மாகாண சபை தேர்தலை முதலில் நடத்த வேண்டியதன் அவசியம்

0 829

மாகா­ண­சபைத் தேர்தல் விரைவில் நடாத்­தப்­படும் என்று கூறியே அர­சாங்கம் காலத்தை கடத்தி வரு­கி­றது. ‘மாகாண சபைத் தேர்­தல்கள் சட்­டத்தில் திருத்­தங்கள் உரிய காலத்தில் மேற்­கொள்­ளப்­ப­டா­விட்டால் இவ்­வ­ருட இறு­திக்குள் தேர்­தலை நடாத்த முடி­யாத நிலை ஏற்­படும்’ என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய அண்மையில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விற்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார். அதேபோன்று ஜனாதிபதியும் நீதிமன்றமும் சட்டச் சிக்கல்களை நீக்கினால் எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என சில தினங்களுக்கு முன்னர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்­தோடு ‘மாகா­ண­சபைத் தேர்­தலை எந்தச் சட்­டத்தின் கீழ், புதிய முறை­மையின் கீழா அல்­லது பழைய முறை­மையின் கீழா நடத்த வேண்டும் என உயர் நீதி­மன்றின் அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கோரி­யுள்ளார்.

தேர்­தலை எந்த முறை­மையின் கீழ் நடாத்­து­வது என சட்­டப்­பி­ரச்­சினை உரு­வா­கி­யி­ருப்­ப­தாலே இதனைத் தெளி­வு­ப­டுத்திக் கொள்­வ­தற்­கா­க உயர்­நீ­தி­மன்றின் அறி­வு­றுத்­தல்­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் ஜனா­தி­ப­திக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகா­ண­சபை தேர்தல் சட்­டத்தின் கீழ் புதிய கலப்பு முறை­மையில் தேர்­தலை நடாத்­து­வ­தென்றால் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய மீளாய்வு அறிக்கை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டப்­பட வேண்டும். ஆனால் மீளாய்வு அறிக்கை இது­வரை சமர்ப்­பிக்கப்பட­வில்லை. இன்றேல் பழைய முறை­மையின் கீழ் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகா­ண­ச­பைகள் தேர்தல் சட்­டத்தின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தென்றால் பாரா­ளு­மன்­றத்தில் 2/3 பெரும்­பான்­மை­யுடன் அங்­கீ­காரம் பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். ஆனால் இதற்கான எந்த ஏற்­பா­டு­களும் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பிர­தான கட்­சி­க­ளான ஸ்ரீல.சு கட்சி மற்றும் ஐ.தே.கட்சி என்­பன மாகாண சபைத்­தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வதை எதிர்ப்­ப­தாகத் தெரி­வித்­தாலும் தேர்­தலை விரைவில் நடாத்­து­வ­தற்­கான சட்ட திருத்­தத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான எந்த நட­வ­டிக்­கை­யையும் அவை முன்­னெ­டுக்­க­வில்லை. இதிலிருந்து மாகாண சபைத் தேர்­தலை எதிர்­கொள்ள இக்­கட்­சிகள் தயா­ராக இல்லை என்­பது தெளி­வா­கி­றது.

மாகா­ண­சபைத் தேர்­தலை பழைய தேர்தல் முறை­மையின் கீழேயே நடாத்­த­வேண்டும் என அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளார்கள். எதிர்க்­கட்சித் தலை­வரும் இதற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

நாட்டில் மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் ஆகியன தொடராக நடாத்தப்பட வேண்டியுள்ளன. இவற்றில் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது மாகாண சபைத் தேர்தலை முற்படுத்துவதா எனும் சர்ச்சையே இப்போது நீடிக்கிறது. தனது கட்சியின் பலம் தொடர்பில் ஜனாதிபதி உறுதியான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்த பின்னரே தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுவார் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியிருப்பினும் மாகாண சபைகளின் நிர்வாகத்தை சீராக முன்கொண்டு செல்லும் வகையில் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் இக் கருத்தை பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்ற போதிலும் இதனை எவரும் காதில் போட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. இதுதொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்கள் அனைவரும் உடன்பாட்டுக்கு வர வேண்டியது காலத்தின் தேவையாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.