‘இஸ்லாமோபோபியா’ எனும் அச்சுறுத்தல்

0 1,139

‘இஸ்­லா­மோ­போ­பியா’ என்­பது இஸ்லாம் குறித்த அச்சம் என்று அர்த்தம் கொள்­ளப்­ப­டு­கி­றது. இஸ்லாம் குறித்தும் முஸ்­லிம்கள் குறித்தும் பிற சம­யத்­த­வர்கள் மத்­தியில் அச்­சத்தைத் தோற்­று­வித்து, அதன் மூல­மாக முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்­களைத் தொடுப்­பதும் இஸ்­லாத்தின் வளர்ச்­சியைத் தடுப்­ப­துமே இந்த ‘இஸ்­லா­மோ­போ­பியா’ மூலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

செப்­டம்பர் 11 தாக்­கு­தலைத் தொடர்ந்தே இந்தச் சொல்­லாடல் உல­க­ளா­விய ரீதியில் பயன்­பாட்­டுக்கு வந்த போதிலும் இலங்­கைக்கு இது புதி­ய­தாகும். இலங்­கையில் இடம்­பெற்ற 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களைத் தொடர்ந்தே இலங்­கை­யிலும் ‘இஸ்­லா­மோ­போ­பியா’ பற்­றிய கதை­யாடல் கூடுதல் கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது.

உல­க­ளா­விய ரீதியில் நோக்­கும்­போது இதன் மூலம் எதிர்­பார்க்­கப்­பட்ட அடை­வு­களை இதன் பின்­ன­ணியில் உள்ளோர் அதா­வது அர­சியல் சக்­திகள் கண்­டி­ருக்­கின்­றனர். சர்­வ­தேச ஆய்வு மைய­மான ‘பியூ’ ஆய்வு நிலையம் கடந்த திங்கட் கிழமை வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் இதன் விளை­வு­களை சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

சம­யங்­க­ளோடு தொடர்­பு­பட்ட வன்­செ­யல்கள் மற்றும் தாக்­கு­தல்கள் அதி­க­ரித்­துள்­ளதன் அடிப்­ப­டையில் உல­க­ளா­விய ரீதியில் சம­யங்கள் மீதான கட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரித்­துள்­ள­தாக அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது இஸ்­லா­மோ­போ­பி­யாவின் நேரடி வெளிப்­பா­டே­யாகும்.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை சம­யங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டுகள் அதி­க­ரித்துச் சென்­றுள்­ள­தாக அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 2017 ஆம் ஆண்டு 140 நாடு­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. 2017 ஆம் ஆண்­ட­ளவில் சமய ரீதி­யான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்ட நாடு­களின் எண்­ணிக்கை 21 இலி­ருந்து 33 வரை அதி­க­ரித்­தி­ருந்­தது. இந்தப் பட்­டி­யலில் தற்­போது இலங்­கையும் இணைந்து கொண்­டுள்­ளது.

முஸ்லிம் பெண்­களால் அணி­யப்­படும் புர்கா மற்றும் முகத்­திரை உள்­ளிட்ட சமய ஆடை­க­ளுக்­கான தடை­களை 2007 வரை வெறு­மனே 5 நாடு­களே ஐரோப்­பாவில் விதித்­தி­ருந்­தன. ஆனால் இவ்­வெண்­ணிக்கை 2017 இல் 20 ஆக அதி­க­ரித்­தது. இத் தடைப் பட்­டி­யலில் இலங்­கையும் எதிர்­கா­லங்­களில் உள்­ள­டக்­கப்­ப­டலாம்.

இஸ்­லா­மோ­போ­பியா அதி­க­ரிக்க அதி­க­ரிக்க முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல்கள், அடக்­கு­மு­றைகள், தாக்­கு­தல்கள் அதி­க­ரிக்கும் என்­பதே இந்த அறிக்­கையின் சாரம்­ச­மாகும். இலங்­கையில் இதன் விளைவை நாம் தற்­போது அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம்.

இலங்­கையில் இந்தப் போக்கு முடி­வுக்கு வரும் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை. மாறாக தினம் தினம் புதிய புதிய விடயப் பரப்­பு­களில் முஸ்­லிம்கள் பற்­றிய வெறுப்புப் பிர­சா­ரங்கள் தொட­ரவே செய்­கின்­றன. ஹலால், மத்­ரஸா, அர­பு­ம­ய­மாக்கல், முகத்­திரை, தனியார் சட்டம், இள வயதுத் திரு­மணம், இஸ்லாம் பாடப் புத்­தகம், வஹா­பிஸம், ஷரீஆ சட்டம், காதி நீதி­மன்றம்….. என தினமும் புதுப்­புது தலைப்­புகள் ஊட­கங்­களில் கதை­யா­டப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­களை நோக்கி குற்­றச்­சாட்­டுக்கள் அள்ளி வீசப்­ப­டு­கின்­றன.

இவை அனைத்­துக்கும் பதி­ல­ளிக்கும் கடப்­பாட்டை இலங்கை முஸ்லிம் சமூகம் கொண்­டுள்ள போதிலும், அதற்­கான தக்க பதில்கள் எம்­மிடம் இருக்­கின்ற போதிலும் அதனைச் செய்­வ­தற்குத் தயா­ரில்லை என்­பதே துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். சிங்­கள மொழியில் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு தமிழ் மொழியில் பதில் எழு­து­கின்ற நிலை­யி­லேயே நாம் இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கிறோம். 2012 ஆம் ஆண்டு முதல் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வேலைத்­திட்­டங்கள் ஆங்­காங்கே தொடங்­கப்­பட்ட போதிலும் அவை எவை­யுமே காத்­தி­ர­மா­ன­தாக அமை­ய­வில்லை. ஏப்ரல் 21 அனர்த்­தத்தின் பின்­ன­ரா­வது இப் பணிகள் வீரி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை.

இனியும் காலம் கடந்துவிடவில்லை. இஸ்லாமோபோபியா அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருக்கவே போகிறது. அதன் மூலம் முஸ்லிம்கள் இலக்குவைக்கப்படுவதும் தொடரவே செய்யும். நமக்கு முன்னுள்ள சவால் அதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? அதனை செய்யப் போவது யார்? என்பதே.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.