முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் : மீளாய்வு செய்வதற்கு நான்கு பேரடங்கிய குழு

ஹலீம், பைஸர் முஸ்தபா, ஹக்கீம், ரிஸ்வி முப்தி உள்ளடக்கம்

0 685

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­ட­தி­ருத்­தங்­க­ளுக்­கான சிபா­ரி­சு­க­ளுக்கு வழங்­கி­யுள்ள அங்­கீ­கா­ரத்தை மீளாய்வு செய்­வ­தற்­கான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று மாலை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌசி தலை­மையில் அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்­றது.

நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­க­ளுக்­கான சிபா­ரிசு அறிக்­கை­யினை மீளாய்வு செய்து அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரிப்­ப­தற்கு நேற்று நால்­வ­ர­டங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. 

இக்­கு­ழுவில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்­தபா மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி அடங்­கி­யுள்­ளனர். இக்­குழு தயா­ரிக்கும் அறிக்கை ஒரு­வார காலத்­தினுள் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­விடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

நேற்­றைய சந்­திப்பில் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், ஏ.எச்.எம்.பௌஸி, பைசர் முஸ்­தபா, முஜிபுர் ரஹ்மான், எச்.எம்.எம்.ஹரீஸ், காதர் மஸ்தான், எம்.எஸ்.தௌபீக், அப்­துல்லாஹ் மஹ்ரூப், எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.நஸீர் ஆகி­யோரும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ச­பையின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவிச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், அஷ்ஷெய்க் முர்சித் முழப்பர், அஷ்ஷெய்க் அப்துல் காலிக், அஷ்ஷெய்க் ஹசன் பரீட், அஷ்ஷெய்க் எஸ்.எல்.நௌபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.