோசலிஷ இளைஞர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எரங்க குணசேகர மற்றும் மத்திய குழு உறுப்பினர் அருண் ஹேமசந்திர ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.