அரபுக் கல்லூரி விடயத்தில் சட்டத்தை மீற வேண்டாம்

தேரர்களிடம் பொலிஸார் கோரிக்கை

0 2,477

அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் ஏதும் பிரச்­சி­னைகள் காணப்­பட்டால் சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வேண்டும் என்றும் நிட்­டம்­புவ பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

பஸ்­யால எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூரி அப்­பி­ர­தே­சத்தில் இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மையை இல்­லாமற் செய்­துள்­ள­தாகக் கூறி அரபுக் கல்­லூ­ரிக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிறுவி அதில் ஒரு பௌத்த பிக்­கு­வுக்கும் மற்றும் சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கும் இடம் வழங்­கு­மாறு தேரர்­க­ளாலும் பிர­தேச சிங்­க­ள­வர்­க­ளாலும் விடுக்­கப்­பட்ட அழுத்­தங்­க­ளுக்கு பொலி­ஸா­ரினால் தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் இரு தரப்­பி­ன­ரையும் நிட்­டம்­புவ பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்த பொலிஸ் நிலைய தலைமை அதி­காரி சம­ரசம் செய்து வைத்­துள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை எல்­ல­ர­முல்ல சபீலுர் ரசாத் அர­புக்­கல்­லூ­ரிக்கு விஜயம் மேற்­கொண்ட நிட்­டம்­புவ பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்­ப­தி­காரி அரபுக் கல்­லூ­ரியின் நிர்­வா­கத்­தி­னரைச் சந்­தித்து விப­ரங்­களைக் கேட்­ட­றிந்தார்.

அன்­றைய தினம் மாலை சம்­பந்­தப்­பட்ட கலல்­பிட்­டிய தாது­கன்த பன்­சலை தேர­ரையும் மற்றும் சில­ரையும் நிட்­டம்­புவ பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­தி­ருந்தார். அரபுக் கல்­லூ­ரியின் நிர்­வா­கி­களும் அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இக்­கூட்டம் தொடர்பில் அரபுக் கல்­லூ­ரியின் அதிபர் எம்.ஐ.எம். சுஹைப் (தீனி) கருத்து தெரி­விக்­கையில்;

‘நாங்கள் மத்­ர­ஸாவில் போதிக்­கப்­படும் விட­யங்கள் தொடர்பில் விளக்­க­ம­ளித்தோம். குறிப்­பிட்ட தேரர் அர­புக்­கல்­லூ­ரியின் பதிவு தொடர்­பிலே சந்­தேகம் கொள்­வ­தாகத் தெரி­வித்தார். அதன் பின்பு பதிவு மேற்­கொண்­டி­ருப்­ப­தற்­கான அத்­தாட்­சிகள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

குருமார் உட்­பட்ட குழு­வி­ன­ருக்கு பொலிஸார் அறி­வு­ரை­களை வழங்­கி­னார்கள். அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் ஏதும் பிரச்­சி­னைகள் காணப்­பட்டால் சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வேண்டும் என்றும் நிட்­டம்­புவ பொலிஸார் வேண்­டிக்­கொண்­டனர்.
எல்­ல­ர­முல்ல சபீலுர் ரசாத் அரபுக் கல்­லூரி சர்ச்சை பொலி­ஸாரால் சுமு­க­மாகத் தீர்த்து வைக்­கப்­பட்­டது என்றார்.

1993 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த அரபுக் கல்­லூரி 2008 இல் திஹா­ரி­யி­லி­ருந்து பஸ்­யால எல்­ல­ர­முல்­லைக்கு இட­மாற்றம் செய்­யப்­பட்­டது. இக்கல்லூரியில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 67 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

vidivelli 

 

 

Leave A Reply

Your email address will not be published.