நியாயமான தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பத­வி­களை ஏற்­கப்­போ­வ­தில்லை

மு.கா. ஹலீம் திட்டவட்டம்

0 698

கிழக்கில் எமக்கும் தமிழ் தரப்­பி­ன­ருக்கும் எழுந்­துள்ள பிரச்­சி­னை­களில் எமக்கு ஒரு நியா­ய­மான தீர்வு கிடைக்­க­வேண்டும். அத்­துடன் அண்மைக் கால­மாக முஸ்லிம் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் குறித்து அர­சாங்கம் எமக்கு உரிய தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்கும் வரையில் எந்­த­வொரு முஸ்லிம் உறுப்­பி­னரும் அமைச்சுப் பத­வி­களை எடுக்­கப்­போ­வ­தில்­லை­யென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் நிலைப்­பாடு குறித்து அறி­விக்க இன்று பிர­த­ம­ருடன் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் உயர்­பீடம் நேற்று பிற்­பகல் கட்சி தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் கூடி­யது. கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் கூடி நேற்று பல தீர்­மா­னங்­களை எடுத்­தி­ருந்­தனர். இது­கு­றித்து தலைவர் ஹக்கீம் தெரி­விக்­கையில், இன்று நாட்டில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக உரு­வா­கி­யுள்ள பல பிரச்­சி­னைகள் மற்றும் கிழக்கில் எமக்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள சில முரண்­பா­டுகள் கார­ண­மாகப் பேசினோம். இது­கு­றித்து ஒரு பொது இணக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்டும். இப்­போது எழுந்­துள்ள பிரச்­சி­னைகள் நிவர்த்­தி­செய்­யப்­பட வேண்டும். இது­கு­றித்து அர­சாங்­கத்தை நாம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். அதில் அர­சாங்கம் எவ்­வாறு எமக்குப் பதில் கூறு­கின்­றதோ அதற்­க­மை­யவே நாம் அடுத்­த­கட்ட தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க முடியும். அது­வரை நாம் தீர்­மா­ன­மிக்க எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க மாட்டோம். குறிப்­பாக அமைச்சுப் பத­வி­களை பெற்­றுக்­கொள்ள இன்­னமும் நாம் எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. இது­கு­றித்து தீர்­மா­னிக்க காலம் தேவை. பிர­தமர் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் நாளை (இன்று) பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சு­வார்த்தை ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் எமது நிலைப்­பாட்டை நாம் கூற வேண்டும்.

எவ்­வாறு இருப்­பினும் அர­சாங்கம் எமது கோரிக்­கை­க­ளுக்கு எவ்­வாறு பதில் தெரி­விக்­கின்­றதோ அதற்­க­மை­யவே நாம் அடுத்­த­கட்ட தீர்­மானம் எடுக்க முடியும். அது­வ­ரையில் நாம் அமைச்சுப் பத­வி­களை ஏற்­க­மு­டி­யாது. அதேபோல் இப்­போது ஐக்­கிய தேசிய கட்­சியின் கூட்­டணி குறித்து பேசி­னாலும் எமக்கு அர­சாங்கம் தரும் தீர்­வு­க­ளுக்கு அமை­யவும் அர­சாங்கம் எமது பிரச்­சி­னை­களில் கொடுக்கும் வாக்­கு­று­தி­க­ளுக்கு அமை­யவும் எம்மால் தீர்­மானம் எடுக்க முடியும். கூட்­ட­ணி­யாக செயற்­ப­டு­வது குறித்து இன்­னமும் தீர்­மானம் எடுக்­க­வில்லை. அதற்கு முன்னர் எமக்­கான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வுகள் வேண்டும். குறிப்­பாக தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை கொடுக்­கின்­றமை எமக்கு இருக்கும் ஒரு பிரச்­சி­னை­யாகும் . அதேபோல் மேலும் சில பிர­தே­சங்­க­ளிலும் இந்த பிரச்­சினை உள்­ளது.
அமைச்சுப் பத­வி­களை நாங்­க­ளாகத் துறந்தோம். மீண்டும் அமைச்­சுக்­களை பெற்­றுக்­கொள்ள நாம் அமைச்­சுக்­களை கைவி­ட­வில்லை. இன்­னமும் சிறிது காலமே உள்­ளதால் நாம் அமைச்சுப் பத­வி­களை எடுக்க வேண்­டுமா என்­பதை குறித்து ஆராய வேண்டும். அதேபோல் நாம் எந்­த­வித அர­சியல் தீர்­மா­னமும் எடுக்­க­வு­மில்லை. பிர­த­ம­ருக்­கா­கவும் அர­சாங்­கத்­திற்­கா­கவும் நாம் பல தியா­கங்­களை செய்­துள்ளோம். ஆகவே, நாம் செய்த தியா­கங்­களை கருத்­திற்­கொண்டு பிர­தமர் எமக்குத் தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். ஏனை­ய­வர்­க­ளுடன் எம்­மையும் ஒப்­பிட்டு எமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு வழங்க வேண்டும். இல்­லையேல் நாம் இந்த அர­சாங்­கத்தில் இருப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை.

இன்று எமது மக்­க­ளுக்கு புதிய பிரச்­சி­னைகள் பல எழ ஆரம்­பித்­துள்­ளன. நீண்­ட­கா­ல­மாக வராத பிரச்­சி­னைகள் பல இன்று புதி­தாக உரு­வெ­டுக்­கின்­றன. எமது தரப்­புக்கு பாதிப்­பான விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாம் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­க­ளாக தொடர்ந்தும் இருப்­பதால் பிரச்­சி­னைகள் உரு­வாகும். மக்­க­ளுக்கு இதனை நாம் தெளி­வு­ப­டுத்த வேண்டும். அதி­கா­ரங்­களை தக்­க­வைத்­துக்­கொள்ளும் அவாவில் எமது மக்­களை நாம் கஷ்­டப்­ப­டுத்த முடி­யாது. ஆகவே அமைச்சுப் பத­வி­களை கைவிட்­ட­தை­ய­டுத்து இன்று எழுந்­துள்ள விட­யத்தில் சகல முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் ஒரே நிலைப்­பாட்டில் இருக்­கின்றோம். தனித்­த­னி­யாக எந்­த­வொரு முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் அமைச்­சுக்­களை பெற்­றுக்­கொள்ள மாட்­டார்கள். நாம் அமைச்சு பத­வி­களை கைவிட்ட பின்னர் பல பிரச்­சி­னைகள் உரு­வா­கி­யுள்­ளன. இதில் அர­சாங்கம் தீர்­மா­ன­மொன்றை வழங்க வேண்டும். எமது விட­யங்­களில் குறிப்­பாக காதி நீதி­மன்றம், திரு­மணம் விட­யங்­களில் நாம் கலந்­து­ரை­யாடி நிலைப்­பாடு ஒன்­றினை முன்­னெ­டுக்க முடியும். அதற்கு அப்பால் இந்த கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கோ அல்­லது சொத்­துக்­க­ளுக்கோ எந்­த­வொரு இழப்­பீடும் வழங்­க­வில்லை. இது­வெல்லாம் பாரிய பிரச்­சினை.

அதேபோல் குண்­டு­வெ­டிப்புத் தாக்­கு­தலில் பலர் சந்­தே­கத்தின் பேரில் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். முதலில் தேசிய பாது­காப்பு முக்­கி­ய­மா­னது. நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யங்­களில் அதிக அக்­கறை செலுத்த வேண்டும். அதேபோல் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்பில் இல்­லாத நபர்கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அப்­பா­வி­களை விடு­வித்து அதேபோல் தேசிய பாது­காப்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும். நாட்டின் சட்டம், நீதியின் மீதான அவ­நம்­பிக்­கையை அடுத்து நாடு பாரிய இழப்­பு­களை சந்­திக்க நேர்ந்­துள்­ளது. வெளிநாட்டு முத­லீ­டுகள் அனைத்­தும் குறை­வ­டைந்­து­விட்­டன. அரசியல் நோக்கங்களுக்காக மறைமுகமாக பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டம் நீதியை நாசமாக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் யார் என்பது தெரிகின்றது. அவர்களுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்க முடியாத நிலைமை உள்ளது. இன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டினை நாசமாக்க ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். தேர்தலை இலக்குவைத்து சில நாசகார செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.ஏ.பரீல், ஆர்.யசி

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.