எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்த டட்லி சியர்ஸ் சமூக நிபுணர், இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்பின்மை என்பது ஒரு பிரச்சனையல்ல, தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்தவர்கள் காணப்படாமை பிரச்சினையாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
தொழிலுக்கு பொருத்தமான தகைமை வாய்ந்த நபர்கள் கல்வி முறை ஊடாக உருவாக்க முடியாமை காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக அதனூடாக தெளிவுபடுத்தப்பட்டுள்ள விடயமாக அமைந்துள்ளது.
இலங்கையில் க.பொ.த உயர் தரம் மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வி தகைமைகளை கொண்டவர்கள் கொண்டுள்ள தொழில்நிலையிலிருந்து விலகியிருக்கும் சதவீதம் காரணமாக கல்வியில் காணப்படும் இந்த பொருத்தமற்ற தன்மை வெளிப்படுத்தப்படுவதுடன், மத்திய வங்கி அறிக்கைகள் கூட, பொருளாதாரத்தில் பணியாட்களுக்கான தேவையை நிவர்த்தி செய்வதற்கு ஆளணி வளத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிடுகின்றன.
ஃபின்லாந்து, ஸ்சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சாதாரணமாக கல்வி முறையை போன்று, தொழில் கல்வியில் ஈடுபடுத்துவது முன்னெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாடசாலையிலிருந்து வெளியேறுபவர்கள் தொழில்சார் தகைமை வாய்ந்த குடிமக்கள் என அந்நாட்டு கல்வி முறையினூடாக உறுதி செய்யப்படுகின்றது.
தொழில் கல்வியை பாடசாலையில் உட்புகுத்தும் முயற்சி கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எமது பாடசாலை கட்டமைப்பினுள் உள்ளடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை கைகூடவில்லை.
சமூகத்திடமிருந்து அதற்கு சிறிதளவு அல்லது எதிர்ப்பான கருத்துகள் வெளியாகிய நிலையில், அந்த முறையிலிருந்து முன்னோக்கி செல்வது தடைப்பட்டதுடன், தற்போது இலங்கையில் தொழில் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய தொழில்புரிவோரை உருவாக்க முடியாமல் போயுள்ளமைக்கு இது காரணமாக அமைந்துள்ளது.
வரையறைகளுக்கு உட்படாமல் எதிர்காலத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு வலுவூட்டும் நோக்குடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் நோக்கத்துக்கமைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 13 வருட கால கல்வித் திட்டமான தொழில் பிரவேசம் என்பதை ஆரம்பித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பரீட்சார்த்த திட்டமாக 42 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டில் மேலும் 154 பாடசாலைகளுக்கும், 2019 ஆம் ஆண்டில் மேலும் 114 பாடசாலைகளை இணைத்தும் இதுவரையில் 310 பாடசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
சிங்களம் போன்று தமிழ் மொழி மூலத்திலும் இந்த திட்டத்தினூடாக கற்கைகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது வரையில் தமிழ் மொழி மூலமாக தொழில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகளின் எண்ணிக்கை 106 ஆக அமைந்துள்ளது.
இந்த தொழில் கல்வி திட்டத்தை பின்பற்றும் மாணவர்களுக்கு இரண்டு வருட கால பயிற்சி நிறைவில் தேசிய தொழில் தகைமை 4 நிலை (NVQ Level 4) பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் பட்டப்படிப்பு வரை மேலும் கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கும், தேசிய மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கும் பாடசாலைகளில் வசதியான வகுப்பறைகள் உள்ளடக்கி இடவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் இது வரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்கால தொழில் உலகுக்கு பொருத்தமான மனித வளங்கள் இந்நாட்டு பாடசாலை கல்வி கட்டமைப்பில் உருவாக்கும் நோக்காகக் கொண்டு, உயர் தர பாடத்திட்டத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தொழில் கல்வி கற்கை ஊடாக, 13 வருட கால சான்றளிக்கப்பட்ட கல்வியை பெற்றுக் கொள்வதற்கு இதனூடாக மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விசேடத்துவம் யாதெனில், க.பொ.த சாதாரண தர பாட பெறுபேறுகள் எதுவாக இருந்தாலும், இந்த பாடத்திட்டத்தினூடாக உயர் தரத்தை பின்பற்ற எந்தவொரு மாணவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாகும்.
சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்தியவர்கள், தேர்ச்சி பெறாதவர்களை கவனத்தில் கொள்ளாமல், உயர் தர தொழில் கல்வி திட்டத்தை பின்பற்ற வாய்ப்பை பெறும் சகல மாணவர்களுக்கும் புதிய உலகின் தொழில் வாழ்க்கை முறைக்கு பொருத்தமான தொழில் கற்கைகள் 26 இல் தமக்கு பிடித்தமான கற்கைகள் 3 ஐ தெரிவு செய்து கொள்ள வாய்ப்பை வழங்கியுள்ளமை இதில் விசேட அம்சமாகும்.
சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சிறுவர் உளவியல் அம்சம், உடலியல் கல்வி மற்றும் விளையாட்டு, கலை, ஓவியக் கலை, செயற்பாட்டு முகாமைத்துவம், விலங்கு விருத்தி தொழில்நுட்பம், உணவு தயாரிப்பு ஏற்பாட்டு தொழில்நுட்பம், நிர்மாண தொழில்நுட்பம், மின் மற்றும் இலத்திரனியல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஆடைத் தொழிற்துறை அடங்கலாக 26 பாடங்கள் இந்த தொழிற்துறை திட்டத்தில் அடங்கியுள்ளன.
இந்த தொழில் கற்கை பாடத்தை தொடரும் மாணவர்களுக்கு முதல் வருடத்தில் பாடசாலையினுள் மூன்று பாடத் துறைகளில் பயிற்சியை தொடர்வதற்கும், இரண்டாவது வருடத்தில் அவற்றிலிருந்து தமக்கு மிகவும் பிடித்தமான கற்கையை தெரிவு செய்து தொழில் பயிற்சியை பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை, தேசிய இளைஞர் சேவை சபை, பெருந்தோட்ட பயிர் நிர்வாக நிறுவனம், விளையாட்டு மேற்பார்வை நிறுவனம் அடங்கலாக அரசின் பயிற்சி நிலையங்கள் பல இந்த திட்டத்தினூடாக மாணவர்களுக்கு தொழில்சார் பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி கட்டமைப்பினுள் அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட சான்றளிக்கப்பட்ட கல்வி நிகழ்ச்சியினூடாக உயர் தர தொழில் கற்கையை தொடரும் சகல மாணவர்களுக்கும் நிறுவனசார் பயிற்சியை பெறும் முழு கால பகுதியினுள் 500 ரூபாய் படி தினசரி கொடுப்பனவொன்றை பெற்றுக் கொடுக்கவும் கல்வி அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
vidivelli