நியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஹஜ் செய்ய ஏற்பாடு

0 777

கடந்த மார்ச் மாதம் நியூ­ஸி­லாந்தின் கிரிஸ்ட்­சேர்ச்சில் இடம்­பெற்ற இரட்டை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களைச் சேர்ந்த 200 பேருக்கு ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்ள சவூதி அரே­பியா ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ள­தாக அந் நாட்டின் உத்­தி­யோ­க­பூர்வ செய்தித் தாபனம் கடந்த புதன்­கி­ழமை தெரி­வித்­தது.

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் வெளி­யிட்­டுள்ள நிறை­வேற்றுக் கட்­ட­ளைக்கு அமை­வாக அவர்கள் புனித ஹஜ் கட­மை­யினை நிறை­வேற்ற முடியும் என சவூதி ஊடக முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.
துன்­பத்தால் வருந்­திக்­கொண்­டி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகை­யிலும் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான சவூதி அரே­பி­யாவின் நட­வ­டிக்­கை­களை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும் இத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி ஊடக முக­வ­ரகம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

கடந்த 2019 மார்ச் மாதம் 15 ஆம் திகதி பிரன்டன் டரன்ட் என்ற பயங்­க­ர­வாதி கிரிஸ்ட்சேர்ச் நகரில் அமைந்­துள்ள இரண்டு பள்­ளி­வா­சல்கள் மீது வெள்­ளிக்­கி­ழமை தொழு­கை­யின்­போது மேற்கொண்ட தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டதோடு 49 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.