பதவியேற்பு தீர்மானத்தில் முஸ்லிம் எம்.பி.க்களிடம் ஒற்றுமை தேவை

0 849

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தாம் வகித்த அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்தும் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி இரா­ஜி­னாமா செய்து கொண்­டனர்.
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் அமைச்சுப் பத­வி­களைத் துறப்­ப­தற்கு முன்பு ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தியே இந்தத் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டனர். பிர­தமர் மற்றும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­க­ளு­டனும் இது பற்றிக் கலந்­து­ரை­யா­டியே இறுதித் தீர்­மா­னத்தை எடுத்­தனர்.

ஏப்ரல்–21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அது குறித்த விசா­ர­ணை­களை சுயா­தீ­ன­மாக நடத்­த­வி­டாது தடுக்க அமைச்­சர்கள் சிலர் தடை­யாக உள்­ள­தா­கவும் இந்த செயற்­பா­டு­களில் முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் தொடர்­புகள் இருப்­ப­தா­கவும் ஒரு சில அமைப்­புகள் குற்றம் சுமத்தி வரு­வ­துடன் அதனை கார­ண­மாகக் கொண்டு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் சூழ்ச்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதற்கு இட­ம­ளிக்­காது சுயா­தீ­ன­மாக உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாம் பதவி துறந்தோம்’ என பதவி துறந்த அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­தி­ருந்தார்.

கண்டி தலதா மாளிகை வளா­கத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் மேற்­கொண்ட சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒரு பதற்­ற­மான நிலை­யினைத் தோற்­று­வித்­தது. இந்­நி­லையில் சமூ­கத்தைப் பாது­காப்­ப­தற்­காக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­பது பேர் தங்கள் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர்.

இவர்­களில் 4 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள் 4 இரா­ஜாங்க அமைச்­சர்கள், ஒரு பிர­தி­ய­மைச்சர் அடங்­குவர். சமூக நலன்­க­ருதி, சமூக பாது­காப்பு கருதி முஸ்லிம் அமைச்­சர்கள் அனை­வரும் கூட்­டாகப் பதவி வில­கி­யமை பல­ராலும் பாராட்­டப்­பட்­டது முஸ்­லிம்­களின் ஒற்­றுமை மெச்­சப்­பட்­டது.
பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்பு அற்ற அப்­பாவி முஸ்­லிம்கள் அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் ஒரு மாத காலத்­துக்குள் நிறை­வுற்று, குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பற்­ற­வர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கோரி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கோரிக்­கையை ஏற்று ஐ.தே.க. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசிமும், எம்.எச்.ஏ. ஹலீமும் கடந்த மாதம் தங்கள் முன்­னைய அமைச்சுப் பொறுப்­பு­களைப் பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர். அத­னை­ய­டுத்து ஒன்­று­கூ­டிய ஏனைய அமைச்சுப் பத­வி­களைத் துறந்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த 11 ஆம் திகதி தங்கள் முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்­றுக்­கொள்ளத் தீர்­மா­னித்­தனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், பைசல்­காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.அமீர்­அலி, அலி­சாஹிர் மௌலானா, அப்­துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.

இந்­நி­லையில் முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­நிதி எச்.எம்.எம்.ஹரீஸ் மீண்டும் பத­வி­யேற்­ப­தில்லை என உறு­தி­யாகக் கூறி­யுள்ளார். நாடு தழு­விய ரீதியில் முஸ்­லிம்­களின் பிரச்­சினை மற்றும் குறிப்­பாக கிழக்கு முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்கம் எவ்­வித தீர்­வு­க­ளையும் வழங்­காத நிலையில் தன்னால் அமைச்சுப் பொறுப்­பினை மீளப்­பெற முடி­யாது. பெற­வி­ரும்­ப­வில்லை என்று தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் அமைச்சுப் பொறுப்­பு­களை மீளப்­பெ­று­வது தொடர்பில் கட்­சியின் உயர் பீடத்தின் ஆலோ­ச­னையைப் பெற­வுள்­ளது. இதே­வேளை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்­ப­தற்கு அவ­ச­ரப்­பட மாட்டோம் எனத் தெரி­வித்­துள்­ளது.
தேர்தல் ஒன்று அண்­மித்­துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் உட­ன­டி­யாக தீர்­மானம் ஒன்­றினை எட்ட முடி­யாத நிலையில் இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்ட போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் காணப்­பட்ட ஒற்றுமையினை இன்று காண முடியாதுள்ளது. இருவர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டார்கள். ஒருவர் அமைச்சுப் பதவி வேண்டாம் என்கிறார். ஒரு சாரார் அவசரப்பட மாட்டோம் என்கிறார்கள். உயர் பீடத்தின் ஆலோசனை பெற வேண்டும் என்கிறார்கள்.

மீண்டும் முஸ்லிம் எம்.பிக்கள் இழுபறி நிலையில். இவ்வாறான நிலைமை சமூகத்தைப் பாதுகாக்காது. எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தத் தீர்வென்றாலும் உறுதியாக இருக்கவேண்டும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.