ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

0 702

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்­கெ­தி­ராக தெளி­வான சாட்­சிகள் உள்­ளன. எனவே சட்­டத்­திற்கு அமை­வாக அவர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். பெலேந்த ரஜ­மகா விகா­ரையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள தாது­கோ­புரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்­டபம் ஆகி­ய­வற்றை மகா­சங்­கத்­தி­ன­ரிடம் கைய­ளிக்கும் நிகழ்வு செவ்­வாய்க்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி தெரி­வித்­த­தா­வது :
மரண தண்­ட­னையை நீக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூ­ல­மொன்றை கொண்டு வரு­வ­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இந்த முயற்சி ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற அழி­வு­களின் மூலம் சுமார் 300 அப்­பாவி மக்­களின் உயிர்­களை பழி­யெ­டுத்த கொடூர பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைக்கு வகை­கூற வேண்­டி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டிய தண்­ட­னையை தவிர்ப்­ப­தற்­காக எடுக்­கப்­படும் முயற்­சி­யாகும்.

நாட்டின் குற்­ற­வியல் சட்­டத்­திற்­கேற்ப கொலை, இரா­ஜ­து­ரோகம் போன்ற பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்டால் மரண தண்­டனை வழங்­கப்­படும். அத்­துடன் மரண தண்­ட­னையை நீக்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­தி­லுள்ள சிலர் எடுக்­கின்ற முயற்­சியின் மூலம் எந்­த­வொரு குற்­ற­வா­ளிக்கும் தண்­டனை வழங்க முடி­யாமல் போகும்.

மத்­திய வங்கி கொள்­ளைக்குப் பொறுப்­பான அனைத்து வகை­கூற வேண்­டி­ய­வர்­களும் தற்­போது இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். அவர்கள் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றனர். நாட்­டுக்கு வெளியே உள்­ள­வர்­க­ளுக்கு சர்­வ­தேச பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அர்ஜுன் மகேந்­தி­ரனை நாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்­காக சிங்­கப்பூர் பிர­த­ம­ருடன் தனிப்­பட்ட முறையில் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கின்றேன். இந்த அனைத்து விசா­ரணை நட­வ­டிக்­கை­களும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­று­கின்­றன. அவர்­க­ளுக்­கெ­தி­ராக தெளி­வான சாட்­சிகள் உள்ளன. எனவே சட்டத்திற்கு அமைவாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு அரச நிர்வாகத்தில் தண்டனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தண்டனைக்கு பயப்படுவதன் மூலம் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து சிறந்ததொரு நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப முடியும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.