ஹஜ் யாத்திரிகர்கள் முகவர்களால் தெளிவூட்டப்பட வேண்டும்

1 853

ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக நாடெங்கும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் தயார் நிலையில் இருக்­கி­றார்கள். இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைச் சுமந்து கொண்டு கட்­டு­நா­யக்கா விமான நிலை­யத்­தி­லி­ருந்து நேற்று முன்­தினம் மாலை இரண்டு விமா­னங்கள் சவூதி அரே­பி­யாவின் ஜித்­தா­வுக்கு புறப்­பட்டுச் சென்­றன.

நேற்று முன்­தினம் இலங்­கை­யி­லி­ருந்து பய­ண­மான முதற் தொகுதி ஹஜ் யாத்­தி­ரிகர் குழுவில் 156 பய­ணிகள் அடங்­கி­யி­ருந்­தனர்.

சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 4000 ஹஜ் கோட்டா வழங்­கி­யி­ருந்­தது. ஆரம்­பத்தில் 3500 ஹஜ் கோட்­டாவே வழங்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் சவூதி மன்­ன­ரிடம் விடுத்த வேண்­டு­கோ­ளை­ய­டுத்து சில வாரங்­க­ளுக்கு முன்பு மேல­தி­க­மாக 500 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த வரு­டங்­களைப் போலல்­லாது இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டுகள் சுமு­க­மாக இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கடந்த வரு­டங்­களைப் போல் கோட்­டாவைப் பகிர்ந்து கொள்­வதில் ஹஜ் முக­வர்கள் சண்­டை­யிட்டுக் கொள்­ள­வில்லை. 500 மேல­திக கோட்­டாவைப் பகிர்­வ­திலும் எவ்­வித பிரச்­சி­னை­களும் ஏற்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக, முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­கெ­தி­ராக நாட்டில் சவால்கள் விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஹஜ் முக­வர்கள் ஹஜ் ஏற்­பா­டு­க­ளிலும், ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்­வ­திலும் முரண்­பட்டுக் கொள்­ளாமை சமூ­கத்தை ஆறுதல் படுத்­தி­யுள்­ளது.

நாடெங்­கி­லு­மி­ருந்து சுமார் 4000 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் வயது வித்­தி­யா­ச­மின்றி ஆண்கள், பெண்கள் என ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பியா நோக்கிச் செல்­வ­தற்கு கட்­டு­நா­யக்கா சர்­வ­தேச விமா­னத்தை வந்­த­டைந்த வண்­ண­முள்­ளனர். அவர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் முதற் தட­வை­யாக விமானப் பய­ணத்தை மேற்­கொள்­ப­வர்கள். வயோ­தி­பர்­களும் தொற்றா நோயான நீரி­ழிவு போன்ற நோய்­க­ளுக்கு உட்­பட்­ட­வர்­களும் இவர்­களில் அடங்­கு­கின்­றனர்.
அநே­க­மானோர் முதற்­த­ட­வை­யா­கவே விமான நிலை­யத்­துக்கு வருகை தரு­கின்­றனர். அவர்கள் விமானப் பய­ணத்தை எவ்­வாறு மேற்­கொள்­வது, விமான நிலை­யங்­களில் எவ்­வாறு நடந்து கொள்­வது என்­பது தொடர்பில் தெளி­வூட்­டப்­பட வேண்டும். இது ஹஜ் முக­வர்­க­ளி­னதும் ஹஜ் வழி­காட்­டி­க­ளி­னதும் பொறுப்­பாகும்.

கட்­டு­நா­யக்கா விமான நிலை­யத்தில் தொழு­கைக்கு உரிய நேரங்­களில் பல இடங்­களில் ஹஜ் பய­ணிகள் தொழு­கையை நிறை­வேற்­று­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இந்­நி­லைமை ஏனைய விமான பய­ணி­க­ளுக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­தலாம். தொழு­கைக்­கென விமான நிலை­யத்தில் முதலாம் மாடியில் பிரத்­தி­யேக இட­மொன்று ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஹஜ் பய­ணிகள் அவ்­வி­டத்­தையே தொழு­கைக்­காக பயன்­ப­டுத்த வேண்டும்.

அத்­தோடு வுழூ செய்­வ­தற்கும் இடம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. பய­ணிகள் சிறுநீர் கழிக்கும் இடங்­க­ளையும், கழி­வ­றை­க­ளையும் வுழூ செய்­வ­தற்குப் பயன்­ப­டுத்தக் கூடாது. விமான நிலையம் சர்­வ­தேச விமான நிலை­ய­மாகும். இவ்­வி­மான நிலையம் ஒரு சமூ­கத்­துக்கு மாத்­தி­ர­மா­ன­தல்ல. பல நாடு­களைச் சேர்ந்த பல்­லின பய­ணிகள் அங்கு வருகை தரு­வதை ஹஜ் பய­ணிகள் கருத்திற் கொள்ள வேண்டும்.

ஹஜ் முக­வர்­களும், ஹஜ் வழி­காட்­டி­களும் உரிய அறி­வு­றுத்­தல்­களை வழங்­கினால் மாத்­தி­ரமே ஹஜ் பய­ணி­க­ளிடம் இந்தப் பண்­பு­களை எதிர்­பார்க்க முடியும். குடி­ய­கல்வு படி­வங்­களை பய­ணிகள் நிரப்ப வேண்­டி­யுள்­ளது. போதிய கல்வி அறி­வற்ற ஹஜ் பய­ணிகள் இது விட­யத்தில் சிர­மங்­களை எதிர்­கொள்­ளலாம். ஹஜ் முக­வர்கள் உரிய படி­வங்­களை முன்­கூட்­டியே பெற்று படி­வங்­களைப் பூர்த்தி செய்து கைய­ளிப்­பது அசௌ­க­ரி­யங்­களைத் தவிர்ப்­ப­தாக அமையும்.

ஹஜ் பய­ணி­க­ளுடன் அதிக எண்­ணிக்­கை­யி­லானோர் விமான நிலை­யத்­துக்குள் பிர­வே­சிக்க முடி­யாது எண்­ணிக்கை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதனால் ஹஜ் பய­ணி­க­ளுடன் அதி­க­மானோர் விமான நிலை­யத்­துக்குப் பய­ணிப்­பது தவிர்க்­கப்­பட வேண்டும்.

நாடெங்­கி­லு­மி­ருந்து ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் தங்கி ஓய்­வெ­டுத்து தயா­ராகி விமான நிலையம் செல்­வ­தற்கு மினு­வாங்­கொடை மற்றும் மாபோலை பள்­ளி­வா­சல்­களில் ஏற்­பா­டுகள் இம்­மு­றையும் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்தப் பள்­ளி­வா­சல்­களை அசுத்தப்படுத்தி விடாது முறையாகப் பயன்படுத்திக் கொள்வது யாத்திரிகர்களின் கடமையாகும். அடுத்து வரும் வருடங்களில் ஹஜ் பயணத்தை மேலும் சட்டரீதியாக சீர்படுத்துவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹஜ் ஏற்பாடுகளுக்கென தனியான சட்டம் ஒன்று இயற்றிக் கொள்ளப்படவுள்ளது. அதற்கான சட்டவரைபு தற்போது தயாரான நிலையில் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த சட்டங்கள் மூலம் எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

vidivelli

1 Comment
  1. Mohamed says

    Haj operators all cheaters. Starting from end. First of all first with out vaccinations handing over the vaccine book. Then collecting extra money secondly joining the laddies with gents for maharam. Coming back abaya and cigarettes bringing back for business

Leave A Reply

Your email address will not be published.