உறுதியான தலைமைத்துவமும் மக்களின் துணிவுமே சதிப் புரட்சியை தோற்கடித்தன

இலங்கையின் சமகால விவகாரங்களில் அக்கறையுடன் உள்ளோம் : இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார்

0 1,780

துருக்­கியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட்டு இன்­றுடன் மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டும் ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள நிலை­மை­களை கையாள்­வதில் முஸ்லிம் நாடு­களின் நகர்­வுகள் குறித்தும் இலங்­கைக்­கான துருக்கி தூதுவர் துன்கா ஒஸ்­து­ஹதார் விடிவெ ள்ளிக்கு வழங்கி செவ்வி:

நேர்­காணல்:
எம்.பி.எம். பைறூஸ்

Qதுருக்­கியில் 2016 இல் இடம்­பெற்ற சதிப் புரட்­சியின் பின்­ன­ணியை சற்று விளக்க முடி­யுமா?

துருக்­கியில் ஜன­நா­யக ரீதி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட ஆட்­சியைக் கவிழ்த்து அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக 2016 ஜூலை 15 ஆம் திகதி சதிப் புரட்சி ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்த சதிப் புரட்­சியின் பின்னால் இருப்­பது FETO என்­ற­ழைக்­கப்­படும் தீவி­ர­வாத குலான் இயக்­க­மாகும். கடந்த 20 வரு­டங்­க­ளாக அமெ­ரிக்­காவில் வாழ்ந்து வரும் துருக்­கிய பிர­சா­ர­க­ரான பத்­ஹுல்லா குலான் என்­ப­வரே இதன் பின்­ன­ணியில் உள்ளார். இரா­ணு­வத்­தி­னுள்ளும் அரச இயந்­தி­ரத்­தி­னுள்ளும் இர­க­சி­ய­மாக ஊடு­ரு­வி­யி­ருந்த குலான் இயக்­கத்தின் உறுப்­பி­னர்­களே இந்த சதிப் புரட்­சியை முன்­னெ­டுத்­தனர். இந்தப் புரட்­சி­யி­லி­ருந்து நாட்டைப் பாது­காப்­ப­தற்­காக மக்கள் வீதிக்கு இறங்கிப் போரா­டினர். புரட்­சியை மேற்­கொண்­ட­வர்­களின் கொடூ­ர­மான துப்­பாக்கிச் சூட்டில் சிக்கி 251 அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர். நூற்றுக் கணக்­கானோர் காய­ம­டைந்­தனர். அன்­றி­ரவு பாரா­ளு­மன்றம், ஜனா­தி­பதி கட்­டிடத் தொகுதி, பொலிஸ் தலை­மை­யகம் மீதும் குண்­டுகள் வீசப்­பட்­டன. அரச ஊட­கங்­க­ளையும் ஆயுத முனையில் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.

துருக்கி குடி­ய­ரசை தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவந்து ஆட்சி செய்­வதும் அதன் ஊடாக உலக நாடு­களில் ஆதிக்கம் செலுத்­து­வ­துமே அவர்­க­ளது நோக்­க­மாகும். இந்த இயக்­கத்தின் பின்­ன­ணியில் துருக்­கியின் எழுச்­சியை விரும்­பாத வேறு சில நாடு­களின் மறை­க­ரங்­களும் உள்­ளன.

Qஇந்த சதிப் புரட்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது எவ்­வாறு? இந்த சதிப் புரட்­சியை வெற்றி கொண்­டதில் துருக்கி ஜனா­தி­பதி அர்­து­கானின் பங்­க­ளிப்பு என்ன?

ஜனா­தி­பதி ரஜப் தையிப் அர்­து­கானின் உறு­தி­யான தலை­மைத்­துவம், சம­யோ­சி­த­மான செயற்­பாடு மற்றும் எமது நாட்டு மக்­களின் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­கான துணிவு, அர்ப்­ப­ணிப்பு ஆகி­ய­னவே இந்த சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட பிர­தான கார­ண­மாகும். சதிப் புரட்சி ஆரம்­பிக்­கப்­பட்­ட­வு­ட­னேயே நேரடித் தொலை­பேசி அழைப்பின் ஊடாக தொலைக்­காட்சி சேவை ஒன்றில் தோன்­றிய ஜனா­தி­பதி அர்­துகான், உட­ன­டி­யா­கவே இந்த சதிக்கு எதி­ராக வீதியில் இறங்கிப் போரா­டு­மாறு மக்­க­ளிடம் அழைப்­பு­வி­டுத்தார். அவ­ரது அழைப்­பை­யேற்று மக்கள் வீதியில் இறங்­கினர். சதி­கா­ரர்­களின் துப்­பாக்கிக் குண்­டு­க­ளுக்கு மக்கள் அஞ்­ச­வில்லை. இரா­ணுவ தாங்­கி­க­ளுக்கு முன்னால் படுத்து தமது வீரத்தை மக்கள் நிரூ­பித்­தனர். வீதிக்கு இறங்­கிய ஆயிரக் கணக்­கான மக்­களை எதிர்த்து நிற்க குலான் ஆத­ரவு இரா­ணு­வத்தால் முடி­ய­வில்லை. இவ்­வாறு மக்கள் வீதிக்கு வரு­வார்கள் என்­பதை அவர்கள் எதிர்­பார்த்­தி­ருக்­க­வு­மில்லை.

உண்­மையில் இந்த சதிப் புரட்­சியில் பங்­கேற்­றது இரா­ணு­வத்­தினுள் இருந்த ஒரு சிறு குழு­வி­ன­ரே­யாவர். இதன் கார­ண­மாக பெரும்­பான்­மை­யான இரா­ணு­வத்­தி­னரின் ஒத்­து­ழைப்­புடன் அவர்­களை மடக்கிப் பிடித்து தோற்­க­டிக்க முடிந்­தது.

Qஇந்த குலான் இயக்கம் எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது? நாட்டின் அரச இயந்­தி­ரத்­துக்குள் இலட்சக் கணக்­கான அதன் உறுப்­பி­னர்­களால் ஊடு­ருவ முடிந்­தது எவ்­வாறு? அதனை சற்று விளக்க முடி­யுமா?

இது எடுத்த எடுப்­பி­லேயே ஆட்­சிக்கு வரு­கின்ற திட்­ட­மல்ல. மாறாக சுமார் நான்கு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் வரை­யப்­பட்ட திட்­ட­மாகும். தமது ஆத­ர­வா­ளர்­களை சிறு வய­தி­லி­ருந்தே உரு­வாக்கி அவர்­களை அரச இந்­தி­ரத்­தினுள் நுழையச் செய்­வது வரை­யான மிகப் பெரிய திட்டம். இதற்­காக அவர்கள் கையாண்­டது கவர்ச்­சி­க­ர­மான கல்வித் திட்­டத்­தை­யாகும். இதற்­காக துருக்கி முழு­வதும் ஆயிரக்கணக்­கான பாட­சா­லை­களை நிறு­வி­னார்கள். அதா­வது பாலர் பாட­சாலை முதல் பல்­க­லைக்­க­ழகம் வரை கல்வி வழங்கி தொழில்­வாய்ப்­பையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தார்கள். கல்வி கற்கும் காலத்தில் மாண­வர்­க­ளுக்கு புல­மைப்­ப­ரி­சில்­க­ளையும் வழங்­கி­னார்கள். இத­னூ­டாக மாண­வர்­க­ளுக்கு கல்வி என்ற போர்­வையில் பயிற்­சி­களை வழங்­கி­னார்கள். இதனால் அவர்­க­ளது பாட­சா­லை­களில் கல்வி கற்ற மாண­வர்கள் எந்­த­விதக் கேள்­வி­க­ளையும் கேட்­காது பத்­ஹுல்லா குலானின் கட்­ட­ளைக்கு அடி­ப­ணி­கின்­ற­வர்­க­ளா­கவே செயற்­பட்­டார்கள். துருக்­கியில் மாத்­தி­ர­மன்றி சுமார் 160 நாடு­களில் அவர்­களால் பாட­சா­லைகள் நடாத்­தப்­பட்­டன.

தமது கொள்­கை­களை பரப்­பு­வ­தற்கு குலான் மதத்தை ஒரு போர்­வை­யாக பயன்­ப­டுத்­தினார். இஸ்­லா­மிய மத­கு­ரு­வாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­தி­னாலும் அவர் இஸ்­லா­மியப் பிர­சா­ரத்தை மேற்­கொள்­ள­வில்லை. எதேச்­சா­தி­கார அர­சாங்கம் ஒன்றை துருக்­கியில் நிறு­வு­வதே அவ­ரது நோக்­க­மா­க­வி­ருந்­தது. அதற்­கான பொரு­ளா­தாரப் பலத்­தையும் அவர்கள் கொண்­டி­ருந்­தார்கள். அவர்­க­ளது சொத்து மதிப்பு 50 மில்­லியன் டொலர்கள் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Qதுருக்­கியில் சதிப்­பு­ரட்சி நடந்த அன்­றைய இரவு, அதன் வெற்­றியைக் கொண்­டா­டு­வ­தற்­காக ஒரு குழு­வினர் இலங்­கையில் தயா­ரா­க­வி­ருந்­த­தாக சில தக­வல்கள் வெளி­வந்­தன. இது உண்­மையா?

இருக்­கலாம். நாம் அதுபற்றி அறி­ய­வில்லை. ஆனால் இவ்­வாறு உலகின் பல நாடு­க­ளிலும் உள்ள அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்கள் சதிப்புரட்சி வெற்றி பெற்ற தக­வலைக் கொண்­டாட காத்­தி­ருந்­தனர். எனினும் அது நடக்­க­வில்லை.
இலங்­கை­யிலும் இந்த FETO இயக்கம் செயற்­பட்டு வந்­தது. பிர­ப­ல­மான தனியார் கல்வி நிறு­வ­னங்­களை நிறு­வியும் மதங்­க­ளுக்­கி­டை­யி­லான உரை­யாடல் என்ற போர்­வை­யிலும் அவர்கள் செயற்­பட்டு வந்­தனர். இவர்­க­ளது செயற்­பா­டுகள் பற்றி நாம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு தெரி­யப்­ப­டுத்­தினோம். ஏனைய நாடு­க­ளிலும் இந்த அமைப்­பி­னரின் செயற்­பா­டு­களை முடக்­கு­வ­தற்­காக நாம் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளோம்.

Qதுருக்கி சதிப்­பு­ரட்­சியின் பின்னர் இடம்­பெற்ற கைது­க­ளின்­போது மனித உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச அமைப்­புகள் குற்­றம்­சாட்­டு­கின்­ற­னவே?

அவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் அவை ஆதா­ர­மற்­றவை. ஆரம்­பத்தில் கைதுகள் சந்­தே­கத்தின் பேரி­லேயே இடம்­பெ­று­கின்­றன. பின்னர் உரிய சட்ட நிறு­வ­னங்கள் ஊடாக விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­மற்றோர் விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். FETO அமைப்பின் தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­தாக ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்­களே தண்­டிக்­கப்­ப­டு­கின்­றனர்.

Qஇந்த இடத்தில் இலங்­கை­யுடன் தொடர்­பு­பட்ட சில விட­யங்­க­ளையும் உங்­க­ளோடு பேச வேண்­டி­யுள்­ளது. ஏப்ரல் 21 தாக்­கு­தலின் பின்னர் இலங்­கை­யி­லுள்ள ஓ.ஐ.சி. அங்­கத்­துவ நாடு­களின் தூது­வர்கள் எடுத்த நட­வ­டிக்­கைகள் என்ன?

தாக்­குதல் நடந்­த­வு­ட­னேயே நாம் முதலில் கத்­தோ­லிக்கப் பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்­களைச் சந்­தித்து எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்தோம். இதன்­போது அவர் இந்தத் தாக்­கு­த­லுடன் இஸ்­லாத்­திற்கோ இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கோ எந்­த­வித சம்­பந்­த­மு­மில்லை. இது வேறு ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழேயே நடத்­தப்­பட்­டுள்­ளது என அவர் எம்­மிடம் கூறினார். அவ­ரது இந்தக் கருத்து மிகவும் விவே­க­மா­ன­தாகும்.

பின்னர் ஜனா­தி­பதி, பிர­தமர் ஆகியோர் இலங்­கை­யி­லுள்ள சகல வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளையும் அழைத்து நாட்டின் பாது­காப்பு நிலை­வ­ரங்கள் தொடர்பில் அறி­வு­றுத்­தி­னார்கள். இதன்­போது நாம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அச்­சு­றுத்­தல்கள் தொடர்பில் அவர்­களின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றோம்.

மே 13 இல் கம்­பஹா மற்றும் குரு­நாகல் மாவட்­டங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்ட பின்னர், ஓ.ஐ.சி. நாடு­களின் தூது­வர்­க­ளாக நாம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ஆகி­யோரைச் சந்­தித்து முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறு கோரினோம். இந்த வன்­மு­றைகள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்­து­கிறோம் என்­பதை அவர்­க­ளுக்கு எடுத்துக் கூறினோம். நாம் இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்­களில் தலை­யிட முடி­யாது என்ற போதிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறும் வெறுப்புப் பேச்சை கட்­டுப்­ப­டுத்­து­மாறும் கோரினோம்.

இதன் பிற்­பாடு இலங்­கை­யி­லுள்ள இஸ்­லா­மிய நாடு­களின் தூது­வர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளி­யிட்­ட­துடன் ஜித்­தா­வி­லுள்ள ஓ.ஐ.சி. தலை­மை­ய­கமும் பிறி­தொரு அறிக்­கையை வெளி­யிட்­டது. பின்னர் ஜெனீ­வா­வி­லுள்ள மனித உரி­மைகள் ஆணை­யகம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் ஆகி­ய­னவும் இது குறித்து கண்­டன அறிக்­கை­களை வெளி­யிட்­டன.

Qநீங்கள் இவ்­வ­ளவு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ள­தாக கூறி­னாலும், இன­வா­தத்­தையும் வன்­மு­றை­யையும் கட்­டுப்­ப­டுத்­து­வதில் இஸ்­லா­மிய நாடுகள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு வழங்­கிய அழுத்தம் போதாது என முஸ்­லிம்கள் கரு­து­கி­றார்­களே?

இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் அவ்­வா­றா­ன­தொரு அபிப்­பி­ராயம் உள்­ளது என்­பதை நாம் அறிவோம். இலங்­கையில் நடக்­கின்ற விட­யங்­களை நாம் மிக உன்­னிப்­பாக அவ­தா­னித்து வரு­கிறோம். ஆனாலும் இது அவ­ச­ரப்­பட்டு பிரம்பை எடுத்து அடிப்­பது போன்ற விவ­காரம் அல்ல. மாறாக சர்­வ­தேச அர­சியல், நாடு­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள், இரா­ஜ­தந்­திரம் என்­ப­வற்­றுடன் தொடர்­பு­பட்­டது. அதனை மிகவும் கவ­ன­மா­கவே கையாள வேண்டும்.

இந்த விட­யத்தில் ஓ.ஐ.சி. தலை­யிட்­டமை என்­பது சாதா­ர­ண­மா­ன­தல்ல. மொத்­த­மாக 1.5 பில்­லியன் முஸ்­லிம்­களை சனத்­தொ­கை­யாகக் கொண்ட 57 இஸ்­லா­மிய நாடு­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற அமைப்பு அது. அதன் அக்­கறை இது­வி­ட­யத்தில் நிச்­ச­ய­மாக இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தை வழங்­கி­யி­ருக்கும் என நம்­பு­கிறேன்.

Qஇலங்­கையில் அடிப்­ப­டை­வா­தத்தை வளர்க்­கவும் ஊட­கங்­களை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும் துருக்­கிய அர­சாங்கம் 40 மில்­லியன் டொலர் நிதியை செல­விட்­டுள்­ள­தாக அண்­மையில் ஞான­சார தேரர் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தாரே?

இது உண்­மைக்குப் புறம்­ப­மான குற்­றச்­சாட்­டாகும். இது குறித்து உட­ன­டி­யா­கவே ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்டு நாம் தெளி­வு­களை வழங்­கி­யி­ருந்தோம்.

துருக்கி இலங்­கையின் மிக நெருங்­கிய நட்பு நாடாகும். அந்த வகையில் 2006 முதல் இன்று வரை சுமார் 20 க்கும் மேற்­பட்ட திட்­டங்­களை இலங்­கையில் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்ளோம். தெற்­கிலே வெலி­கம பிர­தே­சத்தில் சுனா­மியால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உதவும் வகையில் 450 வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுத்­தமை, மன்­னாரில் 100 வீடு­களை நிர்­மா­ணித்து துருக்கி- – இலங்கை நட்­பு­றவு கிரா­மத்தை தோற்­று­வித்­தமை, யாழ்ப்­பா­ணத்தில் வறிய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு கற்றல் உப­க­ர­ணங்­களை வழங்­கி­யமை, திரு­கோ­ண­ம­லையில் ஏழை மீன­வர்­க­ளுக்­கான தோணிகள், வலைகள், நீர் பம்­பிகள் போன்­ற­வற்றை அன்­ப­ளித்­தமை, அம்­பா­றையில் 3780 குடும்­பங்கள் பயன்­பெறும் வகையில் பாரிய நீர்த்­தாங்­கியை நிர்­மா­ணிக்க உத­வி­யமை, ஊட­க­வி­ய­லா­ளர்­களை வலு­வூட்ட மடிக்­க­ணி­னிகள் மற்றும் கம­ராக்கள் வழங்­கி­யமை, 20 க்கு மேற்­பட்ட மும்­மொழி ஊட­க­வி­ய­லா­ளர்­களை துருக்­கிக்கு அனுப்பி பயிற்­சி­களை வழங்­கி­யமை போன்­ற­வற்றை இங்கு சுட்­டிக்­காட்ட முடியும்.

இந்த உத­விகள் அனைத்தும் இலங்கையில் வாழ்கின்ற சகல இன மக்களையும் சென்றடையும் வகையிலேயே வழங்கப்பட்டுள்ளன. தனியாக ஓர் இனத்துக்கு மாத்திரம் நாம் உதவி செய்வதில்லை. உலகின் ஏனைய நாடுகளுக்கும் நாம் அவ்வாறுதான் உதவுகிறோம்.

Qஉலகளாவிய ரீதியில் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படுகின்ற போது முந்திக் கொண்டு உதவி செய்கின்ற நாடாக துருக்கி விளங்குகிறது. இந்த உதவிகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன?

உண்மைதான். 2018 ஆம் ஆண்டு மாத்திரம் துருக்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவிகளுக்காகச் செலவிட்டுள்ளது. துருக்கியில் 4 மில்லியன் வெளிநாட்டு அகதிகள் வாழ்கிறார்கள். இவர்களில் 3.5 மில்லியன் பேர் சிரிய அகதிகள். எஞ்சியோர் ஈராக், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள். இவர்களுக்குத் தேவையான உணவு, கல்வி, சுகாதாரம், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் துருக்கி இலவசமாக வழங்குகிறது.

அதேபோன்றுதான் வறுமையில் வாடுகின்ற ஆபிரிக்க நாடுகள் முதல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா மக்கள் வரை உலகின் சகல மூலைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துருக்கி தனது மனிதாபிமானக் கதவுகளை திறந்து கொடுத்துள்ளது. நாம் முஸ்லிம் நாடுகளுக்கு மாத்திரம் உதவி செய்வதில்லை. தேவையுள்ள மக்களுக்கு உரிய நேரத்தில் உரிய உதவிகளை வழங்குவதே எமது கொள்கையாகும்.

vidvelli

Leave A Reply

Your email address will not be published.