நீர்­கொ­ழும்பில் முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன் பன்றி தலைகளை தொங்­க­விட்ட சம்­பவம்

0 1,012

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை (21) காலை திறக்­கப்­பட்ட நிலையில், கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்­திற்கு அண்­மித்­த­தாக உள்ள மீரி­கமை பிர­தான வீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான சில கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­களை இனந்­தெ­ரி­யாத நபர்கள் தொங்­க­விட்­டுள்­ளனர்.

மீரி­கமை வீதி, மைமா­கொடை பகு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான மூன்று கடை­களின் முன்­பாக இவ்­வாறு பன்­றி­களின் தலைகள் கட்டித் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை பிர­தே­சத்­தி­லுள்ள முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு சென்ற இனந்­தெ­ரி­யாத குழு­வொன்று நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை கட்­டு­வ­பிட்­டிய தேவா­லயம் மீண்டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளதால் கடை­களை மூட வேண்டும் என்று கூறி அது­தொ­டர்­பாக கடிதம் ஒன்­றையும் கொடுத்துச் சென்­றுள்­ளனர்.

இந்­நி­லையில், நேற்று காலை கடை உரி­மை­யாளர் ஒரு­வ­ருக்கு அவரின் கடையின் முன்­பாக பன்றியின் தலை தொங்­க­வி­டப்­பட்­டுள்­ள­தாக ஒருவர் தகவல் வழங்­கி­யுள்ளார். கடை உரி­மை­யா­ளர்கள் அதனை பார்க்கச் சென்­ற­போது மூன்று கடை­களின் வாயில் கதவில் பன்­றி­களின் தலைகள் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளதை கண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எம்.இஸட்.ஷாஜஹான்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.