மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து மன்றில் ஒருநாள் விவாதம் வேண்டும்

ம.வி.மு. உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ

0 736

மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை அர­சாங்­கத்தின் கீழ் கொண்­டு­வர வேண்­டு­மென பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்­வைக்­குழு அர­சாங்­கத்­துக்கு பரிந்­துரை செய்­துள்­ள­போதும் அமைச்­ச­ரவை உப­குழு அதனை பட்­டப்­ப­டிப்பு சான்­றிதழ் வழங்கும் தனியார் நிறு­வ­ன­மாக நடத்த ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கே வழங்க பரிந்­துரை செய்ய தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. அதனால் அது­தொ­டர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் ஒரு நாள் விவாதம் ஒன்றை கோர­வி­ருக்­கின்­றோ­மென மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

கிழக்கு மாகா­ணத்தில் அமைந்­துள்ள பல்­க­லைக்­க­ழகம் சட்­ட­வி­ரோ­த­மா­னது. அது ஆரம்­பிக்­கும்­போது இளை­ஞர்­க­ளுக்கு இல­வ­ச­மாக தொழில் பயிற்சி வழங்க கட்­டடம் அமைக்க மகா­வ­லிக்கு சொந்­த­மான 35ஏக்கர் காணி குத்­தகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அந்தக் காணி தனியார் பல்­க­லைக்­க­ழகம் அமைக்­க­வெனத் தெரி­வித்து பணம்­கொ­டுத்து வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. இதனால் காணி வாங்­கப்­பட்ட நோக்­கத்தை பின்னர் மாற்­றி­ய­மைத்து பல்­க­லைக்­க­ழகம் அமைக்க எடுத்த நட­வ­டிக்­கை­யா­னது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தாகும். பல்­க­லைக்­க­ழகம் ஒன்றை அமைப்­ப­தாக இருந்தால் அதற்கு பின்­பற்­ற­வேண்­டிய விட­யங்கள் இருக்­கின்­றன.

அத்­துடன் இந்தக் கட்­ட­டத்தை அமைக்க பிர­தேச செய­ல­கத்தின் அனு­மதி பெறப்­ப­ட­வில்லை. பிர­தேச செய­ல­கத்தின் அனு­மதி பெறாமல் இதனை எவ்­வாறு அமைக்க முடியும். இதற்கு யார் அனு­மதி வழங்­கி­னார்கள். அத்­துடன் அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்­றினால் இது அமைக்­கப்­ப­டு­வ­தாக இருந்தால் அந்த நிறு­வனம் பதிவு செய்­யப்­ப­ட­வேண்டும். ஆனால் இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைத்த ஹிரா பவுண்­டே­ஷனே அரச சார்­பற்ற நிறு­வ­ன­மாக பதிவு செய்­யப்­பட்­ட­தில்லை.

மேலும் இந்த நிறு­வனம் எந்த நோக்­கத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டதோ அந்த நோக்­கத்தை மாற்றி அடிப்­ப­டை­வாதக் கொள்­கையை வளர்க்­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிறு­வ­னத்­துக்கு பணம் வந்த இடங்­களை பார்க்­கும்­போது அதனை உணர்ந்­து­கொள்ள முடி­கின்­றது. அதன் பாட­நெ­றி­களும் அவ்­வாறே அமைந்­தி­ருக்­கின்­றன. அதனால் இதற்கு அனு­மதி வழங்­கினால் எதிர்­கா­லத்தில் தமிழ் புலம்­பெயர் அமைப்­புக்­களும் பணம் அனுப்பி தமிழ் அடிப்­ப­டை­வாத பல்­க­லைக்­க­ழ­கங்கள் அமைக்க இட­மி­ருக்­கின்­றது.

அத­னால்தான் இந்த பல்­க­லைக்­க­ழகம் தொடர்­பாக ஆராய்ந்த பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்­வைக்­குழு, இதனை அர­சாங்கம் முற்­றாகப் பொறுப்­பேற்று அந்தக் கட்­டி­டத்தை சுற்­றுலா கல்வி போதிக்கும் மத்­திய நிலை­ய­மாக மாற்­றி­ய­மைக்க பரிந்­துரை செய்­தது. என்­றாலும் இது­தொ­டர்­பாக அமைச்­ச­ர­வையில் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட்­ட­போது அது­தொ­டர்­பாக ஆராய்ந்து 6மாதத்­துக்குள் இறுதி அறிக்கை சமர்ப்­பிக்க உப­கு­ழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

என்­றாலும் இந்த அமைச்­ச­ரவை உப­குழு மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழ­கத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கே வழங்கி, பட்­டப்­ப­டிப்பு சான்­றிதழ் வழங்கும் தனியார் நிறு­வ­ன­மாக அனுமதியளிக்க சிபார்சு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் பல்கலைக்கழகம் தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை தொடர்பில் ஒருநாள் விவாதம் நடத்தப்பட வேண்டுமென அடுத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது மக்கள் விடுதலை முன்னணி கோர இருக்கின்றது என்றார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.