அடுத்த வாரம் அமைச்சு பதவிகளை ஏற்கும் சாத்தியம்

0 657

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து உரு­வான அசா­தா­ரண நிலைமை கார­ண­மாக தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களைத் துறந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அடுத்த வாரம் மீண்டும் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்­க­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீ­டமும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீ­டமும் அவ­ச­ர­மா­கக்­கூடி பத­வி­யேற்கும் நாளை தீர்­மா­னிக்­க­வுள்­ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று தனிப்­பட்ட விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு லண்டன் பய­ண­மா­கி­யுள்ளார்.

ரவூப் ஹக்கீம் எதிர்­வரும் 20 ஆம் திகதி நாடு திரும்­ப­வுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீடம் எதிர்­வரும் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை ஒன்­று­கூ­ட­வுள்­ள­தாக அக்­கட்­சியின் பிரதி தவி­சாளர் எம்.நயீ­முல்லாஹ் ‘விடி­வெள்ளி’ க்குத் தெரி­வித்தார்.

முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் அமைச்­சுப்­ப­த­வியைப் பொறுப்­பேற்­ப­தில்லை என உறு­தி­யாகத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்ற நிலை­யிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உயர்­பீ­டத்தைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்­மா­னத்தை எட்ட வேண்­டி­யுள்­ளது.

நாடு தழு­விய ரீதியில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் மற்றும் கல்­முனை உப பிர­தேச செய­லகம் என்­பன வற்­றுக்கு தீர்­வுகள் வழங்­காத நிலையில் தன்னால் அமைச்சுப் பொறுப்­பினை ஏற்க முடி­யாது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தவி­சாளர் எம்.நயீ­முல்­லாஹ்­விடம் வின­வி­ய­போது ‘பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் முடிவு கட்­சியின் தீர்­மா­ன­மல்ல. என்­றாலும் அர­சியல் உயர்­பீடம் ஒன்­று­கூடி தீர்­மானம் எடுக்கும். பத­வி­யேற்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்டால் எதிர்­வரும் 22 ஆம் திகதி கட்­சியின் இரா­ஜி­னாமா செய்து கொண்ட முன்னாள் அமைச்­சர்கள் பத­வி­யேற்­பார்கள்.

கல்­முனை, சாய்ந்­த­ம­ருது, மரு­த­முனை பகு­தி­களைச் சேர்ந்த உயர்­பீட உறுப்­பி­னர்­களும் இருக்­கி­றார்கள். அவர்­க­ளது கருத்­து­களும் பெற்றுக் கொள்­ளப்­படும்’ என்றார்.

இதே­வேளை, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியைச் சேர்ந்த அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை மீளப்­பெற்றுக் கொள்­ள­வுள்­ளனர். இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் உயர்­பீடம் இன்னும் சில தினங்­களில் ஒன்­று­கூடி ஆரா­ய­வுள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எஸ்.சுபைதீனைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் முற்­றுப்­பெற்று அவர் குற்­ற­மற்­றவர் என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. இதனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க பகி­ரங்க கூட்­ட­மொன்­றிலும் தெரி­வித்­துள்ளார். அதனால் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யு­தீனும் அமைச்சுப் பொறுப்­பினை மீளப் பெற்றுக் கொள்வார்.

அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட்­டா­கவே ஒன்­றாக பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள். எந்த திக­தியில் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வது என்­பது தொடர்பில் கட்­சியின் உயர்­பீடம் தீர்­மா­னிக்கும். இன்னும் சில தினங்­களில் உயர்­பீடம் கூட­வுள்­ளது என்றார்.

இதே­வேளை, அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்ள அனை­வரும் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கி­றார்கள். இதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. இத்­தீர்­மா­னத்­துக்கு சிலர் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­தாக கூறு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்­துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனும் அமைச்சுப் பத­வி­யினை மீளப் பொறுப்­பேற்க வுள்ளார். அவர் குற்­ற­மற்­றவர் என பொலிஸ் அறிக்கை தெரி­விக்­கி­றது. இதன்­படி அவர் அமைச்சுப் பத­வியை ஏற்க முடியும் என பிர­த­மரும் தெரி­வித்­துள்ளார் எனவும் அவர் கூறி­யுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 9 முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இவர்­களில் 4 அமைச்­சர்­களும், 4 இரா­ஜாங்க அமைச்­சர்­களும், ஒரு பிர­தி­ய­மைச்­சரும் அடங்­கு­கின்­றனர்.

இவர்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசிமும், எம்.எச்.ஏ.ஹலீமும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க தங்களது முன்னைய அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன், எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரே அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டியவர்களாவர்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.