தமிழ் – முஸ்­லிம்­களின் முழு­மை­யான ஆத­ர­வினை பெற்­றுக்­கொள்ள முடியும்

ஆகஸ்ட் 11 இல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பேன் என்கிறார் மஹிந்த

0 677

உத்­தேச ஜனா­தி­பதி தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் ஐவ­ரது பெயர்கள் இது­வ­ரையில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. அந்த வேட்­பா­ளரை 11 ஆம் திகதி அறி­விப்பேன். தமிழ், முஸ்லிம் மக்­களின் முழு­மை­யான ஆத­ர­வினை பெற்­றுக்­கொள்ள முடியும். அந்த மக்கள் எம்மை புறக்­க­ணிப்ப­தற்­கான நியா­ய­மான கார­ணிகள் எதுவும் கிடை­யா­தென எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட­்பாளர் யார் என்ற சர்ச்­சைக்கு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தீர்வு கிடைக்கும். இது­வ­ரையில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரி­விற்கு ஐவ­ரது பெயர்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன. எதி­ர­ணியில் அங்­கத்­துவம் வகிக்கும் அனைத்து கட்­சி­க­ளி­னதும் அபிப்­பி­ரா­யங்­க­ளுக்கு அமை­யவே ஜனா­தி­பதி வேட்­பாளர் தெரிவு செய்­யப்­ப­டுவார்.

தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை பெற­மு­டியும் என்ற நம்­பிக்கை காணப்­ப­டு­கின்­றது. எம்மை புறக்­க­ணிப்­ப­தற்­கான உரிய காரணம் ஏதும் கிடை­யாது. போலி­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு மத்­தி­யிலே ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. சாட்­டப்­பட்ட குற்­றங்கள் ஏதும் இது­வ­ரையில் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.

தேர்­தலை கருத்­திற்­கொண்டு அர­சாங்கம் தற்­போது மாறு­பட்ட பல விட­யங்­களை முன்­னெ­டுக்­கின்­றது. தேர்தல் வெற்­றிக்­காக இம்­முறை மேற்­கொள்ளும் உபா­யங்கள் ஏதும் பய­ன­ளிக்­காது. எவர் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதை நாட்டு மக்கள் தேர்தல் அறி­விப்­பிற்கு முன்­னரே தீர்­மா­னித்து விட்­டார்கள்.

சர்­வ­தேச அமைப்­புக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் தொடர்ந்து இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதிராகவே செயற்பட்டது. இன்றும் இந்நிலை தொடர்கின்றது. இராணுவத்தினருக்கு எதிரான அடக்குமுறைகள் அனைத்தும் கவலைக்குரியவை. இந்நிலைமைகள் அனைத்தும் இன்னும் குறுகிய காலத்திற்குள் மாற்றியமைக்கப்படும் என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.