ஒக்.15 இற்கு முன் மாகாணசபை தேர்தலை நடத்த முடியும்

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர்

0 721

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மாகாண சபை எல்லை நிர்­ணய அறிக்­கையை அர­சாங்க வர்த்­த­மா­னியில் வெளி­யிட்டால் அல்­லது பழைய தேர்தல் முறை­மையை அமுல்­ப­டுத்­து­மாறு உயர் நீதி­மன்றம் தீர்ப்பு வழங்­கினால் ஒக்டோபர் 15 ஆம் திக­திக்கு முன்பு மாகாண சபைத் தேர்­தலை நடாத்த முடியும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

எல்லை நிர்­ணய அறிக்கை அர­சாங்க வர்த்­த­மா­னியில் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்டால் மாகாண சபைத் தேர்­தலை புதிய முறையின் கீழ் (வட்­டார முறை) நடாத்த முடியும் அல்­லது பழைய தேர்தல் முறையை அமுல்­ப­டுத்­து­மாறு உயர்­நீ­தி­மன்றம் தீர்ப்­பொன்று வழங்­கினால் பழைய தேர்தல் முறைமை (விருப்பு வாக்கு) தேர்­தலை நடாத்த முடியும் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற தேசிய பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலின் போது கருத்து தெரி­விக்­கை­யிலே தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘மாகா­ண­சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறை­மையின் கீழ் நடாத்­து­வ­தென்­றாலும், பழைய விருப்பு வாக்­கு­மு­றை­மையின் கீழ் நடாத்­து­வ­தென்­றாலும் எதிர்­வரும் அக்­டோபர் மாதம் 15 ஆம் திக­திக்கு முன்பு நடாத்தி முடிக்­கலாம். அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் பிர­காரம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் ஆலோ­ச­னைக்­க­மை­வாக தேர்­தலை நடாத்­து­வ­தற்கு உரிய சூழலை ஏற்­ப­டுத்தி வழங்­கு­வது ஜனா­தி­ப­தியின் பொறுப்­பாகும். உயர் நீதி­மன்றின் தீர்­மா­னத்­தைப்­பெற்று தேர்­தலை நடாத்­து­வ­தற்­கான சூழலை அமைத்துத் தரு­மாறு ஜனா­தி­ப­தியைக் கோரி­யி­ருக்­கிறோம்.

மாகா­ண­சபைத் தேர்­தலை அக்­டோபர் மாதத்தில் நடாத்­து­வது எந்­த­வ­கை­யிலும் எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பாதிப்­பாக அமை­யாது. இரண்டு தேர்­தல்கள் மாத்­தி­ர­மல்ல. பல தேர்­தல்­களை குறு­கிய இடை­வெ­ளியில் நடாத்­து­வ­தற்கு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு தேவை­யான வளங்கள் இருக்­கின்­றன. முன்­னைய காலங்­க­ளிலும் ஒரு வருட காலத்­தினுள் பல தேர்­தல்கள் நடாத்­தப்­பட்­டி­ருப்­பதால் இது தொடர்பில் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்திக் கொள்ளத் தேவை­யில்லை.

ஜனா­தி­பதித் தேர்தல் நிச்­ச­ய­மாக நவம்பர் மாத இறு­தியில் அல்­லது டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடாத்­தப்­ப­டலாம் என தேர்­தல்கள் ஆணைக்­குழு நம்­பு­கி­றது. அத­ன­டிப்­ப­டையில் நவம்பர் மாதம் 16, 23, 30 அல்­லது டிசம்பர் 7 ஆம் திகதி ஆகிய சனிக்­கி­ழமை ஒன்றில் ஜனா­தி­பதித் தேர்­தலை நடாத்த முடியும்.

எந்­த­வொரு தேர்­த­லையும் உரிய காலத்தில் நடத்­தாது தாம­தப்­ப­டுத்­து­வது ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­னது என ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்­கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலை­வர்­க­ளுக்கு தேர்­தல்கள் ஆணைக்குழு பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளது’ என்றார்.

எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப் படாது நிராகரிக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னரான நடவடிக்கை கள் காரணமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் தாமதப்படுத் தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.